புதுடெல்லி: ரிசர்வ் வங்கி தொடர்ந்து நான்காவது முறையாக ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை, அதன் பிறகு அதிக வட்டி விகிதம் அல்லது முதலீட்டு திட்டங்களின் மீதான அதிகரிப்பு ஆகியவற்றின் பலனைப் பெறுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது. ஆனால், ஒவ்வொருவரும் தங்களுடைய முதலீடு, நாளை நல்ல பலனைத் தரவேண்டும் என்று விரும்புகின்றானர். எதிர்காலத்திற்காக சேமிக்கும் தொகையை சிறப்பான ஆனால் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்ய விரும்புகிறோம்.
பல்வேறு சேமிப்புத் திட்டங்களில், நிரந்தர வைப்புத் திட்டங்கள் எதிர்கால திட்டங்களின் அடிப்படையில் செய்யப்படுகின்றன. இவை வெவ்வேறு காலங்கள் மற்றும் வட்டி விகிதங்களுடன் FD வசதிகளையும் வழங்குகின்றன. ஃபிக்ஸட் டெபாசிட் செய்திருப்பவர்களுக்கு அதிகபட்சமாக 7.5% வரை வட்டி கிடைக்கும் நிலையில், ஃபிக்ஸட் டெபாசிட் செய்பவர்களுக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது என்று தெரிந்துக் கொள்வது நல்லது.
சிறு நிதித் துறையின் ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Fincare Small Finance Bank), ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் ரூ.2 கோடிக்கு குறைவாக முதலீடு செய்தால், அதன் வாடிக்கையாளர்களுக்கு 9.11% வரை வருமானத்தை வழங்குகிறது.
1000 நாட்கள் டெபாசிட்களுக்கு அதிகபட்ச வட்டி விகிதம்
ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டியில் 3% முதல் 8.51% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. அதேசமயம், சீனியர் சிட்டிசன்களின் நிலை வைப்புகள் எனப்படும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 3.60% முதல் 9.11% வரை வட்டி வழங்குகிறது.
1000 நாட்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புத் திட்டத்தில் பொது மக்களுக்கு 8.51% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், சீனியர் சிட்டிசன்களுக்கு 9.11% வரை வட்டி வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | பிக்சட் டெபாசிட் செய்பவர்களுக்கு குட் நியூஸ்! உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
Fincare SFB FD வட்டி விகிதம்
Fincare Small Finance வங்கி 7 முதல் 14 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் FDகளுக்கு 3% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 15 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் FDக்கு 4.50 சதவீதம் வட்டி வழங்கப்படும். 31 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான காலக்கெடுவிற்கு 4.75% வட்டியும், 46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான 5.25% வட்டியும் வழங்கப்படுகிறது.
91 முதல் 180 நாட்களுக்குள் முதிர்ச்சியுடன் கூடிய FDக்கு 5.75 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும். 181 முதல் 365 நாட்கள் முதிர்வு கொண்ட FDகளுக்கு 6.50 சதவீத வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது. 30 மாதங்கள் மற்றும் ஒரு நாள் முதல் 999 நாட்களில் முதிர்ச்சியடையும் FDகளுக்கு 8 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
இது 36 மாதங்கள் முதல் 42 மாதங்கள் வரை முதிர்ச்சியடையும் FDகளுக்கு 8.25 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
இது 42 மாதங்கள் மற்றும் ஒரு நாள் முதல் 59 மாதங்கள் வரை முதிர்ச்சியடையும் FDகளுக்கு 7.50 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
சீனியர் சிட்டிசன்களுக்கான வட்டி விகிதங்கள்
ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, மூத்த குடிமக்களுக்கு 7 நாட்கள் முதல் 84 மாதங்கள் வரையிலான எஃப்டிகளுக்கு 3.60 சதவீதம் முதல் 9.11 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
மேலும் படிக்க | மத்திய ஊழியர்களுக்கு டபுள் குட் நியூஸ்.. டிஏ உயர்வு, இந்த தேதியில் பெரும் பரிசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ