EPFO Update: பணிஓய்வுக்கு முன்னரே பிஎஃப் தொகையை எடுக்க முடியுமா? எவ்வளவு எடுக்கலாம்?
EPFO Withdrawal: சில காரணங்களால் நீங்கள் உங்கள் வேலையை பாதியிலேயே விட்டுவிட நேரிட்டால், அத்தகைய சூழ்நிலையில் உங்கள் EPF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட PF தொகையை திரும்பப் பெற்று நல்ல இடத்தில் முதலீடு செய்யலாம்.
EPFO Withdrawal: நீங்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் இபிஎஃப் -இல் பங்களிக்கும் பிஎஃப் உறுப்பினராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதியைப் பிடித்தம் செய்து பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கின்றன என்பதை ஊழியர்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால், ஊழியர்கள் சரியான நேரம் வரும்போது சரியான இடத்தில் நல்ல தொகையை முதலீடு செய்ய ஏதுவாக, அவர்களது தொகையை சேமிப்பது நிறுவனத்தின் நோக்கமாகும். ஓய்வு காலத்தில் இந்த பிஎஃப் நிதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனினும், ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பு PF பணத்தை எடுக்க நினைத்தால், சிறிது கூட தாமதிக்க வேண்டாம். இதற்கான வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பணி ஓய்வுக்கு முன் பிஎஃப் பணம்
ஓய்வுபெறும் முன் உங்கள் PF பணத்தை (PF Amount) எளிதாக எடுக்க சரியான நேரம் தற்போது வந்துவிட்டது. ஓய்வு பெறுவதற்கு இன்னும் பல வருடங்கள் உள்ள நிலையில், உங்களுக்கு பணத்தேவை அதிகமாக இருந்தால், நீங்கள் பிஎஃப் பணத்தை எடுக்க நினைத்தால், சற்றும் யோசிக்காமல், தாமதிக்காமல், எளிதாகப் பணத்தை எடுக்கலாம். பிஎஃப் தொகையை எடுத்து ஊழியர்கள் அதை எங்காவது முதலீடு செய்யலாம், அல்லது அவசர தேவகளுக்கு பயன்படுத்தலாம். இதற்கு பணியாளர்கள் சில முக்கியமான விஷயங்களைக் கவனிக்க வேண்டும், சில முக்கியமான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அந்த வழிமுறைகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
பிஎஃப் பணத்தை எப்போது, எந்த சூழ்நிலையில் எடுக்கலாம்? (How To Withdraw PF Amount)
முதலில், பிஎஃப் பணத்தை எப்போது, எந்த சூழ்நிலையில் எடுக்கலாம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு பணம் எடுக்க முடியும் என்பது பற்றிய புரிதல் இருப்பதும் அவசியமாகும். ஊழியர் இன்னும் ஓய்வு பெறவில்லை என்றால் அவசர காலங்களில் மட்டுமே பிஎஃப் பணத்தை எடுக்க முடியும். இது தவிர, பின்வரும் சூழ்நிலைகளில் EPFO இல் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தையும் நீங்கள் திரும்பப் பெறலாம் (Withdraw).
மேலும் படிக்க | EPFO Recruitment 2023: ரூ. 2 லட்சம் வரையில் மாத சம்பளம்! விண்ணப்பிப்பது எப்படி?
வேலையை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டால்
சில காரணங்களால் நீங்கள் உங்கள் வேலையை பாதியிலேயே விட்டுவிட நேரிட்டால், அத்தகைய சூழ்நிலையில் உங்கள் EPF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட PF தொகையை திரும்பப் பெற்று நல்ல இடத்தில் முதலீடு செய்யலாம். அதில் ஊழியர்கள் எந்த பிரச்சனையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படாது. இப்போது கேள்வி என்னவென்றால் எவ்வளவு பணம் எடுக்க முடியும்? உங்களுக்கு ஒரு மாதத்திற்கு வேலை கிடைக்காவிட்டால், வட்டிப் பணத்தில் 75 சதவிகிதம் வரை எடுக்கலாம். மேலும், இரண்டாவது மாதம் முடிந்த பிறகு, 100% பணத்தை எடுக்கலாம். இந்த தொகையை நீங்கள் உங்கள் அவசர தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
பல்வேறு காரணங்களுக்காக நீங்கள் EPF இலிருந்து பணத்தை எடுக்கலாம்
EPFO ஊழியர்கள் பல்வேறு காரணங்களுக்காக EPF இலிருந்து பணத்தை எடுக்கலாம். இதில் ஊழியர்களுக்கு எந்த வித பிரச்சனையையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படாது. ஊழியர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் சிக்கல்களை எதிர்கொண்டால், அவர்கள் எளிதாக PF பணத்தை எடுத்து குழந்தைகளின் கல்விக்கு தேவையான தொகையை முதலீடு செய்யலாம். அதற்கான நிதி உதவிக்காக வேறு எங்கும் கை ஏந்த வேண்டிய அவசியம் ஏற்படாது. மேலும், உங்கள் குழந்தைகளின் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டால், நீங்கள் எளிதாக PF-ல் இருந்து பணத்தை எடுத்து அவர்களின் திருமணத்திற்கு செலவிடலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ