ESIC Scheme: இந்தியாவில் குறைந்த வருமானம் பெறும் ஊழியர்களின் நலனை மேம்படுத்தும் விதமாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் நடத்தப்படும் ஒரு அரசுத் திட்டம் தான் பணியாளர்கள் மாநில காப்பீட்டுத் திட்டம் (இஎஸ்ஐசி) ஆகும்.  அரசாங்கத்தால் இஎஸ்ஐ கார்டு வழங்கப்பட்ட தகுதியுள்ள மில்லியன் கணக்கான ஊழியர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை மற்றும் ஓய்வூதியத்தை இந்த திட்டம் வழங்குகிறது.  பணியாளர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களிலிருந்து தகுதியான நபர்களை தேர்வு செய்கிறது.  மாத வருமானம் ரூ.21,000க்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இஎஸ்ஐசி திட்டத்தின் நன்மைகள் கிடைக்கும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மார்ச் 1, 2023 முதல் பல விதிகளில் மாற்றம்: சாமானியர்களுக்கு நேரடி தாக்கம்


இஎஸ்ஐசி திட்டத்தில் ஊழியர் மற்றும் நிறுவனம் இருவரும் சேர்ந்து பங்களிக்க வேண்டும்.  பணியாளரின் சம்பளத்தில் 1.75 சதவீதம் மற்றும் நிறுவனம் 4.75 சதவீதமும் பங்களிக்க வேண்டும்.  முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஊழியரின் தினசரி சம்பளம் ரூ.137 க்கு குறைவாக இருந்தால் பங்கை அரசாங்கம் ஈடுசெய்கிறது.  இஎஸ்ஐசி திட்டத்தின் கீழ், மத்திய அரசு குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கு இலவச மருத்துவ வசதிகளை வழங்குகிறது, சுமார் 150-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் இந்த திட்டத்தின் நன்மைகள் கிடைக்கின்றது. பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது மற்றும் பிரசவத்திற்குப் பிறகு 26 வாரங்களுக்கு முழு சம்பளம் வழங்கப்படுகிறது.



இந்த திட்டத்தில் பங்களிக்கும் ஊழியர் இறந்தால் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.10,000 வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.  இஎஸ்ஐசி திட்டத்திற்கு விண்ணப்பிக்க 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும்.  அரசாங்கம் தகுதியான ஊழியர்களுக்கு தானாகவே இஎஸ்ஐ அட்டைகளை வழங்குகிறது.


மேலும் படிக்க | Pension: அரசு அளித்த பரிசு, இவர்களுக்கு இனி அதிக பென்ஷன், இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ