CPPS: ஓய்வூதியதாரர்களுக்கு EPFO பரிசு, ஓய்வூதிய முறையில் மாற்றம்... இனி 'அந்த' கவலை வேண்டாம்

EPFO Update: CPPS எனப்படும் இந்த நவீன அமைப்பு ஓய்வூதியதாரர்கள் இந்தியாவில் எந்த வங்கியிலிருந்தும், எந்த இடத்திலிருந்தும் விரைவாகவும், எந்த வித பிரச்சனையும் இன்றி தங்கள் ஓய்வூதியத்தைப் பெறுவதை உறுதி செய்கிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 28, 2025, 03:25 PM IST
  • சிபிபிஎஸ் என்றால் என்ன?
  • இதன் சிறப்பம்சங்கள் என்ன?
  • முழு விவரத்தை இங்கே காணலாம்.
CPPS: ஓய்வூதியதாரர்களுக்கு EPFO பரிசு, ஓய்வூதிய முறையில் மாற்றம்... இனி 'அந்த' கவலை வேண்டாம் title=

Centralized Pension Payment System: இபிஎஃப் உறுப்பினர்களின் வசதிகளை அதிகரிக்கவும், செயல்முறைகளை எளிதாக்கவும், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அவ்வப்போது பல வித மாற்றங்களை செய்கிறது. அந்த வகையில், சமீபத்தில் EPFO மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய கட்டண முறையை (CPPS) நாடு முழுவதும் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுத்தியுள்ளது. ஓய்வூதிய கட்டண சேவைகளில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாக இது பார்க்கப்படுகின்றது.

What is CPPS? சிபிபிஎஸ் என்றால் என்ன?

CPPS எனப்படும் இந்த நவீன அமைப்பு ஓய்வூதியதாரர்கள் இந்தியாவில் எந்த வங்கியிலிருந்தும், எந்த இடத்திலிருந்தும் விரைவாகவும், எந்த வித பிரச்சனையும் இன்றி தங்கள் ஓய்வூதியத்தைப் பெறுவதை உறுதி செய்கிறது. CPPS என்பது தற்போதுள்ள ஓய்வூதிய விநியோக முறையிலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாக உள்ளது. இது ஓய்வூதியதாரர்களின் வசதிகளை பன்மடங்கு அதிகரிக்கும்.

Employees Pension Scheme 1995 

CPPS -இன் கீழ், EPFO ​​டிசம்பர் 2024 இல் 1995 ஆம் ஆண்டு ஊழியர் ஓய்வூதிய திட்டத்தின் (EPS 95) கீழ், 122 ஓய்வூதியம் வழங்கும் பிராந்திய அலுவலகங்களில் இருந்து 68 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு ஒரே நேரத்தில் ஓய்வூதியத்தை வழங்கியது.

இந்த நடவடிக்கை ஒரு மைல்கல்லை குறிக்கிறது: அமைச்சர் மன்சுக் மண்டாவியா பாராட்டு

ஓய்வூதியதாரர்களின் கணக்குகளில் ரூ.1570 கோடி ஓய்வூதியத் தொகை வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது. அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய கட்டண முறையை முழுமையாக செயல்படுத்துவது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டாவியா அறிவித்தார்.

Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கான ஒரு சிறப்பான முயற்சி

இந்த முயற்சியின் மூலம் ஓய்வூதியதாரர்கள் நாடு முழுவதும் உள்ள எந்த வங்கி அல்லது எந்த வங்கிக் கிளையிலிருந்தும் இனி தங்கள் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளலாம். இந்த வசதி ஃபிசிக்கல் சரிபார்ப்புக்கான தேவையை நீக்குகிறது. ஓய்வூதிய விநியோக செயல்முறை இப்போது எளிமையாகவும் வசதியாகவும் மாறிவிட்டது.

Pension Payment: ஓய்வூதிய கொடுப்பனவில் ஒரு புதிய சாதனை

CPPS அமைப்பு EPFO ​​சேவைகளை நவீனமயமாக்குவதற்கும், ஓய்வூதியதாரர்களுக்கு சிறந்த வசதி, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா எடுத்துரைத்தார். புதிய அமைப்பு ஓய்வூதிய கொடுப்பனவில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

வெற்றிகரமாக நடந்த CPPS பைலட் முயற்சிகள்

CPPS இன் முதல் பைலட் ரன், அதாவது சோதனை ஓட்டம் அக்டோபர் 2024 இல் கர்னால், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் பிராந்திய அலுவலகங்களில் நிறைவடைந்தது. அங்கு மொத்தம் ரூ.11 கோடி ஓய்வூதிய கொடுப்பனவுகள் 49,000 க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டன.

CPPS இன் விரிவாக்கம்

நவம்பர் 2024 இல், இரண்டாவது சோதனை ஓட்டத்தில் 24 பிராந்திய அலுவலகங்களில் தொடங்கி, 9.3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.213 கோடி விநியோகிக்கப்பட்டது. CPPS இன் கீழ், EPFO ​​இன் ஒவ்வொரு பிராந்திய அலுவலகமும் 3-4 வங்கிகளுடன் மட்டுமே ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் வங்கியில் சரிபார்ப்பிற்கான தேவை இல்லாமல் எந்த ஒரு வங்கி அல்லது கிளையிலிருந்தும் ஓய்வூதியத்தை எடுக்க முடியும்.

Pension Payment Order: ஓய்வூதியம் செலுத்தும் உத்தரவு

ஜனவரி 2025 முதல், CPPS, ஓய்வூதிய கட்டண ஆணையை (PPO) ஒரு அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்திற்கு மாற்ற வேண்டிய அவசியமின்றி நாடு தழுவிய ஓய்வூதிய விநியோகத்தை உறுதி செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. ஓய்வுக்குப் பிறகு தங்கள் சொந்த ஊர்களுக்கோ, அல்லது தங்கள் குழந்தைகள், உறவினர்களிடமோ செல்லும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த முறை பெரிய அளவிலான நிவாரணத்தை அளித்துள்ளது. CPPS -இன் கீழ், ஓய்வூதியதாரர் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்குச் சென்றாலோ, அல்லது வங்கி அல்லது கிளையை மாற்றினாலோ இனி PPO எனப்படும் ஓய்வூதியம் செலுத்தும் உத்தரவை (PPO) மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. இவர்கள் நாடு முழுவதும் உள்ள எந்த வங்கிக் கிளையிலிருந்தும் தங்களது ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் படிக்க | SIP Mutual Fund: தினம் ரூ.100 முதலீடு போதும்... ஓய்வின் போது ஒரு கோடி கையில் இருக்கும்

மேலும் படிக்க | Budget 2025: APY, NPS, UPS, EPS... பட்ஜெட்டில் ஓய்வூதியத் திட்டங்களில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News