EPFO Higher Pension: பிஎஃப் சந்தாதாரர்களுக்கு உயர் ஓய்வூதியம் குறித்த முக்கிய அப்டேட்
EPFO Higher Pension: EPFO -இல், 16 நவம்பர் 1995 இல் இருந்து, ஓய்வூதியத்திற்கான சம்பளமாக 5,000 ரூபாய் என்ற அளவு வாரியத்தால் தீர்மானிக்கப்பட்டது. எனினும், ஜூன் 1, 2001 முதல், இது 6,500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.
EPFO Higher Pension: PF உறுப்பினரா நீங்கள்? உயர் ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவரா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. பிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, இப்போது உயர் ஓய்வூதிய ஊழியர்களுக்கு ஒரு பெரிய வசதியை வழங்குகிறது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உயர் ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படும்? இதில் இபிஎஃப்ஓ இப்போது வித்தியாசத் தொகையை உங்கள் சொந்த நிதியிலிருந்து கழிக்குமா? இதை நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது? இதை பற்றி இங்கே காணலாம்.
Higher Pension: உயர் ஓய்வூதிய பலன் யாருக்கு கிடைக்கும்?
PF வரம்பிற்குள் வரும் அதிகாரி நிலையில் உள்ள ஊழியர்கள் உயர் ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர்களாகிறார்கள். வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அந்த இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (PF Members) இந்த வசதியை வழங்குகிறது. இதில், உயர் ஓய்வூதியத்திற்காக EPFO க்கு வழங்கப்பட்ட வித்தியாசத் தொகை, இபிஎஃப் சந்தாதாரர்களின் (EPF Subscribers) டெபாசிட் செய்யப்பட்ட PF நிதியில் இருந்து கழிக்கப்படலாம். செப்டம்பர் 1, 2014 க்குப் பிறகு ஒரு ஊழியர் ஓய்வு பெற்றிருந்தால், எதிர்காலத்தில் ஓய்வுபெறவுள்ள ஊழியர்களுக்கு மட்டுமே உயர் ஓய்வூதிய (Higher Pension) பலன் கிடைக்கும்.
சம்பள பதிவுகளின் சரிபார்ப்பு
அதிக ஓய்வூதியத்திற்காக, ஊழியர்களின் சம்பளப் பதிவுகள் போபாலில் உள்ள EPFO ஆல் சரிபார்க்கப்படுகின்றன. போபால் மண்டல அலுவலக ஆய்வாளர் இந்த ஊழியர்களின் சம்பளப் பதிவுகளைச் சரிபார்க்க பல்வேறு நிறுவனங்களுக்குச் சென்று வருகிறார். இதே போன்ற செயல்முறை மற்ற இடங்களிலும் தொடரும் என கூறப்படுகின்றது.
உயர் ஓய்வூதியத்திற்கான கூடுதல் தொகை
EPFO -இல், 16 நவம்பர் 1995 இல் இருந்து, ஓய்வூதியத்திற்கான சம்பளமாக 5,000 ரூபாய் என்ற அளவு வாரியத்தால் தீர்மானிக்கப்பட்டது. எனினும், ஜூன் 1, 2001 முதல், இது 6,500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்பின், இது மீண்டும் மாற்றப்பட்டது. 2014 செப்டம்பர் 1 முதல், ஓய்வூதியம் பெறுவதற்கான சம்பளம், 15,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த தொகையில், 8.33 சதவீதம் ஓய்வூதிய நிதி, முதலாளி / நிறுவனத்தின் பங்களிப்பில் இருந்து கழிக்கப்படுகிறது. இதில் மத்திய அரசு அளிக்கும் பங்கு 1.16% ஆக உள்ளது. இதில் இபிஎஃப்ஓ -வால் எடுக்கப்பட்ட 0.5% நிர்வாகக் கட்டணம் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு பாக்கிகள், அதாவது அரியர் தொகையும் சேர்த்து மொத்தத் தொகையாக அமைகிறது. இப்போது உயர் ஓய்வூதியம் உருவான பிறகு இந்த முழுத் தொகையில் வரும் வித்தியாசம், வித்தியாசத் தொகை எனப்படும்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு
அலுவலக பணிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சார்பில் பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான பணம், அவர்களது சம்பளத்தில் இருந்து கழிக்கப்படுகிறது. பொதுவாக ஊழியர்களுக்கு இது ஓய்வூதிய நிதிக்கான முதல் படியாக இருக்கும். உங்கள் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை கழித்து அந்த தொகையை பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறது. அதே அளவு தொகையை நிறுவனமும் ஊழியரின் கணக்கில் டெபாசிட் செய்யும். அந்த தொகைக்கு அரசாங்கம் பிஎஃப் சந்தாதாரர்களுக்கு வருடாந்திர வட்டியும் வழங்குகிறது.
மேலும் படிக்க | PM AASHA திட்டம்: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகளுக்கு அரசு அளித்த பரிசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ