தனியார் துறை விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் பல்வேறு இடங்களில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சோதனைகளில் பல முக்கியமான ஆவணங்களை அமலாக்க இயக்குநரகம் கண்டறிந்துள்ளது. கோயல் தனது பல நிறுவனங்களை நாட்டிலும் வெளிநாட்டிலும் உருவாக்கி, பெரிய அளவிலான பணத்தை வெளிநாடுகளுக்கு மாற்றுவதன் மூலம் டஜன் கணக்கான வரி ஏய்ப்பு திட்டங்களின் "கட்டமைப்பை" உருவாக்கியுள்ளார் என்பதை இந்த சோதனைகள் வெளிப்படுத்தியுள்ளன.


பணத்தின் சரியான எண்ணிக்கை கண்டுபிடிக்கப் படவில்லை என்றாலும், கோயல் பில்லியன் கணக்கான ரூபாய்களை மிச்சப்படுத்தி வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக நம்பப்படுகிறது. 


அமலாக்க துறை கூற்றுப்படி., இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் பலவற்றில் பல்வேறு விமான குத்தகை ஒப்பந்தங்கள், விமான பராமரிப்பு ஒப்பந்தங்கள் போன்றவற்றின் மூலம் போலி மற்றும் அதிக பணம் செலுத்தியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. 


அமலாக்க இயக்குநரக கூற்றுப்படி, வெளிநாடுகளில் உள்ள இந்த அனைத்து நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளும் கோயாலால் இயக்கப்படுகிறது. முதன்முதலில், இந்த கொடுப்பனவுகள் மூலம் வெளிநாட்டு நாணய மேலாண்மை சட்டத்தின் (FARA) விதிமுறைகளை மீறுவது தெளிவாகத் தெரியவந்துள்ளது.


தொடர்ந்து, பெறப்பட்ட ஆவணங்கள் ஆவணங்கள் அடிப்படையில் முழுமையான விசாரணை நடைப்பெற்று வருவதாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.