Fixed Deposit Interest Rates: கடந்த சில தினங்களாக பங்குச் சந்தையில் அதிகமான ஏற்ற இறக்கங்களை காண முடிகின்றது. பங்குச் சந்தை முதலீடு பலன் தருமா அல்லது பாரம்பரிய முதலீட்டு வழிகளை பின்பற்றலாமா என்ற குழப்பம் மீண்டும் மக்களை சூழ்ந்துள்ளது. இதற்கிடையில், தனியார் வங்கியான யெஸ் வங்கி தனது நிலையான வைப்பு வட்டி விகிதத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யெஸ் பேங்க் 25 அடிப்படைப் புள்ளிகளைக் குறைத்துள்ளது. இது நவம்பர் 5, 2024 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து பொதுக் குடிமக்களுக்கு, யெஸ் வங்கியில் FD விகிதங்கள் 3.25% முதல் 7.75% வரை இருக்கும். மூத்த குடிமக்களுக்கு இது 3.75% முதல் 8.25 வரை வட்டி கிடைக்கும். அதிகபட்ச வட்டி விகிதம் 18 மாத FD க்கு வழங்கப்படும் 7.75% ஆகும். மூத்த குடிமக்களுக்கு 8.25% இது ஆக உள்ளது.


இந்தியாவின் பிற பிரபலமான சில வங்கிகளின் தற்போதைய வட்டி விகிதங்கள் என்ன? ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகிய வங்கிகள் என்ன வட்டி விகிதங்களை அளிக்கின்றன? இந்த விவரங்களை இங்கே காணலாம். இந்த தகவல் முதலீடு செய்யும் முன் உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். 


SBI FD Rates


பாரத ஸ்டேட் வங்கியில் (State Bank of India), பொது குடிமக்களுக்கான வட்டி விகிதம் 3.50% முதல் 7.10% வரை உள்ளது. மூத்த குடிமக்களுக்கு இது 4% முதல் 7.60% ஆக உள்ளது. எஸ்பிஐயின் சிறப்பு “400 நாட்கள்” திட்டத்தில், மூத்த குடிமக்கள் 7.60% வட்டி பெறுகிறார்கள்.


மேலும் படிக்க | NPS Calculator: ரூ.50,000 மாத ஓய்வூதியம் பெறுவது எப்படி? இதோ முழுமையான கணக்கீடு


ICICI Bank Fixed Deposit Rates


ஐசிஐசிஐ வங்கி, பொதுக் குடிமக்களுக்கு 3% முதல் 7.25% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3.50% முதல் 7.80% வரையிலும் நிலையான வைப்பு விகிதங்களை குறைத்துள்ளது. இந்த வங்கியில் 15 முதல் 18 மாதங்களுக்கான FD க்கு அதிகபட்சமாக 7.80% வட்டி வழங்கப்படுகிறது.


HDFC Bank FD Rates


HDFC வங்கி தனது FD விகிதங்களை மாற்றி பொது குடிமக்களுக்கு 3% முதல் 7.35% வரையிலும் மூத்த குடிமக்களுக்கு 3.50% லிருந்து 7.85% ஆகவும் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த வங்கியில், 2 ஆண்டுகள் 11 மாதங்கள் முதல் 35 மாதங்கள் வரையிலான கால அளவிலான FD -களுக்கு 7.75% வட்டி கிடைகின்றது.


PNB FD Rates


பஞ்சாப் நேஷனல் வங்கியும் (PNB) ஃபிக்சட் டெபாசிட் விகிதங்களை 3.50% முதல் 7.25% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 4% முதல் 7.75% வரையிலும் நிர்ணயித்துள்ளது. PNB இன் அதிகபட்ச வட்டி விகிதம் 400 நாட்கள் FD -க்கு 7.75% ஆகும்.


மேலும் படிக்க | IRCTC புதிய விதிகள்! இனி ஒருவர் இத்தனை டிக்கெட்டிற்கு மேல் புக் செய்ய முடியாது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ