7th Pay Commission: பட்ஜெட்டுக்குப் பிறகு அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்படுமா!

7th Pay Commission Update: மத்திய அரசு அரசு ஊழியர்களின் அகவிலைப்படி  (டிஏ) மார்ச் 2023 முதல் உயர்த்தப்படலாம் என்றும், இந்த உயர்வு 2023  ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 15, 2023, 07:13 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வின் காரணமாக ஏற்படும் கூடுதல் நிதி தாக்கங்கள் ஆண்டுக்கு ரூ.6,591.36 கோடி.
  • DA 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • 2023 ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படலாம்.
7th Pay Commission: பட்ஜெட்டுக்குப் பிறகு அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்படுமா! title=

மத்திய பட்ஜெட் 2023க்கு பிறகு அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையை பிப்ரவரி 1 ஆம் தேதி வழங்க உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு ஊழியர்களின் சம்பளம் பொருத்தும் காரணியை (Fitment Factor) அரசு திருத்தியமைக்கலாம் என நம்பப்படுகிறது. தற்போது பொதுவான பொருத்தக் காரணி 2.57 மடங்கு உள்ளது.

இதனை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த உயர்வால் ஊதியம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயரும். முன்னதாக, மத்திய அரசு, அரசு ஊழியர்களின் அகவிலைப்படி  (டிஏ) மார்ச் 2023 முதல் உயர்த்தப்படலாம் என்றும், இந்த உயர்வு 2023  ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: பட்ஜெட்டுக்குப் பிறகு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ நிலுவைத் தொகை?

7வது ஊதியக் குழு: ஃபிட்மென்ட் காரணியில் உயர்த்தப்பட்டால் கிடைக்கும் சம்பள உயர்வு கணக்கீடு

அரசாங்கம் ஃபிட்மென்ட் காரணியை 3 மடங்கு உயர்த்தினால், அலவன்ஸ்கள் தவிர்த்து ஊழியர்களின் சம்பளம் 18,000 X 2.57 = ரூ 46,260 ஆக இருக்கும். அதே நேரத்தில், ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டால், சம்பளம் 26000 X 3.68 = ரூ.95,680. 3 மடங்கு ஃபிட்மென்ட் காரணியை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், சம்பளம் 21000 X 3 = ரூ 63,000 ஆக இருக்கும்.

7வது சம்பள கமிஷன்: DA 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 38 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது

அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் 12 மாத சராசரி அதிகரிப்பின் அடிப்படையில், 01.07.2022 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் தவணையாக 4 சதவீதம் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் வழங்க மத்திய அமைச்சரவை 28 செப்டம்பர் 2022 அன்று ஒப்புதல் அளித்தது. 01.07.2022 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் முறையே அதிக அளவு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் பெற தகுதியுடையவர்களாக மாறுவார்கள். 

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியின் இந்த அதிகரிப்பின் காரணமாக ஏற்படும் கூடுதல் நிதி தாக்கங்கள் ஆண்டுக்கு ரூ.6,591.36 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது; 2022-23 நிதியாண்டில் ரூ.4,394.24 கோடி (அதாவது ஜூலை, 2022 முதல் பிப்ரவரி, 2023 வரையிலான 8 மாத காலத்திற்கு). ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை படி உயர்வு  காரணமாக ஏற்படும் கூடுதல் நிதி தாக்கங்கள் ஆண்டுக்கு ரூ.6,261.20 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது; 2022-23 நிதியாண்டில் ரூ.4,174.12 கோடி (அதாவது ஜூலை, 2022 முதல் பிப்ரவரி, 2023 வரையிலான 8 மாத காலத்திற்கு).

மேலும் படிக்க | 7th Pay Commission: HRA விதிகளில் மாற்றம்! இனி இவர்களுக்கு அலவன்ஸ்கள் கிடையாது!

மேலும் படிக்க | உங்கள் பான், ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுவிட்டதா என்பதை கண்டறிவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

Trending News