புதுடெல்லி: கார் வாங்கும் முன், எப்போது கார் வாங்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு காரை எவ்வளவு பணத்திற்கு வாங்க வேண்டும் என்பதும் முக்கியம். இதற்கு எந்த விதியும் இல்லை என்றாலும், உங்கள் பட்ஜெட்டில் அடங்கும் கார்களை வாங்குவது நல்லது. ஒரு கார் வாங்க திட்டமிடும்போது, சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். அதிலும் பண்டிகை காலம் தொடங்கிவிட்டது. இந்த சீசன் தான் பலருக்கும் முதல் கார் வாங்கும் பருவம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பலர் தங்களின் முதல் காரை வாங்க சிறந்த சமயமாக நினைப்பது ஆயுத பூஜை மற்றும் தீபாவளி சமயத்தில் தான். நீங்கள் விரும்பும் நாளில் நீங்கள் கார் வாங்கலாம், ஆனால் கார் வாங்குவதற்கு முன், எப்போது ஒரு காரை வாங்க வேண்டும் என்பதும், எவ்வளவு பணத்திற்கு வாங்க வேண்டும் என்பதும் முக்கியம். 


கார் கடன் வாங்கி கார் வாங்கத் திட்டமிடுபவர்கள் சில விஷயங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வது அவசியம். உங்களிடம் போதுமான சேமிப்பு இருந்தால் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப காரை வாங்குங்கள். ஆனால் கார் கடன் வாங்கப் போகிறீர்கள் என்றால், உங்கள் ஓராண்டின் மொத்த சம்பளத்தில் பாதி அளவிற்கு உண்டான தொகைக்குக் மேல் கார் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.


உங்கள் ஓராண்டு சம்பளம் ரூ.10 லட்சம் என்று வைத்துக் கொள்வோம், அப்போது நீங்கள் ரூ.5 லட்சத்துக்கு மேல் கார் வாங்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். இதைவிட அதிக விலைக்கு கார் வாங்க விரும்பினால், சம்பளம் அதிகரிக்கும் வரை காத்திருங்கள், இல்லையெனில் உங்கள் நிலைமை மோசமாகிவிடும்.


மேலும் படிக்க | அடிச்சது ஜாக்பாட்! ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 9.11% வரை வட்டி, எந்த வங்கி கொடுக்கிறது?


எப்போது கார் வாங்க வேண்டும்?
உங்கள் தொழில் வாழ்க்கையின் எந்த கட்டத்தில் நீங்கள் ஒரு காரை வாங்க வேண்டும், அது உங்கள் சம்பளம் மற்றும் எந்த காரை வாங்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. உங்களின் மொத்த சம்பளம் உங்களுக்கு பிடித்த காரின் விலையை விட இரட்டிப்பாகும் போது, ​​கார் லோன் எடுத்து எளிதாக காரை வாங்கலாம். கடன் வாங்க வேண்டும் என்றால் வட்டியைப் பற்றி யோசிப்பது அவசியம் ஆகும்.


கார் வாங்கும் 20-4-10 விதியைப் பின்பற்றவும்
 
இது ஒரு நிலையான விதி அல்ல, அதன்படி நீங்கள் ஒரு கார் வாங்க வேண்டும், ஆனால் இந்த விதியைப் பின்பற்றினால் பட்ஜெட் உங்களை தொந்தரவு செய்யாது. இந்த விதியில் மூன்று விஷயங்கள் உள்ளன. முதலாவதாக, உங்கள் காரின் விலையில் 20 சதவீதத்தை முன்பணமாக செலுத்த வேண்டும். இரண்டாவது, நீங்கள் எடுக்கும் கார் கடன் 4 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக்கூடாது. மூன்றாவது, கார் கடன் EMI உங்கள் சம்பளத்தில் 10 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


சில விஷயங்களை மனதில் வையுங்கள்
முதலில், கார் வாங்கும் போது அதிகபட்ச முன்பணம் செலுத்த முயற்சிக்கவும். இதன் மூலம் குறைந்த வட்டியை செலுத்த வேண்டியிருக்கும். அதேபோல உங்கள் கடன் காலத்தை குறைக்கலாம் அல்லது உங்கள் EMIஐக் குறைக்கலாம்.


நீங்கள் பணத்தை சேமிக்க விரும்பினால், சமீபத்திய மாடல் தான் வேண்டும் என்று நினைப்பதைவிட, தேவைக்கு ஏற்ற கார் என்பதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஏனென்றால், லேட்டஸ்ட் மாடல் காரின் விலை அதிகமாக இருக்கும் அல்லது தள்ளுபடிகள் கிடைக்காது. அறிமுகமாகி சில காலம் ஆன கார்களுக்கு நல்ல தள்ளுபடி கிடைக்கும். காரின் பெர்ஃபார்மென்ஸ் எப்படி இருக்கிறது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள், எனவே எந்த காரை வாங்குவது என்பதை நீங்கள் எளிதாக முடிவு செய்யலாம்.


உங்களிடம் ஏற்கனவே கார் இருந்தால், கார் கடன் வாங்கி கார் வாங்குவதை விட, பணத்தைச் சேமித்து கார் வாங்குவதைப் பற்றி யோசியுங்கள். இதன் மூலம்,  வட்டிக்கு செல்லும் பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.


மேலும் படிக்க | நிம்மதியான ரிட்டயர்மெண்ட் வாழ்க்கைக்கு பெஸ்ட் ஓய்வூதிய திட்டம்! டாப் 5 திட்டங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ