யோகாசனங்கள்: கீழ் முதுகு வலியைக் குறைக்கும் UPAMPBK யோகாசனம் வழங்கும் ரகசிய பலன்கள்!

யோகா என்பது பழமையான பயிற்சி. இது உடலில் ஏற்படும் பலவிதப் பிரச்சனையைச் சரிசெய்கிறது என்று யோகா பயிற்சியாளர்கள் கூறுகின்றனர். கீழ் முதுகு வலியைச் சரிசெய்ய சில சிறந்த யோகாசனங்கள் பயிற்சியாளர்கள் வழங்குகின்றன. அதில் குறிப்பிட்ட 7 யோகாசனங்கள் பற்றி இங்குப் பார்க்கலாம். 

முதுகு வலியைக் குறைத்து உடலுக்குச் சிறந்த ஆரோக்கியத்தை அளிக்க உதவும் சிறந்த யோகாசனங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. தினமும் காலை அல்லது மாலை யோகாசனங்கள் தொடர்ந்து செய்துவந்தால் முதுகு வலிப் பிரச்சனையைக் கணிசமாகக் குறைக்கலாம். மேலும் உடலுக்கு நல்ல நெகிழ்வுத்தன்மையை பாதுகாக்க இந்த யோகாசனங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

1 /8

உத்தனாசனா: இந்த யோகாசனம் செய்வதால் உங்கள் மனதை அமைதிப்படுத்த முடியும், மேலும் பதட்டத்தை நீக்கி உடல் சோர்வு தணிக்கிறது மற்றும் உடலுக்கு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அளிக்கிறது.

2 /8

புஜங்காசனம்: இந்த யோகாசனம் முதுகெலும்பைப் பலப்படுத்தச் செய்கிறது,நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மேலும் இது நுரையீரல் திறனை அதிகரிக்கவும், செரிமான உறுப்புகளைத் தூண்டி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

3 /8

அதோ முக ஸ்வனாசனா : இந்த யோகாசனம் உங்கள் முதுகு வலியைக் குறைக்கிறது. மேலும் தசைகளைப் பலப்படுத்தி அசௌகரியத்தைக் குறைக்கிறது. 

4 /8

மர்ஜாரியாசனம்: இந்த யோகாசனம் உங்கள் முதுகெலும்பைப் பலப்படுத்துகிறது. தோள்களை வலிமையாக்கி உடலுக்கு நன்மை அளிக்கிறது.   

5 /8

பசிமோத்தனாசனம்: இந்த யோகாசனம் செய்வதால் உடலில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சனைகளைச் சரிசெய்கிறது. 

6 /8

பலாசனம்: மன அழுத்தத்தைக் குறைத்து முதுகுத்தண்டு நெகிழ்வுத்தன்மையை ஆதரிக்கிறது. செரிமானம், மாதவிடாய் போன்ற அசௌகரியத்தைக் குறைக்கிறது.   

7 /8

கபோதாசனம்: இந்த யோகாசனம் உங்கள் கைகள், தொடைகள், முதுகெலும்பு, இடுப்பு மற்றும் கீழ் முதுகு தசைகளின் நெகிழ்வுத்தன்மையை ஆதரிக்கிறது. மேலும் இது கீழ் முதுகு வலிக் குறைக்கச் செய்து உடலுக்கு ஒட்டுமொத்த நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது  

8 /8

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)