EPF Withdrawal: பிஎஃப் பணத்தை பணி ஓய்வுக்கு முன் எடுக்க முடியுமா? இதற்கான விதிகள் என்ன?

EPF Withdrawal Rules: பல சமயங்களில் நம் வாழ்வில் சில அவசர தேவைகள் ஏற்படுகின்றன. பொதுவாக ஓய்வுபெற்ற பிறாகுதான் இபிஎஃப் கணக்கிலிருந்து (EPF Account) பணத்தை எடுக்க முடியும் என நாம் நினைக்கிறோம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 17, 2024, 03:50 PM IST
  • மருத்துவச் செலவுகளுக்காக பணம் எடுக்கலாம்.
  • திருமணம்-கல்வி செலவுகளுக்காக பணம் எடுக்கலாம்.
  • வீடு கட்ட அல்லது வாங்க பணம் எடுக்கலாம்.
EPF Withdrawal: பிஎஃப் பணத்தை பணி ஓய்வுக்கு முன் எடுக்க முடியுமா? இதற்கான விதிகள் என்ன?

EPF Withdrawal Rules: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. இது அவசர தேவைகளின் போது பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்க நினைக்கும் பிஎஃப் சந்தாதாரர்களுக்கு உதவியாக இருக்கும். பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, பணியளர்களுக்கு தங்கள் கணக்கிலிருந்து பகுதியளவு தொகையை திரும்ப எடுப்பதற்கான வாய்ப்பை அளிக்கின்றது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

பல சமயங்களில் நம் வாழ்வில் சில அவசர தேவைகள் ஏற்படுகின்றன. பொதுவாக ஓய்வுபெற்ற பிறாகுதான் இபிஎஃப் கணக்கிலிருந்து (EPF Account) பணத்தை எடுக்க முடியும் என நாம் நினைக்கிறோம். ஆனால், சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் பகுதியளவு தொகையை எடுத்துக்கொள்ள EPFO அனுமதிக்கின்றது. வீட்டில் இருந்தபடியே EPFO சந்தாதாரர்கள் மூன்று திட்டங்களின் கீழ் பணத்தை எடுக்கலாம். 

EPF Withdrawal Rules: எவ்வளவு பணம் எடுக்க முடியும்

அலுவலக பணிகளில் இருக்கும் ஊழியர்கள் (Employees) பணத்தேவை ஏற்படும்போது கடன் பெறுகிறார்கள். ஆனால், பணியில் இருக்கும்போதே பிஎஃப் தொகையில் இருக்கும் பகுதியளவு தொகையை பெற முடியும் என்பது பலருக்கு தெரிவதில்லை. வீட்டில் இருந்தபடியே எப்போது, ​​எவ்வளவு பணம் எடுக்க முடியும் என்பது பற்றி இங்கே காணலாம். பல பணியாளர்களுக்கு பிஎஃப் தொகையை (PF Amount) எடுப்பது பற்றிய போதுமான புரிதல் இருப்பதில்லை. ஊழியர்கள் பல திட்டங்களின் கீழ் EPFO ​​இலிருந்து தொகையை எடுக்கலாம். 

EPFO Subscribers: பகுதியளவு தொகையை எப்போது எடுக்கலாம்?

இபிஎஃப் சந்தாதாரரள் எந்தெந்த சந்தர்ப்பங்களில் பிஎஃப் தொகையை எடுக்கலாம் என இங்கே காணலாம்.

- வீட்டுக் கடனை திரும்ப செலுத்த

நீங்கள் ஒரு வீட்டைக் கட்டவோ, வாங்கவோ கடன் வாங்கி இருந்தால், அதைத் திரும்பச் செலுத்த EPF -இல் இருந்து பணம் எடுக்கலாம். இந்த தேவைக்காக இபிஎஃப் சந்தாதாரர் (EPF Subscriber) பிஎஃப் இருப்பில் 90 சதவீதம் வரை பணம் எடுக்கலாம்.

- வீடு கட்ட அல்லது வாங்க

ஒரு ஊழியர் 5 ஆண்டுகளுக்கு மேல் EPFO ​​இல் முதலீடு செய்திருந்தால், அவர் தனி வீடு அல்லது பிளாட் வாங்க அல்லது கட்ட பிஎஃப் தொகையை எடுக்கலாம். இதற்கு ஒரு மாத பங்களிப்பின் 36 மடங்கு தொகையை எடுக்க முடியும். இந்த தொகை வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சந்தாதாரர்குக்கு அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் 90 சதவீதம் வரை எடுத்துகொள்ளலாம். இந்த தொகையை எடுக்க ஒரு ஊழியர் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு EPF -இல் பங்களிப்பு செலுத்தி இருக்க வேண்டும். ஒருவரது பிஎஃப் கணக்கில் உள்ள தொகை ரூ.20 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்தால், இந்த பலன்களை அவரால் பெற முடியாது.

மேலும் படிக்க | CIBIL Score: இதை கடைபிடியுங்கள் போதும்... கிரெடிட் ஸ்கோர் 750+ ஆக எகிறி விடும்!

- மருத்துவச் செலவுகளுக்காக பணம் எடுக்கலாம்

பிஎஃப் சந்தாதாரர் மருத்துவ சிகிச்சைக்காக பணத்தை எடுக்கலாம். எனினும், இதற்கு மருத்துவமனையில், ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் அனுமதிக்கப்பட்டதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும். பொதுவாக, மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளுக்கு அதிக பணம் செலவிடப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அவசரநிலைகள், தீவிர நோய்கள், உடல் ஊனம், வேலை செய்த நிறுவனம் மூடப்படுவது போன்ற அவசர தேவைகளில் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கலாம்.

- திருமணம்-கல்வி செலவுகள்

பணியாளர் தனது, தனது சகோதரி அல்லது மகளின் திருமணத்திற்கான தனது இபிஎஃப் இருப்பிலிருந்தூ (EPF Balance) பணம் எடுக்கலாம். எனினும், இந்த தேவைகளுக்கு பகுதியளவு தொகையை மட்டும்தான் எடுக்க முடியும். மேலும், இந்த சந்தர்ப்பங்களில் பணம் எடுக்க, ஊழியர் குறைந்தபட்சம் 7 ஆண்டுகளுக்கு EPF -இல் பங்களித்திருக்க வேண்டும். படிப்பு அல்லது திருமண தேவைகளுக்கு மொத்த பங்களிப்பில் 50 சதவீதம் வரை எடுத்துக்கொள்ளாலாம். 

- வேலையின்மை

ஒரு பணியாளர் பணிபுரியும் நிறுவனம் மூடப்பட்டாலோ, அல்லது அவருக்கு வேலை போய் விட்டாலோ, இபிஎஃப் கணக்கில் இருக்கும் தொகையை எடுக்கலாம். இப்படிபட்ட சூழலில், ஊழியர் வேலை இழந்து ஒரு மாதம் கழித்து பிஎஃப் நிதியிலிருந்து பணத்தை எடுக்கலாம். இதற்கு முன், நீங்கள் 75% தொகையை திரும்பப் பெறலாம்.

மேலும் படிக்க | SBI கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம்... நோட் பண்ணிக்கோங்க மக்களே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News