EPFO Update: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? மாதா மாதம் உங்கள் கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறதா? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு முக்கியமானதாக இருக்கும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO இனி வரும் நாட்களில் இபிஎஃப் கணக்கு செயல்பாடுகளில் பல மாற்றங்களை செய்யவுள்ளது. இவற்றை பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு முக்கிய செய்தி


பிப்ரவரி 2025 முதல், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் நிர்வகிக்கப்படும் இபிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் விதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பப்டவுள்ளன. புதிய விதிமுறைகள் PF பணத்தை வித்டிரா செய்வதற்கான செயல்முறையை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இது கணக்கு வைத்திருப்பவர்களுக்கான பணிகளை எளிதாக்கும். 


EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு சமீபத்தில் EPFO தந்த குட் நியூஸ்


சமீபத்தில், இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் இபிஎஃப் கணக்குகளின் (EPF Account) சில விவரங்களை தாமாகவே புதுப்பிக்கலாம் என்று EPFO ​​அறிவித்தது. இதனால் அவர்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்களில் உள்ள பிழைகளையும் சுயாதீனமாக சரிசெய்துகொள்ளலாம். இது வேகமாக பிழைகள் திருத்தப்படுவதையும், இதனால் ஏற்படும் கால தாமதத்தை குறைப்பதையும் உறுதி செய்கிறது.


இதே போல் இனி வரும் காலங்களிலும் பல வித மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.


EPF ATM Withdrawal: ஏடிஎம் மூலம் இபிஎஃப் தொகையை எடுக்கும் முறை


EPFO ஒரு புதிய ATM கார்டை அறிமுகப்படுத்துவது குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றது. இந்த ஏடிஎம் கார்டு, ஊழியர்கள் ATM இல் இருந்து பணத்தை எடுப்பது போலவே தங்கள் PF நிதியை எளிதாக எடுக்க உதவும். ATM அட்டை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி மாதத்திற்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


EPF Contributions: இபிஎஃப் பங்களிப்பு


குறைந்தபட்சம் ரூ.15,000 சம்பளம் வாங்கும் ஊழியர்களிடமிருந்து இபிஎஃப் பங்களிப்புகள் கழிக்கப்படுகின்றன. இவை சம்பளத்தில் 12% என்ற அளவில் உள்ளன, நிறுவனமும் இதே அளவு தொகையை டெபாசிட் செய்கின்றது. எனினும், வரும் காலத்தில், 12% என்ற வரம்பு நீக்கப்படலாம் என்றும், ஊழியர்கள் தங்களுக்கு வேண்டிய அளவு தொகையை டெபாசிட் செய்யலாம் என்றும் கூறப்படுகின்றது. எனினும், இதற்கான குறைந்தபட்ச வரம்பு 12% ஆக இருக்கும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


Account Transfer: கணக்கு மாற்றம்


இபிஎஃப் உறுப்பினட்கள் தங்கள் கணக்கை மாற்றுவதும், தனிப்பட்ட தகவல்களைப் புதுப்பிப்பது மிகவும் எளிமையாகி விட்டது. சமீபத்தில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா சில சிறந்த செய்திகளை ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்டார். இனி நிறுவனத்தின் அனுமதி தேவைப்படாமல் உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் கணக்கை மாற்றலாம். மேலும், ஊழியர்கள் தங்கள் பெயர் அல்லது பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட விவரங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால், அவற்றில் திருத்தம் செய்ய கோரிக்கையைச் சமர்ப்பிக்க தெவையில்லை. அவற்றை அவர்களே சரி செய்யலாம். 


இப்படி வரும் நாட்களில் பல வித வசதிகளும், மேம்பாடுகளும் இபிஎஃப் உறுப்பினர்களுக்காக காத்திருக்கின்றன. இவற்றை பற்றிய புரிதல் கொண்டு இவற்றை பயன்படுத்திக்கொள்ள இபிஎஃப் உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.


மேலும் படிக்க | Budget 2025: மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் நீட்டிக்கப்படுமா? பட்ஜெட்டில் வருகிறதா அறிவிப்பு?


மேலும் படிக்க | அவசரமா கடன் வேணுமா... எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? காசை மிச்சம் பண்ண இதை படிங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ