ஒருவரது வாழ்க்கையில் கடன் வாங்க வேண்டிய சூழல் எப்படியும் உருவாகிவிடுகிறது.  புத்திசாலித்தனமான கடன் வாங்குவது என்பது குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வாங்குவது தான்.  தனிநபர் கடனை நீங்கள் வாங்க நேரும்போது முதலில் வட்டி விகிதத்தை கண்காணித்து அதன் பிறகு கடன் தொகையை வாங்குங்கள், இல்லாவிட்டால் உங்களுக்கு கடன் சுமை அதிகமாகிவிடும்.  குறைந்தளவு வட்டி விகிதம் கொண்ட கடனை நீங்கள் வாங்கினால் எவ்வித சிரமமுமின்றி அந்த கடன் தொகையை திருப்பி செலுத்திவிடலாம்.  மிகக் குறைந்த அளவு வட்டியில் தனிநபர் கடனை பெறுவதற்கான குறிப்புகளை பற்றி இங்கே காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) வங்கியில் கடன் வாங்குவதற்கு முன்னர் ஆன்லைனில் பல்வேறு கடன் வழங்குபவர்களின் வட்டி விகிதங்களைச் சரிபார்த்து ஒப்பீடு செய்து அதன் பிறகு கடன் வாங்குங்கள்.  ஆன்லைன் நிதிச் சந்தைகள் சிறந்த கடன் வழங்குபவர்களின் தனிப்பட்ட கடன் வட்டி விகிதங்களை காட்டுகிறது.  



மேலும் படிக்க | IRCTC: ரத்தான ரயில்களின் பட்டியலை சரிபார்த்த பிறகு ரயில் பயணத்திற்கு கிளம்பலாமே


2) வாடிக்கையாளரின் முந்தைய செயல்களை பொறுத்து குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.  முன்னர் நீங்கள் வாங்கிய கடன் தொகையை எவ்வளவு விரைவாக மற்றும் கால தாமதமின்றி செலுத்தி இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து வங்கிகள் உங்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களுடனான கடன்களை வழங்குகிறது.


3) சிலசமயம் வங்கிகள் ஏதேனும் ஆஃபர்களை வழங்கும், வங்கிகள் வழங்கக்கூடிய இந்த சலுகைகளை பயன்படுத்தி கொள்வதன் மூலமாக நீங்கள் மிகக் குறைந்த தனிநபர் கடன் வட்டி விகிதத்தைப் பெறலாம். பொதுவாக பண்டிகை காலங்களில் வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்துடனான கடன்களை வழங்கி வருகிறது, இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.  ஆனால் உங்களது அவசர தேவைக்கு இந்த சலுகையை பயன்படுத்தமுடியாது, வங்கிகள் எப்போது இந்த சலுகையினை செயல்படுத்துமோ அப்போது மட்டும் தான் நீங்கள் கடனை பெற முடியும்.


4) உங்கள் கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருந்தால் குறைந்த தனிநபர் கடன் வட்டி விகிதத்தைப் பெறுவதில் எந்தவித சிக்கலும் இருக்கது.  கடன் வாங்குபவருக்கு கடன் கொடுப்பது எவ்வளவு பாதுகாப்பானது என்பதை கிரெடிட் ஸ்கோர் உணர்த்துகிறது.  உங்கள் கிரெடிட் ஸ்கோர் 750க்கு மேல் இருந்தால் உங்களுக்கு சிறந்த வட்டியில் தனிநபர் கடன் கிடைக்கும்.


5) கடன் வாங்க நினைக்கும் சமயத்தில் உங்களிடம் ஏதேனும் கடன்கள் நிலுவையில் இருந்தால் அது சற்று சிக்கலை தரும்.  அதனால் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் அவற்றைச் சரிபார்க்க வேண்டும்.  இதில் வீட்டுக் கடன்கள், இரு சக்கர வாகனம் அல்லது கார் கடன்கள் அல்லது வேறு எவ்வித கடன்களும் இருக்கிறதா என்பதை கவனித்து கொண்டு கடனுக்கு விண்ணப்பிப்பது சிறந்தது.


மேலும் படிக்க | ஆதார் கார்ட் தரவுகளை பாதுகாக்க அதை லாக் / அன்லாக் செய்யலாம்: செயல்முறை இதோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ