EPF தொகைக்கு வரி விதிக்கப்படுமா? ஓய்வுக்கு முன்னரே முழு பிஎஃப் தொகையை எடுக்க முடியுமா?
EPFO Withdrawal: மற்ற வருமானங்களைப் போலவே, இபிஎஃப் கணக்குகளின் வருமானத்திற்கும் பல்வேறு சூழ்நிலைகளில் வரி விதிக்கப்படும்.
EPFO Withdrawal: பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) அமைப்பு வழங்கும் இபிஎஃப் கணக்கு இந்தியாவில் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு கிடைக்கக்கூடிய மிகவும் பிரபலமான ஓய்வூதிய நிதி விருப்பங்களில் ஒன்றாகும். இதன் ஒரு பகுதியாக, ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதத்தை பங்களிக்கின்றனர். மேலும் அவர்களின் இபிஎஃப் கணக்குகளில் அவர்களது முதலாளி / நிறுவனத்தின் தரப்பில் இருந்தும் சமமான பங்களிப்பு வழங்கப்படுகிறது.
இபிஎஃப் தொகை பணியாளர் பணியில் இருக்கும் காலத்தில் காலப்போக்கில் ஒரு பெரிய தொகையாக சேர்க்கப்பட்டு, பணியாளர் ஓய்வு பெற்றவுடன், வட்டியுடன் திரும்ப கிடைக்கின்றது. இருப்பினும், மற்ற வருமானங்களைப் போலவே, இபிஎஃப் கணக்குகளின் வருமானத்திற்கும் பல்வேறு சூழ்நிலைகளில் வரி விதிக்கப்படும்.
PF தொகையை எடுக்கும்போது விதிக்கப்படும் வருமான வரி அல்லது TDS தாக்கங்கள் பற்றி இங்கே காணலாம்.
இபிஎஃப் (EPF) விதிகளின்படி, ஊழியர்கள் தங்கள் பிஎஃப் பணத்தை திரும்ப எடுப்பதற்கு முன் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், நேரத்திற்கு முன்னரே தொகையை எடுக்க வேண்டுமானால் (premature withdrawal), அதற்கும் சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
- EPFO ஆல் 55 வயதாக நிர்ணயிக்கப்பட்ட ஓய்வூதிய வயதை அடைந்தவுடன் மட்டுமே முழு PF தொகையையும் திரும்ப எடுக்க முடியும்.
- ஒரு ஊழியர் ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு பிஎஃப் நிதியில் 90 சதவீதத்தை எடுக்கலாம்.
– வேலையை விட்டு ஒரு மாத காலம் வேலை இல்லாமல் இருந்தால் 75 சதவீத பிஎஃப் நிதியையும், இரண்டு மாத வேலையில்லாமல் இருந்தால் முழு பிஎஃப் தொகையையும் திரும்பப் பெறலாம்.
இந்த விதிகள் ஊழியர்களுக்கு நிதி அவசரநிலைகள் மற்றும் முக்கிய வாழ்க்கை நிகழ்வுகள் உட்பட பல்வேறு நோக்கங்களுக்காக அவர்களின் பிஎஃப் நிதியை அணுகுவதற்கான விருப்பங்களை வழங்குகிறது. பிஎஃப் தொகையை வித்ட்ரா செய்வதற்கான குறிப்பிட்ட நிபந்தனைகள் மற்றும் ஆவணத் தேவைகள் மாறுபடலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஆகையால் பிஎஃப் தொகையை எடுக்க விரும்பும் நபர்கள் திரும்பப் பெறும் செயல்முறை குறித்த விரிவான வழிகாட்டுதலுக்கு தங்கள் முதலாளி / நிறுவனம் அல்லது EPFO ஐத் தொடர்பு கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | 7th Pay Commission டபுள் ஜாக்பாட்: அடி தூள்... அகவிலைப்படியுடன் இதுவும் உயரும்!!
பிஎஃப் தொகைக்கான வரி விதிகள்
- ஊழியர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கில் (EPF Account) செலுத்தும் பங்களிப்புகளுக்கு பொதுவாக வரி விதிக்கப்படாது. இருப்பினும், முந்தைய ஆண்டுகளில் பங்களிப்புகள் மீது பிரிவு 80C இன் கீழ் ஒருவர் விலக்கு கோரலாம். இந்த வழக்கில், அந்த ஆண்டுகளில் 80C கோரப்படவில்லை என்றால், அவர்/அவள் கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும்.
- ஊழியர்களின் பங்களிப்புகளில் பெறப்படும் வட்டிக்கு பொதுவாக மற்ற ஆதாரங்களில் இருந்து வரும் வருமானமாக (income from other sources) வரி விதிக்கப்படும்.
– முதலாளியின் பங்களிப்பு மற்றும் அதில் கிடைக்கும் வட்டி ஆகியவை வரிக் கணக்கில் ‘சம்பளம்’ என்ற தலைப்பின் கீழ் முழுமையாக வரி விதிக்கப்படும்.
மற்றொரு சூழ்நிலையில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களில் 5 ஆண்டுகள் தொடர்ச்சியான சேவையை முடிப்பதற்கு முன், ஒரு ஊழியர் தனது பிஎஃப் நிதியை (PF Amount) எடுக்க முடிவு செய்தால், அதில் TDS கழிக்கப்படும். இருப்பினும், இந்த தொகை 50,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் இதில் சலுகை கிடைக்கும்.
மறுபுறம், ஊழியர் 5 வருட தொடர்ச்சியான சேவைக்குப் பிறகு தொகையை எடுத்தால், எடுக்கப்படும் இபிஎஃப் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படும். கட்டாய ‘5 வருட சேவையை’ கணக்கிடும் போது, ஊழியர் தனது EPF இருப்புத்தொகையை பழைய நிறுவனத்திடமிருந்து புதிய நிறுவனத்திற்கு மாற்றி இருந்தால், முந்தைய நிறுவனத்துடனான பணிக்காலமும் சேர்க்கப்படும்.
மேலும் படிக்க | மகிளா சம்மான் சேமிப்புத் திட்டம் மற்றும் வங்கிகளில் வட்டி எது அதிக பலன் தரும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ