புதுடெல்லி: நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் சுமார் 20 லட்சம் பேர் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) சேர்ந்துள்ளனர் என்று EPFO வெளியிட்டுள்ள தற்காலிக ஊதிய தரவு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லாக்டௌன் காரணமாக முதல் காலாண்டில் மந்தமாக இருந்த சேர்க்கை விகிதம் 2020 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மீண்டும் வேகத்தை எடுத்தது. செவ்வாயன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த ஆண்டு ஜூலை மாதம் 7.49 லட்சம் புதிய சந்தாதாரர்களை ஓய்வூதிய நிதியில் சேர்த்துள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் (Labour Ministry) தெரிவித்துள்ளது. இது ஜூலை 2019 இல் சேர்ந்தவர்களில் 64% ஆகும். ஆகஸ்டில், புள்ளிவிவரங்கள் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது சுமார் 93% உயர்ந்தன.


ஆகஸ்ட் 2020 இல் பதிவுசெய்யும் தரவுகளில், ஜூலையைக் காடிலும் மாதாந்திர உயர்வு 34% ஆக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் சந்தா புள்ளிவிவரங்கள் 6.48 லட்சத்திலிருந்து 6.70 லட்சமாக உயர்ந்தன.


ALSO READ: EPFO: இனி UAN நம்பர் இல்லாமல் PF இருப்புத் தொகையை நொடியில் அறியலாம்..!


இதே காலகட்டத்தில், குறைவான சந்தாதாரர்களே (Subscribbers) EPFO ​​இலிருந்து வெளியேறினர். வெளியேறும் விகிதங்கள் 50% குறைந்துவிட்டன. ஜூலை மாதத்தில் 5.08 லட்சம் பேர் வெளியேறிய நிலையில், ஆகஸ்ட் 2020 இல் 2.46 லட்சம் பேர் மட்டுமே வெளியேறினர்.


ஆகஸ்ட் 2020 இல் சேர்ந்தவர்களில் 22 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர். அதைத் தொடர்ந்து 18 முதல் 21 வயதுக்குட்பட்டவர்கள் உள்ளனர்.


"18-25 வயதுக்குட்பட்டவர்கள் புதிய சந்தாதாரர்களில் கிட்டத்தட்ட 51% இருக்கிறார்கள். இந்த வயது வரம்பில் உள்ள பங்களிப்பு EPFO-வை பொறுத்தவரை புதிய வலுவான மறுமலர்ச்சியைக் காட்டியுள்ளது" என்று EPFO ​​தெரிவித்துள்ளது.


ALSO READ: உங்கள் PF பணத்தை வேறொரு கணக்கிற்கு மாற்றுவது எப்படி?... இதோ வழிமுறைகள்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR