சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் என்பது ஒருவர் இறந்த பிறகு, அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் யார் என்பதை சட்டரீதியாக உறுதிப்படுத்தும் ஆவணம் ஆகும். பொதுவாக, ஒருவர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்தினர் அனைவரும் அவருடைய வாரிசுகள் தான் என்று தோன்றலாம். ஆனால், முதன்மை வாரிசு யார் என்பது உட்பட பல விஷயங்களை சட்டப்படி தீர்மானிப்பதற்கு இந்த ஆவணம் அவசியாகும். இறந்தவருக்கும் குடும்பத்தினருக்கும் இடையிலான உறவை சட்டப்படி நிறுவும் முக்கியமான ஆவணமாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆவணம், இறந்தவரின் சொத்துகள் யாருக்கு உரிமையானது என்பதை தீர்மானிப்பதற்கு அவசியமானது. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் பிற நிதிச் சொத்துகளின் உரிமையை சட்டப்பூர்வ வாரிசுகள் பெறுவதற்கு இந்த ஆவனம் அவசியம்.


சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழின் பயன்பாடுகள்
சட்ட வாரிசு சான்றிதழ் பல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.  இறந்தவரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அவர்களின் வாரிசுகளுக்கு மாற்றுவதற்கு இந்த ஆவணம் அவசியம் என்றாலும், காப்பீடு மற்றும் பிற நிதி நன்மைகளை கோருவதற்கும் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் தேவை.


இறந்தவர் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவராக இருந்தால், குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு வாரிசு சான்றிதழ் தேவை. வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை போன்ற அரசாங்க நிலுவைத் தொகைகளைப் பெறுவதற்கு வாரிசு சான்றிதழ் தேவை.


வேலை பார்த்தவராக இருந்தால், சம்பள பாக்கியை கோருவதற்கும், இறந்தவர் அரசு வேலையில் இருந்தால், அவரது வேலையை குடும்பத்தில் யாருக்கு கொடுப்பது (நியமனங்கள் அடிப்படையில் வேலைவாய்ப்பு)என்பதை முடிவு செய்ய வாரிசு சான்றிதழ் அவசியம். 


மேலும் படிக்க | ரிசர்வ் வங்கி விதித்த கடும் அபராதத்தால் ஐசிஐசிஐ & யெஸ் வங்கிகளுக்கு என்ன பாதிப்பு?


சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழுக்கு யார் விண்ணப்பிக்கலாம்?


பொதுவாக சட்டப்பூர்வ வாரிசுகளாக அங்கீகரிக்கப்படுபவர்கள் சில வகைகளில் பிரிக்கப்படுகின்றனர். 


சட்டப்பூர்வ வாரிசுகள்


இறந்தவரின் மனைவி/கணவர்
இறந்தவரின் குழந்தைகள் (தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் உட்பட).
இறந்தவரின் பெற்றோர்.


இந்த முதல்நிலை வாரிசுகள் யாரும் இல்லாத நிலையில், இரண்டாம் நிலை வாரிசுகள் சொத்துரிமை கோருவதற்காக வாரிசு சான்றிதழைப் பெற வேண்டும். இந்து வாரிசு சட்டத்தின்படி ஒருவரின் இரண்டாம் கட்ட வாரிசுகள் யார் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.


இறந்தவரின் பேரக்குழந்தைகள்
இறந்தவரின் கொள்ளுப் பேரப்பிள்ளைகள்
இறந்தவரின் சகோதர சகோதரிகள்
இறந்தவரின் பிற உறவினர்கள்


சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழைப் பெறுவதற்கான நடைமுறைகளை தெரிந்துக் கொள்வோம்.


சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழைப் பெறுவதற்காக வாரிசுகள், மாவட்ட நீதிமன்றம் அல்லது தாலுகா அலுவலகத்தை அணுகி முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.


தேவைப்படும் ஆவணங்கள்: இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், அடையாளச் சான்றுகள், முகவரிச் சான்றுகள், புகைப்படம் தேவை. அத்துடன், சட்டப்பூர்வ வாரிசுகளின் அடையாளச் சான்றுகள் (ஆதார், ரேஷன் அட்டை) முகவரி, புகைப்படம் ஆகியவை அவசியம்.


சான்றிதழ்கள் பரிசீலனை


விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு, வாரிசு சான்றிதழ் வழங்கப்படும். சரிபார்ப்பு நடைமுறைகளுக்குப் பிறகு, சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதற்காக ஒரு குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். சில சமயங்களில் அபிடவிட் எனப்படும் நீதித்துறை அல்லாத முத்திரைத் தாளில் சுய உறுதிமொழிப் பத்திரம் தேவையாக இருக்கும். 20 ரூபாய் முத்திரைத் தாளில் இந்த உறுதிமொழி தரப்பட வேண்டும்.


மேலும் படிக்க | திருச்சி மலைக்கோட்டை உச்சியில் டவர் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ