ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) ஊழியர்களின் இபிஎஸ் ஓய்வூதியத்திற்கான அடிப்படை சம்பளத்தை அதிகபட்சமாக ரூ.15,000 என நிர்ணயித்துள்ளது.  உச்ச நீதிமன்றத்தில்  ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் இந்த சம்பள வரம்பை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.  இந்த வழக்கு தற்போது சப் ஜூடிஸில் உள்ளது, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.  ஊழியர்களின் ஓய்வூதியத்தை அவர்கள் இறுதியில் பெறக்கூடிய அதிக சம்பளத்தை வைத்து கணக்கிடலாம் என்று கோரப்பட்டுள்ளது.  இந்த முடிவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தால் ஊழியர்களுக்கு பல மடங்கு  இபிஎஸ் ஓய்வூதியம் கிடைக்கும்.  ஓய்வூதியம் பெற 10 ஆண்டுகளுக்கு இபிஎஃப்-க்கு பங்களிக்க வேண்டியது அவசியம் மற்றும் ஊழியர்கள் 20 ஆண்டுகால சேவையை முடித்த பிறகு அவர்களுக்கு 2 ஆண்டுகள் வெயிட்டேஜ் வழங்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Budget 2023: ரயில்வே பட்ஜெட் 2023ல் என்ன எதிர்பார்க்கலாம்? 



ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) விதியின்படி, ஒரு ஊழியர் ஜூன் 1, 2015 முதல் பணிபுரிந்து, 14 ஆண்டுகள் பணியில் சேவை புரிந்த பிறகு ஓய்வூதியம் பெற விரும்பினால், அவருடைய ஓய்வூதியம் ரூ.15,000த்திற்கே கணக்கு செய்யப்படும், அந்த இபிஎஸ் ஊழியரின் சம்பளம் ரூ.20,000ஆக இருந்தாலும் இதே முறைதான் பின்பற்றப்படும்.  ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.30,000 ஆக இருந்தாலும், பழைய ஃபார்முலாவின்படி, 14 ஆண்டுகள் சேவை நிறைவடைந்தவுடன் ஜூன் 2, 2030 முதல் ஊழியர் சுமார் 3000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறுவார்.  தற்போது உச்ச நீதிமன்றம் ஊழியர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்தால் ஊழியர்களின் ஓய்வூதியம் கணிசமாக உயர்ந்து அவர்களின் பணப்பையை நிரப்பும்.


உதாரணமாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் உள்ள ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில்  33 ஆண்டுகள் சேவை புரிந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம்.  அவர் இறுதியில் பெற்ற அடிப்படை சம்பளம் ரூ.50,000 எனில் தற்போதுள்ள ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வூதியம் அதிகபட்சமாக ரூ.15,000 சம்பளத்தில் மட்டுமே கணக்கிடப்படும்.  ஓய்வூதிய ஃபார்முலாவின் படி, 33 ஆண்டுகள்+2= 35/70×15,000 என்று கணக்கிட்டால் ஊழியர்களுக்கு கிடைக்கக்கூடிய ஓய்வூதியம் ரூ.7,500 ஆகும்.  இதுதான் அதிகப்படியான இபிஎஸ் ஓய்வூதியம்.  அதேசமயம் ஓய்வூதிய வரம்பை நீக்கிய பின், கடைசி சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியத்தை சேர்த்தால், அந்த ஊழியருக்கு ரூ.25000 ஓய்வூதியம் கிடைக்கும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: பட்ஜெட்டுக்குப் பிறகு அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்படுமா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ