இபிஎஃப் சந்தாதாரரா நீங்கள்? விதிகளில் மாற்றம்... உறுப்பினர்களுக்கு பெரிய நிவாரணம், விவரம் இதோ
EPFO News Rules: இபிஎஃப்ஓ சமீபத்தில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி கூட்டு அறிவிப்பு படிவம் தொடர்பான கொள்கையில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
EPFO News Rules: சம்பள வர்க்கத்தினர் அனைவரும் பெரும்பாலும் இபிஎஃப் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஊழியர்கள் மாதா மாதம் தங்கள் ஊதியத்தில் ஒரு பகுதியை பணியாளர் வைப்பு நிதியில் பங்களிக்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் பணியாளர்களின் கணக்கில் மாதா மாதம் டெபாசிட் செய்கின்றது. பிஎஃப் தொகை பணி ஓய்விற்கு பிறகான காலத்தில் உதவும் முக்கிய சேமிப்பாக பார்க்கப்படுகின்றது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, அவ்வப்போது ஏற்கனவே உள்ள விதிகளில் சில மாற்றங்களை செய்கிறது, புதிய விதிகளையும் அறிமுகம் செய்கிறது. இவற்றை பற்றிய புதுப்பித்தல்களை ஊழியர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
இபிஎஃப்ஓ சமீபத்தில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி கூட்டு அறிவிப்பு படிவம் தொடர்பான கொள்கையில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. மாதத்திற்கு ரூ.15,000க்கு மேலுள்ள அடிப்படைச் சம்பளத்தில் பங்களிக்கும் இபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கு (EPFO Members) இந்த ஆவணம் அவசியம். இந்த புதுப்பிப்பு EPFO உறுப்பினர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கிறது. இது செயல்முறையை ஒழுங்குபடுத்துவதோடு பலருக்கு அதிகாரத்துவ சுமையை குறைக்கிறது.
ஜாயிண்ட் டிக்லரேஷனை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்
பொதுவாக மாதத்திற்கு சட்டப்பூர்வ சம்பள வரம்பான 15,000 ரூபாய்க்கு மேல் அடிப்படை சம்பளத்தை அடிப்படையாக கொண்டு EPFO கணக்கிற்கான பங்களிப்பு இருந்தால், கூட்டு அறிவிப்பை சமர்பிப்பதை EPFO கட்டாயமாக்குகிறது. இருப்பினும், புதிய சுற்றறிக்கையில் EPFO சில இபிஎஃப்ஓ சந்தாதாரர்களுக்கு (EPFO Subscribers) இந்தத் தேவையைத் தளர்த்தியுள்ளது. குறிப்பாக, நவம்பர் 1, 2023க்கு முன் வேலையை விட்டுச் சென்ற அல்லது இறந்த உறுப்பினர்கள், சட்டப்பூர்வ வரம்பை விட அதிகமாகப் பங்களித்திருந்தாலும், கூட்டுப் பிரகடனத்தைச் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? இந்த புதிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்!
சட்ட வரம்புக்கு மேல் சம்பளத்தில் பங்களிப்பு
மேலும், சட்டப்பூர்வ வரம்பிற்கு மேல் உள்ள சம்பளத்தின் அடிப்படையில் பங்களிக்கும் தற்போதைய பிஎஃப் உறுபினர்களும், அதிக பங்களிப்புகளுக்கு நிர்வாகக் கட்டணங்களைச் செலுத்தும் நிறுவனங்களின் உறுப்பினர்களும் உடனடியாக கூட்டுப் பிரகடனத்தை தாக்கல் செய்யத் தேவையில்லை. இந்த நடவடிக்கையானது பணியாளர்கள் மற்றும் முதலாளிகள் இருவருக்கும் நிர்வாக செயல்முறையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. EPFO அனைத்து பிஎஃப் உறுப்பினர்களுக்கும் பொருந்தும் கூட்டு அறிவிப்பு படிவத்திற்கான (Joint Declaration Form) புதிய வடிவமைப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த படிவத்தின் அவசியம் என்ன?
சட்டப்பூர்வ வரம்பை விட அதிகமான அடிப்படை சம்பளத்துடன் ஒரு நபர் முதல் முறையாக EPFO திட்டத்தில் சேரும்போது அல்லது இந்த வரம்பை விட அதிகமான சம்பளத்துடன் வேலையை மாற்றும்போது இந்தப் படிவம் தேவைப்படுகிறது. ஏற்கனவே EPFO உறுப்பினர்களாக இருப்பவர்கள் ஒவ்வொரு முறையும் வேலை மாறும்போதும், சட்டப்பூர்வ வரம்பை விட அடிப்படை ஊதியம் பெறும் போதும் இது தேவைப்படுகிறது. EPFO திட்டத்தின் விதிகளின்படி, மாத அடிப்படை சம்பளம் 15,000 ரூபாய்க்கு மேல் உள்ள பணியாளர்கள் தானாகவே EPFO திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள் ஆவார்கள். வேலையின் தொடக்கத்தில் மாத அடிப்படை சம்பளம் 15,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், நிறுவனம் மற்றும் பணியாளர் இருவரும் சேர்ந்து ஒரு கூட்டு அறிவிப்பை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க | தங்கத்தின் விலை குறைவது எப்போது? கிடுகிடுவென விலையேற காரணம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ