EPF தெரியும்... அதென்ன VPF? VPF மூலம் ஊழியர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்னென்ன?
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் செய்யப்படும் தன்னார்வப் பங்களிப்பு, தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (விபிஎஃப்) என அழைக்கப்படுகிறது, இதனை நாம் தன்னார்வ ஓய்வூதிய நிதி என்றும் அழைக்கலாம்.
சம்பளம் பெறும் ஊழியர்கள் அனைவரும் தங்களது சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை இபிஎஃப் எனப்படும் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு செலுத்துகின்றனர். ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளத்திலிருந்து இபிஎஃப்க்கான தொகை கழிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய இபிஎஃப் விதிமுறைகளின்படி, நீங்கள் தானாகவே உங்கள் சம்பளத்தில் 12 சதவீதத்தை இபிஎஃப் கணக்கில் செலுத்த வேண்டும். மேலும் உங்கள் முதலாளியும் குறிப்பிட்ட அளவு பங்களிப்பு செய்ய வேண்டும். முதலாளியின் பங்களிப்பு அதிகபட்சமாக 12% வரை இருக்கும் போது, ஒரு ஊழியராக உங்களது விருப்பப்படி பங்களிப்பு தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (விபிஎஃப்) மூலம் குறைந்தபட்சம் 12% க்கும் அதிகமாக இருக்கலாம்.
மேலும் படிக்க | அரசு ஊழியர்கள் ஓவர்டைம் சம்பளம் கோர முடியாது: உச்சநீதிமன்றம்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் செய்யப்படும் தன்னார்வப் பங்களிப்பு, தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (விபிஎஃப்) என அழைக்கப்படுகிறது, இதனை நாம் தன்னார்வ ஓய்வூதிய நிதி என்றும் அழைக்கலாம். இந்த பங்களிப்பு ஒரு ஊழியர் தனது இபிஎஃப்-க்கு பங்களிக்க வேண்டிய 12% ஐ விட அதிகமாகும், ஊழியரது அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 100% வரை மொத்தமாக பங்களிக்கலாம். இபிஎஃப் என்பது விபிஎஃப்-ன் தொடர்ச்சியாகும், ஒரு குறிப்பிட்ட சம்பளக் கணக்கு மூலம் மாதாந்திர அலவன்ஸ்களை பெறும் ஊழியர்களுக்கு மட்டுமே விபிஎஃப் விருப்பம் வழங்கப்படுகிறது. விபிஎஃப் வரி-சேமிப்பின் சிறந்த மாற்றாகும், ஏனெனில் இது இஇஇ என்கிற வகையின் கீழ் வருகிறது. இது ஒரு கணிசமான சேமிப்பு போர்ட்ஃபோலியோவை உருவாக்குவதில் ஊழியர்களுக்கு உதவுவதோட்டு வாழ்க்கையில் ஒரு சிறந்த மைல்கல்லாக அமைகிறது.
நீண்ட கால முதலீடுகளுடன் ஒப்பிடும்போது, விபிஎஃப் ஆபத்து இல்லாத பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் விபிஎஃப்-ஐ திரும்ப பெற்றுக்கொள்ளலாம். ஊழியரது ஆதார் அட்டை, விபிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்டு இருப்பதால், நீங்கள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும்போது கணக்கை மாற்றிக்கொள்வது எளிமையாக இருக்கும். உங்கள் வருடாந்திர இபிஎஃப் பங்களிப்பு ரூ. 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், உங்களின் மொத்த பங்களிப்புகளை ரூ.2.5 லட்சமாகக் கொண்டுவர நீங்கள் போதுமான அளவு விபிஎஃப்-ஐ தொடங்கவேண்டும். உதாரணமாக நீங்கள் இபிஎஃப்க்கு மாதம் ரூ.12,500 அல்லது ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் செலுத்துகிறீர்கள் என்றால் நீங்கள் இலவசமாக மாதம் ரூ.8,333 அல்லது ஆண்டுக்கு ரூ.1 லட்சம் என நீங்கள் விபிஎஃப்-க்கு பங்களிக்க வேண்டும். உங்களது மொத்த பங்களிப்பில் 8.1 சதவீத வரியில்லா வருமானமாக ரூ.2.5 லட்சத்தை பெறலாம்.
மேலும் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் விரைவில் அதிகரிக்கப் போகிறது என புதிய புதுப்பிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இப்போது ஓய்வூதிய வரம்பை அதிகரிக்கப் போகிறது. அதன் பிறகு ஊழியர்களின் ஓய்வூதியம் இரட்டிப்பாகக்கூடும். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தற்போது விசாரணை நடந்து வருகிறது. அரசாங்கத்தின் இந்த முடிவிற்குப் பிறகு, ஒரு ஊழியரின் சம்பளம் எவ்வளவு குறைவாக இருந்தாலும், ஓய்வூதியம் ரூ.15,000 என்ற தொகையின் அடிப்படையிலேயே கணக்கிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Gold Loan: மிக மலிவான தங்க கடன் வழங்கும் வங்கிகள் இவைதான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ