EPS Rule Change: ஓய்வூதிய விதிகளை மாற்றிய அரசு... EPS உறுப்பினர்களுக்கு நிவாரணம்
EPS Rule Change: EPS திட்டத்தின் கீழ், 10 ஆண்டுகளுக்கு முன்பு திட்டத்திலிருந்து வெளியேறும் நபர்கள் பணத்தை எட்டுக்கும் வசதியைப் பெற்றனர். ஆனால் 6 மாதங்களுக்கு முன்பு இந்தத் திட்டத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு அவர்களின் பங்களிப்பில் திரும்பப் பெறும் வசதி வழங்கப்படவில்லை.
EPS Rule Change: மத்திய அரசு வெள்ளிக்கிழமை ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (இபிஎஸ்), 1995 -இல் மாற்றங்களைச் செய்துள்ளது. இப்போது 6 மாதங்களுக்கும் குறைவான பங்களிப்பை வழங்கும் உறுப்பினர்களும் பணத்தை எடுக்க முடியும். இந்த மாற்றம் லட்சக்கணக்கான இபிஎஸ் ஊழியர்களுக்கு பயனளிக்கும். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான இபிஎஸ் உறுப்பினர்கள் ஓய்வூதியத்திற்குத் தேவையான 10 வருட பங்களிப்புச் சேவைக்கு முன் திட்டத்தை விட்டு வெளியேறுகிறார்கள். இதில், 6 மாதங்களுக்குள் இத்திட்டத்தில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகம்.
EPS திட்டத்தின் கீழ், 10 ஆண்டுகளுக்கு முன்பு திட்டத்திலிருந்து வெளியேறும் நபர்கள் பணத்தை எட்டுக்கும் வசதியைப் பெற்றனர். ஆனால் 6 மாதங்களுக்கு முன்பு இந்தத் திட்டத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு அவர்களின் பங்களிப்பில் திரும்பப் பெறும் வசதி வழங்கப்படவில்லை. ஆனால், தற்போது இந்த விதியை மாற்றியமைத்ததன் மூலம் அரசு இபிஎஃஸ் உறுப்பினர்களுக்கு (EPS Members) பெரும் நிவாரணம் அளித்துள்ளது. புதிய திருத்தம், 6 மாதங்களுக்கும் குறைவான பங்களிப்புச் சேவைக்குப் பிறகு திட்டத்தை விட்டு வெளியேறும் உறுப்பினர்களுக்கு நிவாரணம் அளிக்கும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான இபிஎஸ் உறுப்பினர்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.
அரசு இந்த விதியையும் மாற்றியது
இந்த திட்டத்தை மேலும் சிறப்பாக்க, அரசாங்கம் EPS விவரங்களையும் திருத்தியுள்ளது. இனி, பணத்தை திரும்பப் பெறும் அதாவது வித்ட்ரா செய்யும் பலன், உறுப்பினர் எத்தனை மாதங்கள் சேவை செய்துள்ளார் மற்றும் சம்பளத்தில் எவ்வளவு இபிஎஸ் பங்களிப்பு செய்துள்ளார் என்பதைப் பொறுத்து இருக்கும். இந்த விதி பணத்தை எடுப்பதை எளிதாக்கும். இந்த மாற்றத்தால் 23 லட்சத்துக்கும் அதிகமான EPS உறுப்பினர்கள் பயனடைவார்கள்.
EPS: முந்தைய விதி என்னவாக இருந்தது?
இதுவரை, பணி ஆண்டுகளில் பங்களிப்பு சேவையின் கால அளவு மற்றும் EPS பங்களிப்புகள் செலுத்தப்பட்ட சம்பளத்தின் அடிப்படையில் வித்ட்ராயல் பலன் கணக்கிடப்பட்டது. 6 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பங்களிப்புச் சேவையை முடித்த பின்னரே உறுப்பினர்கள் அத்தகைய பலன்களைப் பெறுவார்கள். இதன் விளைவாக, 6 மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக பங்களிக்கும் முன், திட்டத்திலிருந்து வெளியேறும் உறுப்பினர்கள், இந்த பெலனைப் பெற முடியாமல் போனது.
மேலும் படிக்க | புதிய வரி முறையில் இருந்து பழைய வரி முறைக்கு மாறணுமா... சுலபம் தான்..!!
7 லட்சம் க்ளெய்ம்கள் நிராகரிக்கப்பட்டன
பல உறுப்பினர்கள் 6 மாதங்களுக்கும் குறைவான பங்களிப்பு சேவை இல்லாமல் வெளியேறுவதால், பழைய விதியின் காரணமாக பல கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. அரசாங்க அறிவிப்பின்படி, 2023-24 நிதியாண்டில் 6 மாதங்களுக்கும் குறைவான பங்களிப்புச் சேவையின் காரணமாக சுமார் 7 லட்சம் வித்ட்ராயல் க்ளெய்ம்கள் நிராகரிக்கப்பட்டன. இப்போது 14.06.2024க்குள் 58 வயதை எட்டாத இபிஎஸ் உறுப்பினர்கள் வித்ட்ராயல் பலன்களைப் பெறுவார்கள்.
EPS என்றால் என்ன?
பணியாளர் ஓய்வூதியத் திட்டமான EPS ஒரு ஓய்வூதியத் திட்டமாகும். இது EPFO ஆல் நிர்வகிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 10 ஆண்டுகளுக்கு பங்களிப்பு செலுத்த வேண்டும். அதன் பின்னர் நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் பெற தகுதியுடையவர் ஆவீர்கள். ஏற்கனவே உள்ள மற்றும் புதிய EPF உறுப்பினர்கள் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாதா மாதம் ஊழியர்களும் பணியமர்த்துபவர்/நிறுவனமும் சம்பளத்தில் 12% -ஐ இபிஎஃப் கணக்கில் (EPF Account) பங்களிக்கின்றனர். எனினும், ஒவ்வொரு மாதமும் பணியாளரின் பங்களிப்பின் முழுப் பங்கும் EPF க்கும், முதலாளி/நிறுவனத்தின் பங்களிப்பில் 8.33% ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கும் (EPS), 3.67% EPF க்கும் செல்கிறது. குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ