EPFO New Rules: மாதா மாதம் இபிஎஃப் கணக்கில் (EPF Account) ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, தங்கள் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு பங்களிப்புகளை டெபாசிட் செய்யத் தவறிய அல்லது தாமதமாக செலுத்தும் முதலாளிகள் / நிறுவனங்கள் மீதான அபராதக் கட்டணத்தை (Penalty) குறைத்துள்ளது. முன்னதாக, முதலாளிகளுக்கான இந்தக் கட்டணம் ஆண்டுக்கு 25 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது அது மாத நிலுவைத் தொகையில் 1 சதவீதம் அல்லது ஆண்டுக்கு 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது EPFO ​​தரப்பிலிருந்து நிறுவனங்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக வந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொழிலாளர் நல அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் (EPS), ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம் மற்றும் EPFO ​​இன் கீழ் பணியாளர்கள் டெபாசிட் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (EDLI) ஆகிய மூன்று திட்டங்களில் மாதத்திற்கு நிலுவையில் உள்ள பங்களிப்பில் 1 சதவீதம் அல்லது ஆண்டுக்கு 12 சதவீதம் என்ற விகிதத்தில் நிறுவனத்திடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 


இதுவரை எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது?


அபராதம் பற்றி பேசுகையில், இதுவரை இரண்டு மாதங்கள் வரை நிறுவனங்கள் பங்களிப்பை கட்டத் தவறினால் ஆண்டுக்கு 5%, இரண்டு மாதங்களுக்கு மேல் செலுத்தாமல் இருந்தால் 10% மற்றும் நான்கு மாதங்களுக்கு மேல் மற்றும் 6 மாதங்களுக்கு குறைவான காலத்திற்கு பங்களிப்பு அளிக்கப்படவில்லை என்றால் 15% அபராதம் விதிக்கப்பட்டது. மறுபுறம், 6 மாதங்கள் மற்றும் அதற்கு மேல் பங்களிப்பு அளிக்க தவறினால் ஆண்டுக்கு 25% வரை அபராதம் விதிக்கப்பட்டது. இப்போது புதிய அபராத விதி அறிவிப்பு தேதியிலிருந்து பொருந்தும்.


மேலும் படிக்க | Budget 2024 Expectations: வரி விலக்கு, புதிய வரி அடுக்குகள்.... நடுத்தர மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி உள்ளது - நிபுணர்கள்


முதலாளி / நிறுவனங்கள் மீது என்ன தாக்கம் இருக்கும்?


இந்த புதிய விதியின்படி, இப்போது முதலாளி / நிறுவனம் குறைந்த அபராதம் செலுத்தினால் போதும். மேலும், 2 மாதங்கள் அல்லது 4 மாதங்கள் தவறியதற்கான அபராதத் தொகையாக ஒவ்வொரு மாதமும் 1 சதவீதம் செலுத்த வேண்டும். அதாவது, முதலாளிகள் / நிறுவனங்களுக்கான அபராதத் தொகை இரண்டு மடங்குக்கு மேல் குறைக்கப்பட்டுள்ளது.


EPFO விதியின்படி, தற்போது ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி அல்லது அதற்கு முன் EPFO ​​க்கு முந்தைய மாத வருமானத்தை முதலாளி தாக்கல் செய்வது கட்டாயமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதைச் செய்யவில்லை என்றால், இதற்குப் பிறகான அனைத்து வகையான தாமதமும் டீஃபால்ட் அதாவது விதி மீறலாகக் கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.


பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு


பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நிர்வகிக்கப்படும் இபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் பணியாளரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். இபிஎஃப் தொகை அனைவருக்கும் அவர்களது பணி ஓய்வுக்கு பிறகான முக்கியமான நிதி ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. இது மட்டுமின்றி பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் ஓய்வுக்குப் பிறகு இலவச ஓய்வூதிய பலனையும் பெறுகிறார்கள். 


ஒவ்வொரு மாதமும், பணியாளர்களின் இபிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை ஊதியத்திலிருந்து கழிக்கபட்டு டெபாசிட் செய்யப்படுகின்றது. அதே அளவு தொகையை நிறுவனமும் ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்கிறது. 


மேலும் படிக்க | 8th Pay Commission மெகா அப்டேட்: 44% ஊதிய உயர்வு... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ