EPFO சந்தாதாரர்களுக்கு முக்கிய அப்டேட்! டிரஸ்ட் பணத்தை எப்படி மாற்றுவது?

Employee Provident Fund Latest Update : கணக்கு எங்கிருந்தாலும் பணத்தை மாற்றுவது சுலபமாகிவிட்டது. ஒருங்கிணைந்த பொதுவான இடைமுக போர்ட்டல் மூலம் டிரஸ்டில் இருந்து பரிமாற்றம் செய்யலாம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 21, 2024, 03:33 PM IST
  • இபிஎஃப் பண பரிமாற்றம்
  • இடைமுக போர்ட்டல்
  • டிரஸ்டில் இருந்து தொகையை மாற்றுவது எப்படி?
EPFO சந்தாதாரர்களுக்கு முக்கிய அப்டேட்! டிரஸ்ட் பணத்தை எப்படி மாற்றுவது? title=

1952 இல், இந்திய அரசாங்கம் அமைப்பு மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு மற்றும் நலனுக்காக அறிமுகப்படுத்திய சேமிப்பு திட்டம், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) என்று அழைக்கப்பட்டது. இது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டத்தின் கீழ் சேமிப்பு திட்டமாகும். இந்தத் திட்டம் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் வருகிறது.

20 மற்றும் அதற்கு மேற்பட்ட பணியாளர்கள்/தொழிலாளர்களைக் கொண்ட அனைத்து நிறுவனங்களும் EPF திட்டத்தின் கீழ் வருகின்றன. ஒரு ஊழியர், வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கு தனது சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை வழங்க வேண்டும். ஊழியரின் பங்களிப்புக்கு சமமான தொகையை முதலாளியும் செலுத்த வேண்டும்.

​​சில நிறுவனங்கள் EPF நிதிகளில் பங்களிப்பதில் இருந்து விலக்கு பெற்றிருக்கும். அந்த சூழ்நிலையில், அவர்கள் தனிப்பட்ட PF டிரஸ்ட் (private PF trust) எனப்படும் அறக்கட்டளையை நிர்வகிக்க வேண்டும்.

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை பராமரிக்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, அதன் அறக்கட்டளையின் ஆண்டு கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும். ஊழியர்களின் இறப்பு, ஓய்வு, ராஜினாமா போன்ற சூழ்நிலைகளில் PF தொகையை செலுத்த வேண்டும். இது தொடர்பாக, EPFO ​​முதலாளிகளிடமிருந்து தகவல் பெற்று, ஊழியர்களுக்கு சேர வேண்டிய பணத்தைக் கொடுக்கும்.  

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஊழியர் வருங்கால வைப்புநிதிக் கணக்கில் இருந்து ஒருவர் பணத்தைப் பெறுவதற்கு, EPFO ​​அதிகாரிகள் பல ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். பணத்தை ஊழியர் வருங்கால வைப்புநிதியில் இருந்து எடுக்க, படிவம் 13 ஐ பூர்த்தி செய்து, தொடர்புடைய ஆவணங்களுடன் பழைய முதலாளியின் HR இடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்களை முதலாளி சரிபார்த்த பிறகு,  EPFO ​​க்கும் உங்களின் pf தொகையைக் குறிப்பிடும் காசோலையை இணைக்கும்.

அறக்கட்டளையில் இருந்து EPFO ​​க்கும், EPFO ​​இலிருந்து அறக்கட்டளைக்கும் பணத்தை பரிமாற்றம் செய்யும் வசதி உள்ளது. இது வேலை வழங்குநரால் சரிபார்ப்புக்காக ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் சிரமத்திலிருந்து ஊழியர்களுக்கு நிம்மதியைக் கொடுக்கும் வகையில் தற்போது அவை டிஜிட்டல் முறையில் ஆன்லைனில் பதிவேற்றப்படுகின்றன.

கணக்கு எங்கிருந்தாலும் பி.எஃப் பணத்தை மாற்றுவது சுலபமாகிவிட்டது. ஒருங்கிணைந்த பொதுவான இடைமுக போர்ட்டல் மூலம் டிரஸ்டில் இருந்து பரிமாற்றம் செய்யலாம்.  

கொரோனா தொற்றுநோய் காலத்தில், ​​EPF உறுப்பினர்களுக்கு திருப்பிச் செலுத்த தேவையில்லாத முன்பணம் கொடுக்கும் வசதி வழங்கப்பட்டது. தற்போது ​​இந்த வசதியை மூடுவதாக EPFO அறிவித்துள்ளது. ஜூன் 12, 2024 அன்று வெளியிடப்பட்ட ஒரு சுற்றறிக்கையில் குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்தியில், கோவிட்-19 தொற்றுநோய் இனி இல்லை, எனவே உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அட்வான்ஸ் பெறும் வசதியை மூட முடிவு செய்துள்ளது. இந்த முடிவு விலக்கு அளிக்கப்பட்ட அறக்கட்டளைகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | திமுக ஆட்சியில் குடிகாரர்களைக் கூட காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை - ராமதாஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News