டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க் கடந்த வாரம் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றனர். உலக பணக்காரர்களின் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் மனிதனைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்கள், அவரது தொடக்கங்கள் எவ்வளவு எளிமையானவையாக இருந்துள்ளன என்பதையும், கல்லூரி நாட்களில் அவர் எவ்வளவு உறுதியாக இருந்தார் என்பதையும் காட்டுகின்றன. பல தடைகளைத் தாண்டி அவர் இன்று இருக்கும் மிகப் பெரிய நிலையை அடைந்துள்ளார்.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சரித்திரம் படைத்த எலன் மஸ்க், உலகின் 500 பணக்காரர்களின் தரவரிசையான ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் ஜெஃப் பெசோஸைக் (Jeff Bezos) கடந்து, உலகின் மிகப் பெரிய பணக்காரர் ஆனார். மஸ்கின் நிகர மதிப்பு இந்த ஆண்டு 150 பில்லியன் டாலருக்கும் மேல் அதிகரித்துள்ளது. டெஸ்லாவின் பங்குகளின் விலை கடந்த ஆண்டு 743 சதவீதம் உயர்ந்தன.


வியாழக்கிழமை டெஸ்லாவின் (Tesla) பங்கு விலைகள் 4.8 சதவிகிதம் உயர்ந்தன. இதன் மூலம், மஸ்கின் மொத்த மதிப்பு 188.5 பில்லியன் டாலர் ஆனது. அவரது மதிப்பு பெசோஸை விட 1.5 பில்லியன் அதிகமானது. அக்டோபர் 2017 முதல் பெசோஸ் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


எலன் மஸ்க் பற்றி 10 மிகவும் சுவாரஸ்யமான விஷயங்களப் பார்க்கலாம்:


1. தென்னாப்பிரிக்காவின் (South Africa) பிரிட்டோரியாவில் 1971 இல் பிறந்த எலோன் மஸ்க் தனது 17 வயதில் கனடாவுக்கு குடிபெயர்ந்தார். மஸ்கிற்கு தென்னாப்பிரிக்க, கனேடிய மற்றும் அமெரிக்க குடியுரிமை உள்ளது.


2. இன்றுவரை எலன் மஸ்க், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், ஹைப்பர்லூப், ஓபன்ஏஐ, நியூரலிங்க், தி போரிங் கம்பெனி, ஜிப் 2, பேபால் ஆகிய எட்டு நிறுவனங்களை நிறுவியுள்ளார்.


3. குழந்தை பருவத்திலிருந்தே, மஸ்க் ஒரு தொழில்நுட்ப ஜீக் போன்ற பண்புகளைக் காட்டியிருந்தார். மஸ்க் 9 வயதாக இருந்தபோது முழு என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவையும் படித்ததாகக் கூறப்படுகிறது. அவர் கணினி குறியீடுகளை (Computer Coding) சுயமாக கற்றுக்கொண்டார். அவருக்கு வெறும் 12 வயதாக இருந்தபோது, ​​பிளாஸ்டார் என்ற வீடியோ கேமை உருவாக்கினார். பின்னர் அவர் அதை யுஏடி 500 க்கு பிசி மற்றும் ஆபிஸ் டெக்னாலஜி பத்திரிகைக்கு விற்றார்.


4. 15 வயதில், மஸ்க் தற்காப்பு கலை (கராத்தே, ஜூடோ) மற்றும் மல்யுத்தத்தை கற்றுக்கொண்டார். குழந்தை பருவத்தில் மஸ்க் சக நண்பர்களால் பெரிதும் கொடுமைப் படுத்தப்பட்டதாகவும், ஒரு முறை தனது பள்ளித் தோழர்களால் கொடூரமாக தாக்கப்பட்டபோது அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது என்றும் கூறப்படுகிறது.


ALSO READ: உலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய Elon Musk


5. மார்வெல் புகழ் டோனி ஸ்டார்க் (அயர்ன் மேன்) கதாபாத்திரம் மஸ்கின் சித்தரிப்பை அடிப்படையாகக் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயர்ன் மேன் 2 இல் மஸ்க் ஒரு கௌரவ வேடத்திலும் வந்தார். தி சிம்ப்சன்ஸ், பிக் பேங் தியரி மற்றும் சவுத் பார்க் போன்ற சீரியல்கள் / நிகழ்ச்சிகளில், மஸ்க் கலந்துகொண்டுள்ளார்.


6. மஸ்க் UPenn-ல் இளங்கலைப் பட்டம் பெற்று பின்னர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எனர்ஜி இயற்பியலில் பி.எச்.டி. படிப்பில் சேர்ந்தார். இருப்பினும், இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் இதிலிருந்து வெளியேறி ஜிப் 2 கார்ப்பரேஷனைத் தொடங்கினார்.


7. SpaceX ராக்கெட் தயாரிப்பாளரின் பெரும்பான்மையான உரிமையாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மஸ்க் அதில் எந்த சம்பளத்தையும் பெறுவதில்லை.


8. நிறுவனம் ஒழுங்கான வர்த்தகத்தை செய்யாமல் இருந்த ஒரு நிலையில், எலன் மஸ்க் (Elon Musk) ஒருமுறை டெஸ்லாவை விற்க முடிவு செய்தார்.


9. எலோன் மஸ்கின் கல்லூரி நாட்களைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. அவர் ஒரு நாளைக்கு 1 அமெரிக்க டாலரை மட்டுமே கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டி இருந்தது. ஸ்டார்ட்ராக்ராடியோவுடனான தனது உரையாடலின் போது, ​​மஸ்க் இதைப்பற்றி கூறினார். "நான் ஹாட் டாக்ஸ் மற்றும் ஆரஞ்சுகளை மட்டும் சூப்பர் மார்கெட்டிலிருந்து வாங்கிக்கொண்டேன். ஆனால் அவற்றை மட்டுமே சாப்பிடுவது கடினமாக இருந்தது." என்று அவர் கூறியுள்ளார்.


10. எலன் மஸ்கிற்கு ஆறு குழந்தைகள் உள்ளனர் (அவர்கள் அனைவரும் ஆண் பிள்ளைகள்). அவருக்கும் அவரது முதல் மனைவிக்கும் 5 குழந்தைகள் உள்ளனர். 2020 ஆம் ஆண்டில், மஸ்க் மற்றும் அவரது கேனேடிய காதலி பாடகர் கிளாரி எலிசிற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.


ALSO READ: Elon Musk உலகின் பணக்காரர் ஆனது எப்படி தெரியுமா?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR