EPFO Pension: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது (இபிஎஃப்ஓ) 'நிர்பாத் சேவா' என்கிற திட்டத்தை நடத்துகிறது. இந்த திட்டமானது பணியிலிருந்து ஓய்வுபெற்ற இபிஎஃப்ஓ-ன் உறுப்பினர்கள் சில நாட்களிலேயே எவ்வித சிரமமும் தாமதமும் ஏற்படாமல் தங்கள் ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கிறது. இதன் மூலம் இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் தேதியில் மட்டுமே ஓய்வூதியம் செலுத்தும் உத்தரவை (பிபிஓ) பெற முடியும். இதன் கீழ், இபிஎஃப்ஓ -ன் அனைத்து பிராந்திய அலுவலகங்களும் மாதாந்திர வெபினாரை பிரயாஸ் ஒரு பிபிஓவை ஓய்வு பெறும் நாளில் வெளியிடுவதற்கான முயற்சியை ஏற்பாடு செய்கின்றன.
மேலும் படிக்க | மாயமாய் மறைந்த ரூ.2000 நோட்டுகள்!! இனி இவை செல்லாதா?
பிபிஓ என்பது ஒரு தனித்துவமான 12 இலக்க எண்ணாகும், இதனை வைத்து ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்கள் ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்க வேண்டிய ஆயுள் சான்றிதழுடன், பிபிஓ எண்ணும் முக்கியமானது. இப்போது ஒருவரது பிபிஓ எண்ணை தெரிந்துகொள்வது எப்படி என்பதை பின்வருமாறு காண்போம்.
- அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.
- ஓய்வூதியதாரரின் போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும்.
- 'உங்கள் பிபிஓ எண்ணை அறிந்து கொள்ளுங்கள்' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- பிஎஃப் எண்ணின் வங்கிக் கணக்கு எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- இப்போது சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்ததும், உங்களது பிபிஓ எண்ணை பெற்றுக்கொள்ளலாம்.
இபிஎப்ஓ ஆனது ஓய்வுபெறும் ஒவ்வொரு ஊழியருக்கும் கடிதம் மூலமாக பிபிஓ எண்ணை அனுப்புகிறது. இந்த பிபிஓ எண் ஆனது ஓய்வுபெற்ற அல்லது ஓய்வுபெறும் நிலையில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் முக்கியமானதொரு ஆவணமாகும். மத்திய ஓய்வூதிய கணக்கியல் அலுவலகம் (சிபிஏஓ) உடனான எந்தவொரு தொடர்புக்கும் பிபிஓ எண் ஒரு குறிப்பு புள்ளியாக செயல்படுகிறது.
மேலும் படிக்க | உங்ககிட்ட இந்த 50 ரூபாய் நோட்டு இருக்கா? அப்போ உங்களுக்கு ஜாக்பாட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ