EPF Withdrawal Rules: சம்பள வர்க்கத்தினர் அனைவரும் பெரும்பாலும் இபிஎஃப் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஊழியர்கள் மாதா மாதம் தங்கள் ஊதியத்தில் ஒரு பகுதியை பணியாளர் வைப்பு நிதியில் பங்களிக்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் பணியாளர்களின் கணக்கில் மாதா மாதம் டெபாசிட் செய்கின்றது. பிஎஃப் தொகை பணி ஓய்விற்கு பிறகான காலத்தில் உதவும் முக்கிய சேமிப்பாக பார்க்கப்படுகின்றது. எனினும், சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் ஓய்வுக்கு முன்னரே பிஎஃப் தொகையை எடுக்க முடியும். பணி ஓய்வுக்கு முன்னரே பிஎஃப் கணக்கிலிருந்து எவ்வளவு தொகையை எடுக்க முடியும்? எந்த சந்தர்ப்பங்களில் இதை எடுக்கலாம்? இதற்கான விதிகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிஎஃப் தொகையை ப்ரீ-மெச்யூர் வித்டிராயல் செய்வதற்கான விதிகள் (PF Premature Withdrawal Rules)


பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO), பணியாளர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பே இபிஎஃப் கணக்கில் (EPF Account) இருந்து பணம் எடுக்கும் வசதியை அளிக்கின்றது. இரண்டு நிபந்தனைகளின் கீழ் EPF இலிருந்து முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம்.


-  ஒன்று பணியாளருக்கு 60 வயதாகி இருக்க வேண்டும். 
- மற்றொன்று பிஎஃப் உறுப்பினர் வேலையை விட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகி இருக்க வேண்டும். 


இது தவிர, இபிஎஃப் தொகையின் (EPF Amount) ஒரு பகுதியையும் ஓய்வுக்கு முன்னரே திரும்பப் பெறலாம். ஓய்வுக்கு முன்னரே பணத்தை எடுக்க சில விதிகள் உள்ளன. 


எந்தெந்த தேவைகளுக்காக இபிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும்? 


1. மருத்துவ சிகிச்சை


மருத்துவ சிகிச்சைக்கு (Medical Treatment) பணம் தேவைப்பட்டால், அதை எடுப்பதற்கான தகுதியைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. பணியாளர் தனது மாதாந்திர அடிப்படைத் தொகையின் ஆறு மடங்கு தொகை அல்லது நிறுவனம் வழங்கிய தொகை மற்றும் அதில் பெறப்பட்ட வட்டி என அனைத்தையும் எடுக்கலாம். இந்த இரண்டில் எது குறைவான தொகையோ அதை எடுக்க முடியும். 


மேலும் படிக்க | வாக்காளர் அடையாள அட்டை... இந்த தப்பை செஞ்சுடாதீங்க.. கம்பி எண்ண வேண்டி வரும்!


2. திருமணத்திற்கு


பணியாளர் தனது திருமணம், அல்லது தனது மகன், மகள், சகோதர, சகோதர்களின் திருமணம் போன்றவற்றுக்கு பிஎஃப் -இல் இருந்து பணம் எடுக்கலாம். இதற்கு 7 ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும். பணியாளர் அதுவரை செய்த பங்களிப்பில் 50% எடுக்கலாம்.


3. கல்விக்காக


உங்கள் கல்விக்காகவோ அல்லது குழந்தையின் கல்விக்காகவோ பணத்தை எடுக்கலாம். இங்கேயும் உங்கள் பங்களிப்பில் 50% வரை எடுக்க முடியும். இதற்கும், 7 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை பொருந்தும்.


4. வீடு/நிலம் வாங்க அல்லது கட்ட


வீடு/நிலம் வாங்க அல்லது கட்டவும் பணம் எடுக்கலாம். இதற்கு குறைந்தது 5 ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும். இதற்கு பணம் எடுக்கும்போது, அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியின் 36 மடங்கும் மற்றும் நிலத்திற்கு 24 மடங்கும் எடுக்கலாம். இதில் இன்னும் சில நிபந்தனைகள் உள்ளன. வீடு அல்லது நிலம் உங்கள் பெயரில் அல்லது கூட்டாக உங்கள் மற்றும் உங்கள் கணவன் / மனைவி பெயரில் இருக்க வேண்டும். இந்த காரணத்திற்கு முழு பணிக்காலத்தில் ஒரு முறை மட்டுமே பணத்தை எடுக்க முடியும். வீடு கட்ட பணம் எடுப்பதாக இருந்தால், முதல் தவணையை திரும்பப் பெற்ற ஆறு மாதங்களுக்குள் கட்டுமானப் பணியை தொடங்கி 12 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது.


5. வீட்டுக் கடனை அடைக்க


வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான நிதிக்காக பிஎஃப் தொகையை எடுக்க விரும்பினால், 10 வருட கால சேவையை முடித்திருக்க வேண்டும். உங்களின் மாதாந்திர அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி 36 மடங்கு அல்லது நிறுவனத்தின் பங்களிப்பின் முழுத் தொகையையும் (வட்டி உட்பட) அல்லது உங்கள் வீட்டுக் கடனுக்கான அசல் மற்றும் வட்டிக்கு சமமான தொகையை (எது குறைவாக இருந்தாலும்) எடுக்கலாம். இங்கும் வீடு அல்லது நிலம் உங்கள் பெயரில் அல்லது கூட்டாக உங்கள் மற்றும் உங்கள் கணவன் / மனைவி பெயரில் இருக்க வேண்டும். வீட்டுக் கடனுக்காக சில முக்கியமான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். வட்டி உட்பட உங்கள் பிஎஃப் கணக்கில் (மனைவியுடன் இணைந்து) 20,000 ரூபாய்க்கு மேல் இருக்க வேண்டும்.


7. வீட்டை புதுப்பிக்க 


5 வருடங்கள் சேவையில் இருந்தால், நீங்கள் வீட்டை புதுப்பிப்பதற்கான பணத்தை எடுக்கலாம். உங்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியின் 12 மடங்கு அல்லது பிஎஃப் பங்களிப்பு (வட்டியுடன்) அல்லது புதுப்பித்தலுக்கான மொத்தச் செலவு ஆகியவற்றில் எது குறைவாக இருந்தாலும் அதை நீங்கள் திரும்பப் பெறலாம். வீடு அல்லது நிலம் உங்கள் பெயரில் அல்லது கூட்டாக உங்கள் மனைவி / கணவன் பெயரில் இருக்க வேண்டும். இந்த காரணத்திற்காக பணியாளர் இரண்டு முறை பணத்தை எடுக்கலாம்.


மேலும் படிக்க | சேமிப்புக் கணக்குக்கு வரி விதிக்கப்படுமா? வருமான வரிச்சட்டம் கூறுவது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ