Post Office Monthly Income Scheme (MIS) : ஒரு முதலீட்டாளரர் உத்தரவாதமான வருவாயை தரக்கூடிய முதலீட்டு விருப்பத்தையே தேர்வு செய்வார்கள். மாதாமாதம் வரும் வருமானத்தை பொறுத்தே மாதாந்திர செலவுகளை பூர்த்தி செய்ய முடியும். அதேபோல் பண தேவை என்பது வயது வரம்பிற்கு அப்பாற்பட்டது. இதில் இளைஞர்களுக்கு ஒரு விதமான பணத்தேவை இருக்கும் என்றால் வயதானவர்களுக்கும் வேறு விதமான பணத்தேவை இருக்கின்றது. அந்த வகையில் இளம் வயதிலேயே ரிடயர்மென்ட் காலத்திற்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள சேமிப்பை துவக்க வேண்டும். வயதாகி விட்டால் வருமானமும் குறையும், உடலின் ஆற்றலும் குறையும். ஆகையால் பணி ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிக்க போதுமான அளவு முதலீடு செய்வது அவசியமாகும்.
பொதுவாக முதலீட்டு திட்டங்களை நாம் தேர்வு செய்வதற்கு முன் அதிகபட்ச கவனத்துடன் இருக்க வேண்டும். அதன்படி அரசாங்க ஆதரவு பெற்ற தபால் நிலைய திட்டம் மிகவும் பாதுகாப்பான மற்றும் நம்பகத்தக்க திட்டமாகும். பல வகையான திட்டங்கள் தபால் அலுவலகத்தால் இயக்கப்படுகின்றன. இவற்றில் ஒன்று மாதாந்திர வருமானத் திட்டம்தான் Post Office MIS. இது ஒரு டெபாசிட் திட்டமாகும், இந்த திட்டத்தில் நீங்கள் மாதாமாதம் ஒரு முறை முதலீடு செய்தால் போதும், இதன் மூலம் எளிதாக சம்பாதிக்கலாம், மேலும் உத்திரவாத வருமானத்தை பெறலாம்.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு... CGHS கட்டணத்தில் மாற்றம்!
இந்நிலையில் போஸ்ட் ஆபீஸ் மாத வருமான திட்டத்தில் (Post Office Monthly Income Scheme - MIS), ஒரு கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சமும், கூட்டுக் கணக்கில் அதிகபட்சமாக ரூ.15 லட்சமும் டெபாசிட் செய்து தொடங்கலாம். அதேபோல் நீங்கள் டெபாசிட் செய்யும் பணத்திற்காக ஒவ்வொரு மாதமும் வட்டி வழங்கப்படும். இத்திட்டத்திற்கு தற்பொழுது 7.4% வட்டி வழங்கப்பட்டு வருகிறது.
போஸ்ட் ஆஃபீஸ் எம்ஐஎஸ்ஸில், ஒரே நேரத்தில் 5 வருடங்கள் டெபாசிட் செய்யப்படும் தொகை, அதாவது தொடர்ந்து 5 ஆண்டுகள் வட்டி எடுத்து வருமானம் ஈட்டலாம். முதிர்ச்சியடைந்த பிறகு, டெபாசிட் செய்யப்பட்ட தொகை மீண்டும் உங்களுக்கே திருப்பித் தரப்படும். ஆனால் ஐந்தாண்டுகளுக்கு முன் பணம் தேவைப்படால் அதற்கு சில விதிகள் உள்ளன. அதைப் பற்றி பார்க்கலாம்.
* 1 வருடத்திற்குள் உங்களால் பணம் எடுக்க முடியாது.
* 1 வருடத்திற்குப் பிறகு, கணக்கிலிருந்து பணத்தைப் பெறுவதற்கான வசதியைப் பெறுவீர்கள், ஆனால் அபராதமாக சில பணம் கழிக்கப்படும்.
* ஒரு வருடம் முதல் மூன்று வருடங்கள் வரை பணத்தை எடுத்தால், டெபாசிட் தொகையில் 2 சதவீதம் கழிக்கப்பட்டு திருப்பி அளிக்கப்படும்.
* கணக்கைத் தொடங்கி 3 ஆண்டுகளுக்குப் பிறகும், 5 ஆண்டுகளுக்கு முன்பும் நீங்கள் பணத்தை எடுத்தால் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் இருந்து 1 சதவீதத்தைக் கழித்த பிறகு வைப்புத் தொகை உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்நிலையில் தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் ரூ.9 லட்சத்தை டெபாசிட் செய்து, 7.4 சதவீத வட்டியை கணக்கிட்டால், ஒவ்வொரு மாதமும் ரூ.5,500 மாத வருமானம் பெறலாம். அதேசமயம், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சத்தை டெபாசிட் செய்தால், மாதாமாதம் ரூ.9,250 வருமானம் ஈட்ட முடியும்.
தபால் அலுவலக MIS: முக்கிய விவரங்கள்
முதலீடு: 9 லட்சம்
ஆண்டு வட்டி விகிதம்: 7.4%
திட்ட கால அளவு: 5 ஆண்டுகள்
வட்டி மூலம் ஈட்டப்படும் வருவாய்: ரூ 3,33,000
மாத வருமானம்: ரூ.5,550
மேலும் படிக்க | ‘இந்த’ தொழில்களை செய்தால்..கல்லூரி மாணவர்களும் கை நிறைய சம்பாதிக்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடரவும்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
ஆண்ட்ராய்டு இணைப்பு: https://bit.ly/3AIMb22
ஆப்பிள் இணைப்பு: https://apple.co/3yEataJ