பொதுவாக கிரெடிட் ஸ்கோர் சிபில் ஸ்கோர் என்று அழைக்கப்படுகிறது, ஒருவரது சிபில் ஸ்கோர் தான் அவரது கடன் தகுதியை தீர்மானிக்கிறது. வங்கியில் கடன் பெற்றால் அதை நீங்கள் சரியாக திருப்பி செலுத்தி விடுவீர்களா என்பதை உங்கள் சிபில் ஸ்கோர் காட்டுகிறது. ஒருவரது சிபில் ஸ்கோர் 700க்கு மேல் இருந்தால் அது நல்ல நிலையில் இருப்பதாக கருதப்படுகிறது, சிபில் ஸ்கோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பவர்கள் தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்தால் அவர்களது கோரிக்கை ஏற்கப்பட்டு நிறுவனம் அவர்களுக்கு கடனை வழங்கும். பெரும்பாலான வங்கிகள் மற்றும் என்பிஎஃப்சி(வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்) உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பெற்று கடன் பெற நீங்கள் தகுதியானவர்களா என்பதை சோதித்த பின்னர் உங்களின் கடன் விண்ணப்பத்தை கடன் வழங்கும் நிறுவனம் அங்கீகரிக்கும்.
அதேசமயம் குறைந்த அளவில் சிபில் ஸ்கோர் கொண்டிருப்பவர்களின் கடன் விண்ணப்பங்களை கடன் வழங்கும் நிறுவனங்கள் எவ்வித பாரபட்சமுமின்றி அந்த கோரிக்கையை உடனே ரத்து செய்துவிடும். குறைந்த சிபில் மதிப்பெண்கள் வைத்திருப்பவர்களுக்கு சில சமயங்களில் அவசர தேவைக்கு கடன் தேவைப்படும் பட்சத்தில் என்ன செய்வது என்கிற குழப்பம் பலருக்கும் இருக்கும், இனிமேல் அந்த குழப்பம் தேவையில்லை. குறைந்த சிபில் ஸ்கோர் கொண்டவர்களும் தனிநபர் கடனை பெற சில வழிகள் உள்ளன. சிபில் மதிப்பெண் குறைவாக இருப்பவர்கள் என்பிஎஃப்சி-கள் அல்லது ஃபின்டெக் கடன் வழங்குபவர்களிடம் கடன் பெற விண்ணப்பிக்கலாம். இந்த கடன் வழங்கும் நிதி நிறுவங்கள் குறைந்த சிபில் ஸ்கோர் உள்ளவர்களுக்கும் கடன் வழங்குகிறது. அதேசமயம் இந்த நிறுவனங்கள் வங்கிகளை விட அதிக வட்டியை வசூலிக்கிறது.
மேலும் படிக்க | LIC Plan: ஒருமுறை முதலீடு செய்தால் போதும்! வாழ்நாள் முழுக்க ஓய்வூதியம்!
கடன் கோருவதில் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் நீங்கள் வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்து அது நிராகரிக்கப்பட்டால் உங்களது சிபில் ஸ்கோர் மேலும் குறைக்கப்படும். நீங்கள் தனிநபர் கடன் பெறும்போது பாதுகாப்புக்காக குறிப்பிடப்படும் இணை விண்ணப்பதாரர் நல்ல சிபில் ஸ்கோர் வைத்திருப்பது உங்களுக்கு நல்லது. அப்படிப்பட்ட நபரை நீங்கள் சேர்க்கும்பொழுது கடன் வழங்குபவர் தயங்காமல் உங்களுக்கு கடனளிக்க முன் வருவார். அடுத்ததாக நீங்கள் குறைந்த சிபில் ஸ்கோர் வைத்திருப்பதால், அதிகளவில் கடன் தொகை கோராமல் குறைந்த அளவிலான கடன் தொகையை மட்டும் கேட்டு விண்ணப்பியுங்கள். குறைந்த அளவு தொகை வாங்கினால் உங்களால் அதனை எளிதில் திருப்பி செலுத்த முடியும், அப்படி சரியாக செலுத்தும்பட்சத்தில் உங்கள் கடன் தகுதி மேம்படும். கடன் தகுதி மேம்பட்டதும் நீங்கள் பெரிய கடன் தொகையை கோரலாம், மேலும் குறைந்த சிபில் ஸ்கோர் வைத்திருப்பவர்கள் அவசர தேவைக்கு தங்கக் கடன், சொத்து மீதான கடன் அல்லது பத்திரங்களுக்கு எதிரான கடன் போன்ற ஏதேனும் ஒன்றின் மீது கடன் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் படிக்க | உங்கள் ரயில் தாமதமா? IRCTC புதிய வசதி அறிமுகம்; பயணிகளுக்கு ஜாக்பாட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ