புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் தங்கள் நிலுவையை ரொக்கமாக செலுத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு எந்த அறிவுறுத்தலையும் வெளியிடவில்லை என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ள செய்திகளின்படி, சில ஜிஎஸ்டி அதிகாரிகள் 'அதிகபட்ச வரிப் பொறுப்பை' 'பணத்தில்' செலுத்துமாறு கேட்டனர். அதற்காக தொலைபேசி அழைப்புகள், வாட்ஸ்அப் போன்ற அங்கீகரிக்கப்படாத தகவல்தொடர்பு வழிகளைப் பயன்படுத்துவதாக செய்திகள் வந்தன.


நிதியாண்டிற்கான ஜிஎஸ்டியிலிருந்து வருவாய் வசூலிப்பதற்கான இலக்குகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக இது செய்யப்பட்டுள்ளது என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


Also Read | கணினியில் WhatsApp வீடியோ கால் செய்வது எப்படி என்று தெரியுமா?


அரசாங்கமோ அல்லது மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியமோ (Central Board of Indirect Taxes and Customs (CBIC)) தங்கள் கள அமைப்புகளுக்கு இதுபோன்ற எந்த அறிவுறுத்தல்களையும் வெளியிடவில்லை என்பதை தெளிவுபடுத்துவதாக நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.


மேலும், பி.டி.ஐ யின் அறிக்கையின்படி, ஜி.எஸ்.டி வரி செலுத்துவோர் தங்கள் கிரெடிட் லெட்ஜரில் கிடைக்கும் உள்ளீட்டு வரித் தொகையை (Input Tax Credit) மார்ச் மாதத்திற்கான ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை செலுத்தப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நிதியமைச்சகம் சனிக்கிழமையன்று தெரிவித்துள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


"வரி செலுத்துவோர் தங்கள் கடன் லெட்ஜரில் கிடைக்கும் உள்ளீட்டு வரிக் கடனை, சட்டப்படி அனுமதிக்கப்பட்டபடி, இந்த நிதியாண்டின் கடைசி மாதமான 2021 மார்ச் மாதத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையைப் பயன்படுத்தலாம்" என்று மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக, பிப்ரவரி மாதம் 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது. பிப்ரவரி மாதத்தில் 1.13 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஜி.எஸ்.டி வசூலானது.


Also Read | கைதிகளுக்கு GPS tag அணிவித்தால் குற்றங்கள் கட்டுப்படும் என்பது உண்மையா?


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR