புது டெல்லி: ஜிஎஸ்டி வருவாயின் பற்றாக்குறையை பூர்த்தி செய்யவும் மற்றும் மாநிலங்கள் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி என இரண்டு முக்கிய விவகாரத்தை, இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் (GST Council) கூட்டத்தில் முன் வைத்தது. இது நடப்பு நிதியாண்டில் ரூ .2.35 லட்சம் கோடியாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜிஎஸ்டி கவுன்சிலின் 41 வது கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman), பொருளாதாரம் ஒரு அசாதாரணமான சூழ்நிலையை எதிர்கொள்கிறது. இது "கடவுளின் செயல்" (Act of God). இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் மந்தம் ஏற்படக்கூடும் என்றார்.


மத்திய அரசின் கணக்கீட்டின்படி, நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை ரூ .3 லட்சம் கோடியாக இருக்கும். அதில் ரூ. 65,000 கோடி ஜிஎஸ்டி மூலம் வசூலிக்கப்படும் தொகையிலிருந்து பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மொத்த பற்றாக்குறை ரூ. 2.35 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.


ALSO READ |  ஆதார் அட்டையை பயன்படுத்தி ஜிஎஸ்டி எப்படி பதிவு செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்


வருவாய் செயலாளர் அஜய் பூஷண் பாண்டே (Ajay Bhushan Pandey) கூறுகையில், "இந்த ஆண்டு எழுந்துள்ள இழப்பீட்டு இடைவெளி (ரூ .2.35 லட்சம் கோடி என்று எதிர்பார்க்கப்படுகிறது), கொரோனா வைரஸ் காரணமாகவும் உள்ளது. இந்த மதிப்பீட்டில் ரூ. 97,000 கோடி ஜிஎஸ்டி பற்றாக்குறை காரணமாகவும், மீதமுள்ளவை கொரோனா வைரஸின் தாக்கத்தால் ஏற்பட்டு உள்ளது என்று அவர் கூறினார்.


நியாயமான வட்டி விகிதத்தில் 97,000 கோடி ரூபாய் கடன் வாங்குவதற்கு ரிசர்வ் வங்கியுடன் (RBI) கலந்தாலோசித்து மாநிலங்களுக்கு சிறப்பு சாளரம் வழங்க முடியும் என்று பாண்டே கூறினார். 


"ஏப்ரல்-ஜூலை 2020 ஆம் காலக்கட்டத்தில் மாநிலங்களுக்கு செலுத்த வேண்டிய மொத்த ஜிஎஸ்டி இழப்பீடு ரூ .1.5 லட்சம் கோடி ஆகும். ஏனென்றால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஜிஎஸ்டி வசூல் எதுவும் இல்லை" என்று பாண்டே கூறினார்.


ALSO READ |  GST தாக்கல் செய்ய தாமதமானால் அபராதம் இருக்காது: நிர்மலா சீதாராமன்


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 41 வது கூட்டம் மற்றும் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியது, மாநிலங்களின் வருவாயின் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கான வழிகள் குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் விவாதங்கள் நடைபெற்றது.