ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதில் அதிரடி மாற்றம் செய்த EPFO!
இந்தியாவில் ஓய்வுபெறுவதற்கான அதிகபட்ச வயது 58 முதல் 65 வயது வரை ஆகும், இந்த வரம்பின் கீழ் அனைத்து வகையான தனியார் மற்றும் அரசு ஊழியர்களும் அடங்குவார்கள்.
ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றது, அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) முடிவு செய்திருக்கிறது. நாடு முழுவதும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஓய்வூதிய வயதை அதிகரிக்கும் முடிவை வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) பரிசீலனை செய்து வருகிறது. இதுகுறித்து இபிஎஃப்ஓ வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஓய்வூதிய வயதை அதிகரிப்பதன் மூலம், ஓய்வூதிய முறையின் சுமை கணிசமாகக் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு அசத்தல் செய்தி: மீண்டும் வருகிறதா பழைய ஓய்வூதியத் திட்டம்?
அதுமட்டுமல்லாது இந்த செயல்முறையின் மூலமாக அரசாங்கத்திற்கும் அதன் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கப்பெறும், இதன் காரணமாக தான் ஓய்வூதிய வயதை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது. 2047 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 140 மில்லியனுக்கும் அதிகரிக்கக்கூடும் என்பதால் ஓய்வூதிய நிதி மீதான அழுத்தம் அதிகரித்துவிடும் மற்றும் இது தவிர மற்ற நாடுகளில் ஓய்வு பெறும் வயது 67 ஆண்டுகள் வரை உள்ளது.
ஓய்வுபெறும் வயதை உயர்த்தினால், ஊழியர்கள் ஓய்வூதிய நிதியில் அதிக பணம் டெபாசிட் செய்வார்கள் அப்போது ஊழியர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவில் ஓய்வுபெறுவதற்கான அதிகபட்ச வயது 58 முதல் 65 வயது வரை ஆகும், இந்த வரம்பின் கீழ் அனைத்து வகையான தனியார் மற்றும் அரசு ஊழியர்களும் அடங்குவார்கள். ஐரோப்பிய யூனியனை பொறுத்தவரையிலும் அங்கு சராசரியாக ஓய்வு பெறும் வயது 65 ஆண்டுகள் ஆகும், அதுமட்டுமல்லாது டென்மார்க், இத்தாலி மற்றும் ஐரோப்பாவின் கிரீஸ் நாடுகளில் ஓய்வு பெறும் வயது 67 ஆகவும், அமெரிக்காவில் ஓய்வு பெறும் வயது 66 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஏடிஎம்மில் பணம் எடுக்கப்போறீங்களா, அப்போ உடனே இத படிங்க
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ