பிஎஃப் கணக்கில் வட்டி எப்போது வரும்? EPFO கூறியுள்ள புதிய அப்டேட்
வருங்கால வைப்பு நிதி கணக்கில் எப்போது வட்டி வரும் என்பது குறித்த அறிவிப்பை இபிஎப்ஓ தெரிவித்துள்ளது. எஸ்எம்எஸ் மற்றும் மிஸ்டு கால் வழியாக உங்களின் பிஎப் கணக்கு இருப்பை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
வருங்கால வைப்பு நிதியில் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை 8.15 சதவீதமாக அதிகரிக்க ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய குழு பரிந்துரைத்துள்ளது. இதனை ஜூலை 24 ஆம் தேதி மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. அறிவிப்பு வெளியானதில் இருந்து, பல இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கில் வட்டித் தொகையை டெபாசிட் செய்யப்படுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். வட்டித் தொகை எப்போது வரை பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்றும் சமூக வலைதளங்களில் மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் படிக்க | PPF விதிகளில் அதிரடி மாற்றம்! இப்போது முழு பணத்தையும் எடுத்துக்கொள்ளலாம்!
pf கணக்கில் வட்டி
வட்டி டெபாசிட் குறித்து, EPFO கூறியது என்னவென்றால், ' இதற்கான பணிகள் இப்போது தொடங்கப்பட்டிருக்கிறது. விரைவில் கணக்கில் காண்பிக்கப்படும். வட்டி முழுவதும் செலுத்தப்படும். வட்டி இழப்பு ஏற்படாது. தயவுசெய்து பொருமை காக்க வேண்டும். EPF கணக்கில் வட்டி மாதாந்திர அடிப்படையில் கணக்கிடப்படுகிறது, ஆனால் நிதியாண்டின் இறுதியில் வரவு வைக்கப்படும். மாற்றப்பட்ட வட்டி அடுத்த மாத நிலுவைத் தொகையுடன் சேர்க்கப்பட்டு, அந்த மாத நிலுவைத் தொகையின் வட்டியைக் கணக்கிடப்பட உள்ளது.
pf இருப்பு
தொகையை டெபாசிட் செய்தவுடன், பயனர்கள் தங்கள் EPF இருப்பை EPFO இணையதளம், SMS, மிஸ்டுகால் அல்லது UMANG செயலி மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம். எஸ்எம்எஸ் மூலம் EPFO இருப்பை சரிபார்க்க, பயனர்கள் 'EPFOHO UAN ENG' என டைப் செய்து, உறுப்பினர்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 க்கு அனுப்ப வேண்டும்.
இணையதளத்தில் EPFO இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம்?
- EPFO இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான epfindia.gov.in க்குச் செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில், Services என்பதைக் கிளிக் செய்து, அதன் கீழ் 'For Employers' என்பதைக் கிளிக் செய்யவும்.
- இதற்குப் பிறகு நீங்கள் ஒரு புதிய பக்கத்தை அடைவீர்கள், அங்கு 'சேவைகள்' என்பதன் கீழ் 'உறுப்பினர் பாஸ்புக்' என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பிறகு ஒரு லாகின் பக்கம் தோன்றும்.
- இப்போது UAN, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சாவை உள்ளிட்டு உங்கள் கணக்கில் உள்நுழையவும்.
- இப்போது நீங்கள் உங்கள் கணக்கு அறிக்கை மற்றும் தொகையை சரிபார்க்கலாம். வட்டி வரவு வைக்கப்பட்டதும், கணக்கு வைத்திருப்பவர் அது தொடர்பான விவரங்களையும் பார்க்க முடியும்.
மேலும் படிக்க | கடனில் சிக்கி தவிக்கிறீர்களா... அசால்ட்டாக அதில் இருந்து மீள்வது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ