EPFO new rules: PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி!
இபிஎஃப்ஓ-ன் புதிய விதிகளின் கீழ், உங்களுக்கு பணம் தேவைப்பட்டால், பிஎஃப் கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் வரை எடுத்துக்கொள்ள இபிஎஃப்ஓ அனுமதிக்கிறது.
மக்களின் நலனுக்காக இபிஎஃப்ஓ, அதன் விதிகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. இதன் கீழ் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இபிஎஃப்ஓ கணக்கிலிருந்து எல்ஐசியின் பிரீமியத்தை செலுத்தும் வசதியை பிஎஃப்ஓ வழங்கியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக லட்சக்கணக்கான மக்கள் அவர்களது வேலையை இழந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகின்ற சமயத்தில், தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த சில மாற்றங்கள் அத்தகையோருக்கு கொஞ்சம் ஆறுதலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பிஎஃப் கணக்கிலிருந்து எல்ஐசி-க்கு பணம் எடுக்க, இபிஎஃப்ஓ-ன் புதிய நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும். இதில் முதல் நிபந்தனையாக நீங்கள் இபிஎஃப்ஓ-ன் படிவம் 14ஐ சமர்ப்பிக்க வேண்டும், அதனை தொடர்ந்து எல்ஐசியின் பாலிசி மற்றும் இபிஎஃப்ஓ கணக்கு ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும். இதன் மூலம் பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் நபர் எல்ஐசியின் பிரீமியத்தை செலுத்த முடியும். அடுத்ததாக இரண்டாவது நிபந்தனை என்னவென்றால், நீங்கள் இபிஎஃப்ஓ-ன் படிவம் 14ஐ நிரப்பும்போது, உங்கள் கணக்கில் குறைந்தது இரண்டு மாத பிரீமியம் தொகை இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | ரூ. 96,000 வரை உயரப்போகும் அரசு ஊழியர்களின் சம்பளம்! முழு விவரம்!
இந்த இரண்டு நிபந்தனைகளை தொடர்ந்து மூன்றாவது நிபந்தனையாக எல்ஐசியின் பாலிசிக்காக மட்டுமே கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இபிஎஃப்ஓ இந்த வசதியை வழங்கியுள்ளது. இந்த வசதி மற்ற நிறுவனங்களுக்கு கிடையாது, அதனால் கணக்கு வைத்திருப்பவர்கள் வேறு எந்த பாலிசியிலும் இபிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை டெபாசிட் செய்ய முடியாது. இபிஎஃப்ஓ-ன் புதிய விதிகளின் கீழ், உங்களுக்கு பணம் தேவைப்பட்டால், பிஎஃப் கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் வரை எடுத்துக்கொள்ள இபிஎஃப்ஓ அனுமதிக்கிறது, இதற்கென்று பிரத்யேகமாக நீங்கள் எவ்வித டாக்குமென்டுகளையும் சமர்ப்பிக்க வேண்டிய தேவையில்லை.
மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் செய்தி: அகவிலைப்படி அதிகரிப்பு அறிவிப்பு விரைவில்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ