EPFO கணக்கில் வரும் பம்பர் தொகை: இந்த வழிகளில் உங்கள் பாலன்ஸை செக் செய்யலாம்
EPF Balance Check: உங்களிடம் பிஎஃப் கணக்கு உள்ளதா? உங்களுக்கு பம்பர் செய்தி. விரைவில் உங்கள் கணக்கில் அரசு குறிப்பிட்ட தொகையை செபாசிட் செய்யும்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் 7 கோடி சந்தாதாரர்களுக்கு, அதாவது இபிஎஃப்ஓ சந்தாதாரர்களுக்கு, இந்த மாத இறுதிக்குள் நல்ல செய்தி வரப் போகிறது. 2022 நிதியாண்டுக்கான வட்டியை இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கில் அரசாங்கம் வரவு வைக்க உள்ளது. இந்த முறை 8.1 சதவீத வட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை கிடைத்த தகவலின்படி, 2022ஆம் நிதியாண்டில் பிஎஃப் கணக்கில் பெற்ற வட்டியை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கணக்கிட்டுள்ளது. விரைவில் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கில் இந்த தொகை மாற்றப்படும். இம்முறை அரசு கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.72,000 கோடி ஊழியர்களின் கணக்குகளில் மாற்றப்படும்.
பணம் எப்போது கணக்கில் வரும்?
கடந்த ஆண்டு வட்டிக்காக மக்கள் 6 முதல் 8 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கடந்த ஆண்டு கோவிட் காரணமாக, சூழல் வித்தியாசமாக இருந்தது. இந்த ஆண்டு இந்த செயல்முறையை அரசு தாமதிக்காது. ஊடக அறிக்கையின்படி, ஆகஸ்ட் மாதத்துக்குள் வட்டி பணத்தை அரசு ஊழியர்களின் கணக்குகளில் மாற்றக்கூடும். 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வட்டி விகிதம் குறைந்துள்ளது.
வட்டி கணக்கீடு மிகவும் எளிது
- உங்கள் பிஎஃப் கணக்கில் ரூ.10 லட்சம் இருந்தால், வட்டியாக ரூ.81,000 கிடைக்கும்.
- உங்கள் பிஎஃப் கணக்கில் ரூ.7 லட்சம் இருந்தால், வட்டியாக ரூ.56,700 கிடைக்கும்.
- உங்கள் பிஎஃப் கணக்கில் ரூ.5 லட்சம் இருந்தால் வட்டியாக ரூ.40,500 கிடைக்கும்.
- உங்கள் பிஎஃப் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் இருந்தால், ரூ.8,100 ரூபாய் கிடைக்கும்.
மேலும் படிக்க | EPFO New Update: EPFO வெளியிட்டுள்ள முக்கியமான 5 புதிய விதிகள்!
1. மிஸ்டு கால் மூலம் இருப்பை தெரிந்துகொள்ளலாம்
உங்கள் பிஎஃப் இருப்பை சரிபார்க்க, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இதற்குப் பிறகு, நீங்கள் இபிஎஃப்ஓ-வின் செய்தி மூலம் பிஎஃப் பற்றிய விவரங்களைப் பெறுவீர்கள். இங்கேயும் உங்கள் யுஏஎன், பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
2. ஆன்லைனில் இருப்பை செக் செய்யலாம்
- ஆன்லைனில் பாலன்ஸ் செக் செய்ய, இபிஎஃப்ஓ இணையதளத்தில் லாக் இன் செய்து, epfindia.gov.in இல் உள்ள இ-பாஸ்புக்கைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் இ-பாஸ்புக்கில் கிளிக் செய்தால், புதிய பக்கம், அதாவது, passbook.epfindia.gov.in என்ற பக்கம் திறக்கும்.
- இப்போது இங்கே உங்கள் பயனர் பெயர் (UAN எண்), கடவுச்சொல் மற்றும் கேப்ட்சாவை நிரப்பவும்
- அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்கு வருவீர்கள். இங்கே நீங்கள் உறுப்பினர் ஐடியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- இ-பாஸ்புக்கில் உங்கள் இபிஎஃப் இருப்பை இங்கே செக் செய்து கொள்ளலாம்.
3. UMANG செயலியிலும் இருப்பை சரிபார்க்கலாம்
- இதற்கு, உமங் செயலியைத் (Unified Mobile Application for New-age Governance) திறந்து இபிஎஃப்ஓ என்பதைக் கிளிக் செய்யவும்.
- இப்போது மற்றொரு பக்கத்தில், பணியாளர்களை மையமாகக் கொண்ட சேவைகளைக் (employee-centric services) கிளிக் செய்யவும்.
- இங்கே நீங்கள் 'View Passbook' என்பதைக் கிளிக் செய்யவும். இதனுடன் உங்கள் UAN எண் மற்றும் கடவுச்சொல் (OTP) எண்ணை நிரப்பவும்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும். இதற்குப் பிறகு உங்கள் பிஎஃப் இருப்பைச் சரிபார்க்கலாம்.
4. SMS மூலம் இருப்பை செக் செய்யும் வழி
உங்கள் UAN எண் இபிஎஃப்ஓ-விஇல் பதிவு செய்யப்பட்டிருந்தால், உங்கள் பிஎஃப் இருப்பு பற்றிய தகவலை செய்தி மூலம் பெறலாம். இதற்கு நீங்கள் EPFOHO என்று டைப் செய்து 7738299899 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும். இதற்குப் பிறகு நீங்கள் செய்தி மூலம் பிஎஃப் தகவலைப் பெறுவீர்கள். உங்களுக்கு ஹிந்தி மொழியில் தகவல் வேண்டுமென்றால், EPFOHO UAN என்று எழுதி அனுப்ப வேண்டும். பிஎஃப் இருப்பை அறியும் இந்த சேவை ஆங்கிலம், பஞ்சாபி, மராத்தி, இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் கிடைக்கிறது. பிஎஃப் இருப்புக்கு, உங்கள் UAN, வங்கிக் கணக்கு, பான் மற்றும் ஆதார் ஆகியவை இணைக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
மேலும் படிக்க | ஆகஸ்ட் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: உங்கள் வாழ்வில் இவற்றின் தாக்கம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ