EPFO Update: அலுவலக பணிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும், பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான பணம், அவர்களது சம்பளத்தில் இருந்து கழிக்கப்படுகிறது. பொதுவாக ஊழியர்களுக்கு இது ஓய்வூதிய நிதிக்கான முதல் படியாக இருக்கும். உங்கள் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை கழித்து அந்த தொகையை பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறது. அதே அளவு தொகையை நிறுவனமும் ஊழியரின் கணக்கில் டெபாசிட் செய்யும். அந்த தொகைக்கு அரசாங்கம் பிஎஃப் சந்தாதாரர்களுக்கு வருடாந்திர வட்டியும் வழங்குகிறது. பிஎஃப் கணக்குகளை  பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO பராமரிக்கின்றது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் (EPFO Members), தங்கள் இபிஎஃப் கணக்குகள் (EPF Account) தொடர்பாக அவ்வப்போது வரும் புதுப்பிப்புகளை பற்றி தெரிந்துகொண்டு, அதற்கான நடவடிக்கைகளை எடுப்பது நல்லது. அப்படி இபிஎஃப் சந்தாதாரர்கள் செய்ய வேண்டிய ஒரு முக்கிய விஷயம் பற்றி இந்த பதிவில் காணலாம். இது ஊழியர்களின் இ-நாமினேஷன் (E-Nomination) பற்றியது. EPFO உறுப்பினர் ஐடியில் ஆன்லைனில் இ-நாமினேஷனை தாக்கல் செய்ய, ப்ரொஃபைல் புகைப்படம் இருப்பது கட்டாயமாகும். ஒரு பிஎஃப் உறுப்பினர் EPFO உறுப்பினர் ஐடியில் ப்ரொஃபைல் போட்டோ இல்லாமல் இ-நாமினேஷனைத் தாக்கல் செய்ய முயற்சித்தால், "unable to proceed" என்ற எரர் மெசேஜ் வரும். 


இபிஎஃப் யுஏஎன் போர்டலில் (EPF UAN Portal) ப்ரொஃபைல் போட்டோவை சேர்ப்பது தோற்றத்தை மேம்படுத்துவதோடு, செயல்முறையையும் எளிதாக்குகிறது. 


EPF UAN போர்ட்டலில் ப்ரொஃபைல் புகைப்படத்தை (Profile Photo) சேர்ப்பது எப்படி? ப்ரொஃபைல் போட்டோவை பதிவேற்ற, கீழே கொடுக்கப்பட்டுள்ள படிப்படியான செயல்முறையை பின்பற்றவும். 


உங்கள் புகைப்படத்துக்கான அடிப்படை படத் தேவைகள்: (Basic Image Requirements)


- டிஜிட்டல் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மட்டுமே பதிவேற்ற அனுமதிக்கப்படும். 


- புகைப்படத்தை பதிவேற்றுவதற்கு முன், புகைப்படம் 3.5cm x 4.5cm என்ற அளவில் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.


- பதிவேற்றிய புகைப்படத்தில் உள்ள முகப் படம், இரண்டு காதுகளையும் சேர்த்து, படத்தின் 80 சதவீதம் இருக்க வெண்டும். 


- புகைப்படம் jpeg/jpg/png வடிவத்தில் இருக்க வேண்டும். 


- பதிவேற்றிய படம் 100 KB அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடாது. 


EPF UAN போர்ட்டலில் ப்ரொஃபைல் புகைபடத்தைப் பதிவேற்றுவது எப்படி? (How To Upload Profile Picture in EPF UAN Portal): 


- முதலில் UAN போர்ட்டலில் லாக் இன் செய்யவும்.


- மெனு பகுதிக்குச் சென்று, "View" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு டிராப்டவுன் மெனுவில் தெரியும் “Profile" என்பதை செலக்ட் செய்யவும்.


- சாளரத்தின் இடது பக்கத்தில், ப்ரொஃபைல் புகைப்படத்தை மாற்றுவதற்கான விருப்பத்தைக் கண்டறியவும். 


- உங்கள் கணினி அல்லது மொபைல் சாதனத்திலிருந்து புகைப்படத்தைத் தேர்ந்தெடுக்க, “browse" என்பதைக் கிளிக் செய்யவும். 
- தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படத்தை ப்ரெவ்யூ செய்து, அதை பதிவேற்றம் செய்யவும். 


- புகைப்படத்தை பதிவேற்றியதும், "ok" என்பதைத் தேர்ந்தெடுத்து உறுதிப்படுத்தவும். 


மேலும் படிக்க | மாதம் ரூ.9,250 வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்.. உடனே படிக்கவும்


பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO அதன் உறுப்பினர்களுக்காக உலகளாவிய கணக்கு எண் (UAN) முறையை செயல்படுத்தியுள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தில் பங்களிக்கும் அனைத்து இபிஎஃப்ஓ உறுப்பினருக்கும் ஒரு தனிப்பட்ட UAN ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த  UAN, ஊழியர் நிறுவனங்களை மாற்றினாலும் மாறாமல் இருக்கும். 


ஆன்லைனில் UAN ஐ செயல்படுத்துவதற்கான செயல்முறை இதோ:


- https://www.epfindia.gov.in என்ற இணையதளத்தில் இபிஎஃப்ஓ உறுப்பினர் போர்ட்டலை (EPFO Member Portal) அணுகவும்.


- "Important Links" பிரிவின் கீழ் உள்ள "Activate UAN" என்பதை கிளிக் செய்யவும்.


- உங்கள் UAN எண், பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிடவும். 


-  தேவையான விவரங்களை உள்ளிட்ட பிறகு, "Get Authorization Pin" பொத்தானைக் கிளிக் செய்யவும். 


- உங்கள் மொபைல் எண்ணில் OTP -ஐப் பெறுவீர்கள். 


- UAN ஐ ஆக்டிவேட் செய்ய, பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும். 


- இந்த செயல்முறை மூலம் மொபைல் எண்ணும் இபிஎஃப் கணக்கில் (EPF Account) பதிவு செய்யப்படும்.


- UAN வெற்றிகரமாக் செயல்படுத்தப்பட்டதும், அதாவது ஆக்டிவேட் செய்யப்பட்டவுடன்,  உங்கள் கணக்கை அணுக உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் கடவுச்சொல்லைப் பெறுவீர்கள்


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு... CGHS கட்டணத்தில் மாற்றம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ