டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் பில்லியனர் எலன் மஸ்க் திங்களன்று, வரவிருக்கும் நாட்களில் பிட்காயின் முதலீட்டாளர்களிடையே பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன என்று கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடக செயலியான கிளப்ஹவுஸில் ஒரு உரையாடலின் போது கிரிப்டோகரன்சிக்கான தனது ஆதரவை அவர் வெளிப்படுத்தியது ஆயிரக்கணக்கானவர்களின் கவனத்தை ஈர்த்தது.


பிட்காயினுக்கு (Bitcoin) ஆதரவாக பேசியதோடு மட்டுமல்லாமல், வெள்ளிக்கிழமை தனது ட்விட்டர் ப்ரொஃபைலில் "#bitcoin” என்ற ஹேஷ்டாகையும் அவர் பயன்படுத்தினார். இதைத் தொடர்ந்து நோற்று கிரிப்டோகரன்சி 14% உயர்ந்தது.


டெஸ்லா (Tesla) இன்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மஸ்க், ட்விட்டரில் வெளிப்படுத்தும் கருத்துகள் பங்குச்சந்தைகளிலும், சமூக ஊடகங்காளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை நாம் கண்டுள்ளோம். கிளப்ஹவுஸ் செயலியின் நிகழ்வில் அவர் கலந்துகொண்டபோது அவரும் இதை ஒப்புக்கொண்டார்.


"நான் பிட்காயினின் ஆதரவாளர்" என்று அவர் கூறினார்.


"இதைப் பொறுத்தவரை சற்று மெதுவாக முடிவெடுத்தேன்" என்று அவர் கூறினார். எட்டு ஆண்டுகளுக்கு முன்னரே தான் பிட்காயின்களை வாங்கியிருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.


"வழக்கமான நிதி வல்லுநர்களால் பிட்காயின் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான காலம் மிக அருகில் இருப்பதாக நான் நினைக்கிறேன்." என்று எலன் மஸ்க் (Elon Musk) அவர் தெரிவித்தார்.


பிட்காயின் கடைசியாக 3.7% அதிகரித்து, 34,390 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது. இது 2020 ஆம் ஆண்டில் 300% க்கும் அதிகமாக அதிகரித்தது.


பலதரப்பட்ட விஷயங்கள் பற்றி பேசப்பட்ட இந்த உரையாடலில், எலன் மஸ்க், மீம்ஸ், செவ்வாய் கிரகம் (Mars), அவரது நிறுவனங்கள் மற்றும் தடுப்பூசிகள் போன்ற பல தலைப்புகளைப் பற்றி விவாதித்தார். ஆன்லைன் பங்குச்சந்தை புரோக்கர் செயலியான ராபின்ஹுட்டின் இணை நிறுவனர் விளாடிமிர் டெனேவையும் எலன் மஸ்க் பேட்டி எடுத்தார்.


ALSO READ: மக்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அனுப்ப தயாராகிறது Elon Musk-ன் SpaceX


கேம்ஸ்டாப் பங்குகளை சில்லறை முதலீட்டாளர்கள் வாங்குவதை தடுப்பதற்காக இந்த ஆன்லைன் தளம் விமர்சனத்தில் சிக்கியுள்ளது.


அமெரிக்க வீடியோ கேம் சில்லறை விற்பனையாளரின் பங்குகளை வாங்க சில்லறை முதலீட்டாளர்கள் ஒன்றிணைந்த பின்னர், கடந்த வாரத்தில் கேம்ஸ்டாப் பங்கு சுமார் 400% உயர்ந்தது.


பில்லியனர் ஹெட்ஜ்-ஃபண்ட் மேலாளர் கென் கிரிஃபினின் சந்தை உருவாக்க பிரிவான சிட்டாடல் செக்யூரிட்டீஸ் - சில்லறை முதலீட்டாளர்களைத் தடுக்க ராபின்ஹுட் மீது அழுத்தம் கொடுத்ததாக வந்த வதந்திகள் பொய்யானவை என்று டெனேவ் கூறினார்.


"இந்த வதந்திகள் பொய்யானவை" என்று டெனேவ் கூறினார். ஒழுங்குமுறை மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வர்த்தகத்தை ராபின்ஹுட் தற்காலிகமாக நிறுத்தியது என்று அவர் மேலும் தெரிவித்தார்.


மஸ்க் கடந்த வாரம் "Gamestonk!!" என்று ட்வீட் செய்தார். இது சந்தையில் பல சிறிய முதலீட்டாளர்களுக்கு ஆதரவான ஒரு வெளிப்படையான ஆதரவு என்று பலருக்குத் தோன்றியது.


"Stocks” அதாவது பங்குகள் என்ற சொல்லை சமூக ஊடக பயனர்கள் “Stonks” என்று குறிப்பிடுவது வழக்கமாகும்.


COVID-19 தடுப்பூசிகளைப் பற்றியும் மஸ்க் உரையாடினார். விரைவில் அதிக அளவில் தடுப்பூசிகள் வரும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தர். தடுப்பூசிகளின் முதல் டோஸை விரைவில் வழங்குவதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், இரண்டாவது டோஸ் பற்றி பிறகு கவலைப்பட்டுக் கொள்ளலாம் என்றும் கூறிய அவர், அப்போதுதான் பணிகள் துரித நிலையில் நடக்கும் என்று தெரிவித்தார்.


ALSO READ: இந்தியா வருகிறது Elon Musk-ன் Tesla: Bengaluru-வில் துணை நிறுவனம் பதிவு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR