EPFO புதிய விதிகள் அறிமுகம்: இனி இது அவசியம்... மத்திய அரசு செய்த அதிரடி மாற்றம்
EPFO Update: இபிஎஃப்ஓ புதிய விதிகளின் வருகையால், பாஸ்புக் பார்ப்பது, ஆன்லைன் க்ளைம் செய்வது, கண்காணிப்பு மற்றும் பணம் எடுப்பது என அனைத்து செயல்முறைகளும் முன்பை விட எளிதாகிவிடும்.
EPFO Update: பிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். வருங்கால வைப்பு நிதி தொடர்பான விதிகளை அரசாங்கம் மாற்றியுள்ளது. இந்த மாற்றம் குறித்த புரிதல் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
EPFO New Rules:
இபிஎஃப்ஓ புதிய விதிகளின் வருகையால், பாஸ்புக் பார்ப்பது, ஆன்லைன் க்ளைம் செய்வது, கண்காணிப்பு மற்றும் பணம் எடுப்பது என அனைத்து செயல்முறைகளும் முன்பை விட எளிதாகிவிடும். இருப்பினும், இதற்கு ஊழியர்கள் முதலில் ஒரு பணியைச் செய்ய வேண்டும். திட்டங்களின் பலன்களை பயனாளிகளுக்கு நேரடியாகவும் வெளிப்படையாகவும் வழங்குவதற்காக ஆதார் கட்டணப் பாலம், அதாவது ஆதார் பேமெண்ட் ப்ரிட்ஜ் (Aadhaar Payment Bridge) மற்றும் 100% பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்தை (100% Biometric Aadhaar Authentication) அமல்படுத்த மத்திய அரசு உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.
இந்த திசையில், 2024-25 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டத்தின் பலன்களை அதிகபட்ச முதலாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு நீட்டிக்க சிறப்பு பிரச்சாரத்தை நடத்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் EPFO க்கு உத்தரவிட்டுள்ளது.
UAN செயல்படுத்துவதற்கான காலக்கெடு
முதல் கட்டத்தில், முதலாளிகள் / நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் உலகளாவிய கணக்கு எண்ணை (UAN) ஆதார் அடிப்படையிலான OTP செயல்முறை மூலம் 30 நவம்பர் 2024க்குள் செயல்படுத்த வேண்டும். புதிய பணியாளர்கள் முதல் தற்போதுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் இந்த செயல்முறை பொருந்தும்.
UAN செயல்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
UAN செயல்படுத்தப்பட்ட பிறகு, இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) EPFO இன் அனைத்து ஆன்லைன் சேவைகளையும் எளிதாகப் பெறலாம். ஊழியர்கள் எந்தெந்த சேவைகளை பெற முடியும்? அந்த விவரத்தை இங்கே காணலாம்.
EPF Account: வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கின் மேலாண்மை
- பிஎஃப் பாஸ்புக்கைப் (PF Passbook) பார்ப்பது மற்றும் பதிவிறக்கம் செய்தல்.
- ஆன்லைனில் க்ளெய்ம்களைச் சமர்ப்பித்தல்.
- தனிப்பட்ட தகவல்களைப் புதுப்பித்தல்.
- க்ளெய்ம்களின் நிகழ்நேர நிலையைக் (Real Time Status) கண்காணிப்பது.
இந்தச் செயல்முறையானது ஊழியர்களுக்கு அவர்களின் வீட்டு வாசலில் 24/7 சேவையை வழங்குகிறது. இது EPFO அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் நீங்குகிறது.
UAN Activation: UAN ஆக்டிவேஷனை செய்வது எப்படி? முழு செயல்முறையை இங்கே காணலாம்.
- முதலில் இபிஎஃப்ஓ போர்டலுக்கு (EPFO Portal) செல்ல வேண்டும்.
-
- Activate UAN என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
- UAN, ஆதார் எண், பெயர் மற்றும் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.
- ஆதார் ஓடிபி வெரிஃபிகேஷனுக்கு ஒப்புதல் அளிக்கவும்.
- Get Authorization PIN என்பதை கிளிக் செய்து OTP -ஐ பெறவும்.
- OTP ஐ உள்ளிட்டு செயல்முறையை முடிக்கவும்.
வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட பின்னர், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு கடவுச்சொல் அனுப்பப்படும்.
இரண்டாவது கட்டத்தில், UAN செயல்படுத்தலில் முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பம் பயோமெட்ரிக் அங்கீகார சேவை சேர்க்கப்படும். இந்த முயற்சியானது ஊழியர்களை டிஜிட்டல் சேவைகளுடன் இணைப்பதிலும், திட்டங்களின் நேரடிப் பலன்களை வழங்குவதிலும் ஒரு பெரிய முன்னேற்றமாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ