EPFO Update: PF உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால், இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) டிஜிட்டல் சிக்னேச்சர் சான்றிதழ் (DSC) மற்றும் முதலாளி / நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்பட்ட மின்-கையொப்ப கோரிக்கைகளை (E-Sign requests) செயலாக்குவதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கான அப்டேட்


மத்திய பிஎஃப் ஆணையரின் முந்தைய சுற்றறிக்கைகள் மூலம் டிஎஸ்சியின் பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டது. இபிஎஃப்ஓ -வில், நிறுவனம் / முதலாளி அல்லது அங்கீகரிக்கப்பட்ட கையொப்பம் இடக்கூடிய நபரிடமிருந்து குறைந்தபட்சம் ஒரு டிஎஸ்சி  பதிவு செய்யப்பட வேண்டும் என இந்த சுற்றறிக்கைகள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.


இ-கவர்னன்ஸ் முன்முயற்சியின் ஒரு பகுதியாக இ-சைன் அறிமுகம் செய்யப்பட்டது, பாதுகாப்பான அங்கீகாரத்தின் அவசியத்தை மேலும் வலியுறுத்துகிறது. தவறான பயன்பாடுகள் இருந்தால், அதற்கு கிடைக்ககூடிய சாத்தியமான சட்டரீதியான விளைவுகளை பற்றி வழிகாட்டுதல்கள் எடுத்துக்காட்டுகின்றன. இவற்றின் மூலம் முதலாளிகள் / நிறுவனங்கள் கோடிட்டுக் காட்டப்பட்ட நடைமுறைகளை உன்னிப்பாகப் பின்பற்றுவது மிகவும் முக்கியமாகிறது.


இ-கவர்னன்ஸ் முன்முயற்சியின் ஒரு பகுதியாக, அக்டோபர் 10 ஆம் தேதி ஓய்வூதிய நிதி அமைப்பு வழங்கிய உத்தரவின்படி, EPFO ​​ஆல் இ-சைன் -ஐப் பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டது. “உரிமை தொடர்பான சட்டரீதியான வருமானங்களை சமர்ப்பித்தல் மற்றும் தொடர்பான ஆவணங்களின் அங்கீகாரம் ஆகியவாற்றுக்கு DSC/e-sign பயன்படுத்தப்படுகின்றது.  DSC/e-sign -இன் பயன்பாடு அனைத்து பங்குதாரர்களின் நலன்களிலும் தாக்கத்தைக் கொண்டுள்ளது. எந்தவொரு தவறான பயன்பாடும் முதலாளிக்கு சட்டரீதியான மாற்றங்களை ஏற்படுத்தலாம்” என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்த புதிய வழிகாட்டுதல்கள் இணக்கம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும். மேலும் நிறுவுதல் தொடர்பான ஆவணங்களுக்கான அங்கீகார செயல்முறையை நெறிப்படுத்துவதையும் இவை நோக்கமாகக் கொண்டுள்ளன.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 குட் நியூஸ்: அகவிலைப்படி உயர்வு, டிஏ அரியர், தீபாவளி போனஸ்


ஆன்லைன் கோரிக்கையை முதலாளிகள் / நிறுவனங்கள் எவ்வாறு சமர்ப்பிப்பது?


- நிறுவனங்கள் ஆன்லைன் கோரிக்கைக் கடிதத்தை யுனிஃபைட் போர்ட்டல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
- இதில் கையொப்பமிட விரும்புபவரின் மூன்று மாதிரி கையொப்பங்கள் இருக்க வேண்டும். இதில் முதலாளி / நிறுவனம் தரப்பு கையொப்பமும் இருக்க வேணுடும்.
- இந்தக் கோரிக்கைகளைச் செயல்படுத்த, உரிமையை விவரிக்கும் புதுப்பிக்கப்பட்ட படிவம் 5A இன்றியமையாதது. 
- கையொப்பமிடுபவர்களின் பெயர் மற்றும் மொபைல் எண்ணையும் இதில் சேர்க்க வேண்டும்.


செயலாக்கத்திற்கான முக்கிய வழிகாட்டுதல்கள்:


-DSC/E-Sign கோரிக்கைக் கடிதம் நிறுவனத்தின் லெட்டர்ஹெட்டில் இருப்பதையும், நிறுவனம் சார்பில் அதில் கையொப்பமிடப்பட்டிருப்பதையும், ஸ்டாம்ப் ஒட்டப்பட்டிருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
- கூடுதலாக, ஆதார் அட்டை அல்லது UAN அட்டை போன்ற, செல்லுபடியாகும் அடையாளச் சான்றுகள் கோரிக்கையுடன் இருக்க வேண்டும். 
- கள அலுவலகங்கள் நியமிக்கப்பட்ட ஆன்லைன் கருவிகளைப் பயன்படுத்தி சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரின் நம்பகத்தன்மையை சரி பார்க்கும்.


கோரிக்கைகளை 15 வேலை நாட்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று EPFO ​​கட்டளையிட்டுள்ளது. சுமூகமான செயலாக்கத்தை எளிதாக்குவதற்கு இந்த தேவைகள் குறித்து முதலாளிகளுக்கும் / நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்பட வேண்டும். DSC அல்லது E-Sign தவறாகப் பயன்படுத்தப்பட்டால், முதலாளிகள் மற்றும் அவர்களது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் என இருவரும் கூட்டாக அதற்குப் பொறுப்பாவார்கள். இந்த புதிய வழிகாட்டுதல்களுடன் இணங்குவதன் தீவிரத்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இபிஎஃப் சந்தாதாரர்களின் (EPF Subscribers) வசதிகளை மேம்படுத்த இபிஎஃப்ஓ எடுக்கும் பல வித முயற்சிகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: அகவிலைப்படிக்கு முன் அரசின் அதிரடி அறிவிப்பு


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ