நாள்தோறும் அதிகரித்து வரும் மின்சார பயன்பாடு அரசுக்கு சிக்கலை ஏற்படுத்திவரும் நிலயில் இன்னும் இரு மாதங்களில், அதாவது 2024 ஜனவரியில் மின் தேவையை பூர்த்தி செய்வதில் மின் பற்றாக்குறை ஏற்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. புதிய குடியிருப்புகள், செல்போன், லேப்டாப் சாதனங்களின் பயன்பாடு, பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு, தனிநபர் மின் பயன்பாடு அதிகரிப்பு என மின்சார பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில், மின்சார பற்றாக்குறையை போக்க சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் மின்சாரத்திற்கு கவனம் அளிக்க வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிலும், வழக்கமான இன்வர்டர் போன்றே போர்ட்டபிள்ஸ் சோலார் ஜெனரேட்டர் என்ற சூரிய சக்தி ஜெனரேட்டரும் தற்போது பிரபலமாகிவருகிறது. இந்த சோலார் ஜெனரேட்டரின் உதவியுடன், உங்கள் வீட்டின் மின்விசிறி, டிவி மற்றும் பிற சாதனங்களையும் இயக்கலாம். இது மிகவும் சிறிய அளவில் இருக்கும் இந்த ஓலார் ஜெனரேட்டரை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இந்த சாதனம் பவர் பேக்அப்பை வழங்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு, சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்துகிறது. இதற்காக  மத்திய அரசு மானியமும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதிலும், வீடு உள்ளிட்ட கட்டடங்களின் மேல் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, 40 சதவீதம் மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது.



புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் (MNRE) தேசிய போர்ட்டலில் roof solar (solarrooftoppanel.gov.in) இல் ரூப்டாப் சோலார் பேனல்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த போர்ட்டலில் விண்ணப்பிப்பவர்கள், ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்  விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டவுடன், மானியம் நுகர்வோரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.


சோலார் பேனல் நிறுவல்


சோலார் பேனல் நிறுவது (installation) தொடர்பாக  முதலில் யாரை அணுகவேண்டும் என்று பலருக்கும் தெரியவில்லை. தமிழ்நாட்டில் சோலார் பேனல் நிறுவுவதற்கு, TEDA அல்லது Tangedco அமைப்புகளை அணுக வேண்டும். 40 சதவீதம் மானியம் மத்திய அரசு ரூப்டாப் சோலார் மானியத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 3 கிலோவாட் சோலார் பேனல்களுக்குக் கீழ் 40 சதவீதம் வரையில் மானியம் கிடைக்கும்.


இந்த சோலார் ஜெனரேட்டர் உடனே வாங்குங்க, எலக்ட்ரிசிட்டி பில் வராது


சோலார் பேனல் மானிய விபரங்கள்


3-10 கிலோவாட் சோலார் பேனல்களுக்கு 20% மானியம் கிடைக்கும். குரூப் ஹவுசிங் சொசைட்டி மற்றும் குடியிருப்பு நலன்புரி சங்கங்கள் பொதுவான பயன்பாட்டுக்கான சோலார் பேனல்களுக்கு 500 கிலோவாட் (ஒரு வீட்டிற்கு 10 கிலோவாட்) வரையிலான திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த வகையினருக்கு 20% மானியம் கிடைக்கும்.


இந்த மானியம் தொடர்பான தகவல்கள், solarrooftop.gov.in என்ற வெப்சைட்டில் கிடைக்கும். இதே வெப்சைட்டில் சோலார் பேனல் அமைப்பது தொடர்பான தகவல்களும், மானியத்திற்கு விண்ணப்பிக்கும் வசதியும் உள்ளது. விண்ணப்பத்திவர்களின் விபரங்களை பரிசீலித்து, பயனாளியின் வங்கி கணக்கில் மத்திய அரசு நேரடியாக மானிய தொகை செலுத்தும்.


solarrooftop.gov.in என்ற வெப்சைட்டில் கேட்கப்படும் விபரங்களை பூர்த்தி செய்தாலும், தேவையான விபரங்களை சரிவர கொடுக்காததால் தான் மத்திய அரசு மானியம் வழங்குவதில் சிக்கல் எழுகிறது. சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் மற்றும் அதற்கான அரசு மானியங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.


மேலும் படிக்க | தீபாவளிக்கு விவசாயிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் ஜாக்பாட் பரிசு கொடுக்கும் அரசு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ