ரிசர்வ் வங்கி விதித்த கடும் அபராதத்தால் ஐசிஐசிஐ & யெஸ் வங்கிகளுக்கு என்ன பாதிப்பு?

RBI Penalty: பெரிய வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி கடும் நடவடிக்கை எடுத்துள்ளது... இந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுமா தெரிந்துக் கொள்வோம்...
 

ICICI and YES Bank Penalised: தனியார் துறை வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி மற்றும் யெஸ் வங்கி மீது ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

1 /8

ரிசர்வ் வங்கியின் விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதை, ஆர்பிஐ அவ்வப்போது ஆய்வு செய்துக் கொண்டே இருக்கும். விதிமுறைகளை மதிக்காமல் புறக்கணித்ததால்,  அது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

2 /8

நாட்டில் மக்களுக்கு சேவையாற்றி வரும் வங்கிகள்,  மக்களின் வசதியையும் நலனையும் கருத்தில் கொண்டு இயங்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் ரிசர்வ் வங்கி, பிற வங்கிகள் தவறு செய்தால் கண்காணித்து வாடிக்கையாளர்களின் நலனை உறுதி செய்கிறது

3 /8

அதிலும் தனியார் வங்கிகளில் சேவை துரிதமானதாக இருக்கிறது என்று பலரும் நினைக்கும்போது, இரண்டு பெரிய தனியார் வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது

4 /8

ஐசிஐசிஐ வங்கி லிமிடெட் மீது ரிசர்வ் வங்கி ரூ.1 கோடி அபராதம் விதித்தது. வங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949 இன் பிரிவு 46(4)(i) மற்றும் பிரிவு 47A(1)(c) ஆகிய விதிகளின் கீழ் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

5 /8

ரிசர்வ் வங்கி, யெஸ் வங்கிக்கு ரூ.90 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்த இரு வங்கிகள் மீதும் வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949ன் கீழ் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

6 /8

யெஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.90 லட்சம் அபராதம் விதித்தது. வாடிக்கையாளர் சேவை விதிகளை புறக்கணித்ததாலும், வங்கிகளில் உள்ளக/அலுவலக கணக்குகளை அங்கீகரிக்காமல் செயல்படுத்தியதாலும் வங்கிக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது

7 /8

இந்த அபராதம் வங்கிகளின் செயல்பாட்டைப் பாதிக்காது என்றும், வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகள், கடன்கள் மற்றும் சேமிப்புக் கணக்குகளில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதும், இது விதிமீறல்களுக்கான அபராதம் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. 

8 /8

பொறுப்புத் துறப்பு:  இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை