கைதிகளுக்கு GPS tag அணிவித்தால் குற்றங்கள் கட்டுப்படும் என்பது உண்மையா?

சிறைக் கைதிகளுக்கு GPS tag அணிவித்தால் குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும் என்ற ஆய்வு ஆச்சரியத்தை அளிக்கிறது. இது சாத்தியமா என்பதை தெளிவுபடுத்த, ஒரு நாடு இதனை அமல்படுத்தவும் தொடங்கிவிட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 18, 2021, 08:14 AM IST
  • சிறையில் இருந்து விடுதலையாகும் கைதிகளுக்கு GPS tag
  • உலகிலேயே இங்கிலாந்து முதலில் அறிமுகப்படுத்துகிறது
  • விடுதலையான குற்றவாளிகள் மீண்டும் குற்றத்தில் ஈடுபடாமல் தடுக்கும் முயற்சி
கைதிகளுக்கு GPS tag அணிவித்தால் குற்றங்கள் கட்டுப்படும் என்பது உண்மையா? title=

சிறைக் கைதிகளுக்கு GPS tag அணிவித்தால் குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும் என்ற ஆய்வு ஆச்சரியத்தை அளிக்கிறது. இது சாத்தியமா என்பதை தெளிவுபடுத்த, ஒரு நாடு இதனை அமல்படுத்தவும் தொடங்கிவிட்டது.

உலகிலேயே முதல்முறையாக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது பிரிட்டன். திருடர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபவதைக் கட்டுப்படுத்த, குறியீடுகள் கொண்ட ஜி.பி.எஸ் டேஹ்களை (GPS tag) அணிய வேண்டும். 

இந்த முன்முயற்சியில், கொள்ளையர்கள், திருடர்கள் மற்றும் வழிப்பறி செய்பவர்கள் சிறையில் இருந்து வெளியே செல்லும்போது அவர்களுக்கு ஜிபிஎஸ் டேஹ்கள் பொருத்தப்படும். அது அவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராயப்படும்.

Also Read | Instagram Filter போல தோற்றமளிக்க 30 லட்சம் ரூபாய் செலவு! 

இதுதொடர்பாக அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகளின்படி, ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் விடுதலை செய்யப்படும்போது, ஜி.பி.எஸ் குறிச்சொல்லுடன் பிணைக்கப்படுவார்கள், இது அவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க உதவும். அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பது போன்ற நடவடிக்கைகளை நகர்வுகளை 24/7 கண்காணிக்க முடியும்.

திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டக் குற்றவாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒரு வருடத்திற்குள் மீண்டும் அதே தவறுகளை செய்கின்றனர். ஆனால், அதில் 80 சதவிகிதத்திற்கு மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்படுவதில்லை. எனவே, ஜி.பி.எஸ் டேக் பொருத்துவது போன்ற முயற்சி, குற்றவாளிகள் மீண்டும் குற்றத்தில் ஈடுபடுவதை தடுக்கும் என்று இங்கிலாந்து நீதி அமைச்சகம் (Ministry of Justice) தெரிவித்துள்ளது.

Also Read | 7th Pay Commission New updates: இந்த தேதியில் இருந்து DA, DR சலுகைகள் கிடைக்கும் 

"அவர்களின் நகர்வுகளை கண்காணிப்பதன் மூலம், குற்றம் செய்வதற்கான தூண்டுதலைக் குறைக்க முடியும், மீண்டும் தவறு செய்தால் காவல்துறையினருக்கு தெரிந்துவிடும் என்பதும், தாங்கள் தொடர் கண்காணிப்பில் இருக்கிறோம் என்ற எண்ணமும் அவர்களின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும்" என்று குற்றம் மற்றும் காவல்துறை அமைச்சர் கிட் மால்ட்ஹவுஸ் (Kit Malthouse, minister for crime and policing) தெரிவித்ததாக ஒரு பத்திரிகை செய்தி கூறுகிறது.  

ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும் குற்றவாளிகள் சமீபத்திய கொள்ளை, திருட்டு மற்றும் கொள்ளை போன்றவை நடந்த பகுதிகளில் இருந்தார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள இந்த தகவல்கள் உதவும்.

இது, சிறை மற்றும் நன்னடத்தை சேவை ஊழியர்களுடன் (Prison and Probation Service staff) காவல்துறையினர் இணைந்து பணியாற்ற உதவும். இதனால், குற்றவாளிகளை கைது செய்ய தேவையான முக்கிய ஆதாரங்களை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கக்கூடும்.

Also Read | Data Theft: OTPகள் பாதுகாப்பாக இல்லை, SMS மூலம் தரவுகள் திருட்டு   

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News