EPF Calculation: வருங்கால வைப்பு நிதி தொகையை கணக்கிட எளிய வழிகள்!
இபிஎஃப் கணக்கில் ஊழியர் மற்றும் முதலாளி ஆகிய இருவரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி 24 சதவீத (12+12) பங்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.
தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு வருங்கால வைப்பு நிதிக் கணக்கு வைத்திருப்பது என்பது ஒரு சிறந்த சேமிப்பு முறையாக பார்க்கப்படுகிறது. இந்தக் கணக்குகளில், ஊழியர் மற்றும் முதலாளி ஆகிய இருவரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி 24 சதவீத (12+12) பங்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தை வழங்குகிறது, தற்போது அரசு 8.5 சதவீத வட்டியை வழங்கி வருகிறது. வருங்கால வைப்பு நிதியில் டெபாசிட் செய்யப்பட்ட முழுப் பணத்திற்கும் வட்டி கிடைக்கும் என்று சிலர் நினைக்கின்றனர், ஆனால் அந்த எண்ணம் பலிக்காது. பிஎஃப் கணக்கில் இருந்து ஓய்வூதிய நிதிக்கு செல்லும் தொகைக்கு வட்டி கணக்கிடப்படுவதில்லை என்பதை ஊழியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாதத்தின் சம்பள சீட்டில், உங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ எவ்வளவு என்பதைக் காணலாம். ஒவ்வொரு பணியாளரின் அடிப்படை சம்பளம் + டிஏவில் 12 சதவீதம் இபிஎஃப் கணக்கிற்கு செல்கிறது. வட்டி ஒவ்வொரு ஆண்டும் மதிப்பாய்வு செய்யப்படுகிறது, கூட்டு வட்டி காரணமாக, வட்டியிலும் இரட்டிப்பு பலன் கிடைக்கிறது.
மேலும் படிக்க | EPFO New Update: EPFO வெளியிட்டுள்ள முக்கியமான 5 புதிய விதிகள்!
ரூ.10,000 அடிப்படை சம்பளத்தில் ஓய்வூதிய நிதி:
-இபிஎஃப் உறுப்பினரின் வயது 25
-ஓய்வு பெறும் வயது 58
-அடிப்படை சம்பளம் ரூ.10,000
-வட்டி விகிதம் 8.65%
-சம்பள உயர்வு 10% (ஆண்டு)
-மொத்த நிதி ரூ.1.48 கோடி
ரூ. 15,000 அடிப்படை சம்பளத்தில் ஓய்வூதிய நிதி:
-இபிஎஃப் உறுப்பினர் வயது 25 ஆண்டுகள்
-ஓய்வு வயது 58 வயது
-அடிப்படை சம்பளம் ரூ 15000
-வட்டி விகிதம் 8.65%
-சம்பள உயர்வு 10% (ஆண்டு)
-மொத்த நிதி ரூ 2.32 கோடி
ஒவ்வொரு மாதமும் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் பணத்தின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படுகிறது. இபிஎஃப்பி விதிகளின்படி, நடப்பு நிதியாண்டின் கடைசித் தேதியன்று இருப்புத் தொகையிலிருந்து ஒரு வருடத்தில் ஏதேனும் ஒரு தொகை திரும்பப் பெறப்பட்டால், அதற்கு 12 மாத வட்டி கழிக்கப்படும். இபிஎஃப்ஓ எப்பொழுதும் கணக்கின் தொடக்க மற்றும் இறுதி இருப்பை எடுக்கும். இதைக் கணக்கிட, மாதாந்திர நடப்பு இருப்பு வட்டி விகிதம் / 1200 ஆல் பெருக்கப்படுகிறது. ஆண்டின் இறுதி இருப்பு (PF இருப்பு) அதன் தொடக்க இருப்பு + பங்களிப்பு-திரும்பப் பெறுதல் (ஏதேனும் இருந்தால்) + வட்டி.
-அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி (DA) = ரூ.30,000
-பணியாளர் பங்களிப்பு இபிஎஃப் = ரூ.30,000 இல் 12% = ரூ.3,600
-முதலாளி பங்களிப்பு இபிஎஸ் = ரூ.1,250
-முதலாளி பங்களிப்பு இபிஎஃப் = (ரூ.3,600-ரூ.1,250) = ரூ.2,350
-மொத்த மாதாந்திர இபிஎஃப் பங்களிப்பு = ரூ.3,600 + ரூ.2350 = ரூ.5,950
மேலும் படிக்க | ATM vs Debit Cards: இரண்டு கார்டுகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ