நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீடு என்ற கனவை நனவாக்க உதவுவது வீட்டுக் கடன். வீட்டுக் கடன் வசதி இல்லை என்றால், வீடு வாங்குவது நிச்சயம் சாத்தியமே இல்லை எனலாம். இப்போதெல்லாம் குறைந்த வட்டியில் வீட்டு கடன் கிடைக்கிறது. வீட்டுக் கடனுக்கான வட்டியை பொருத்தவரை, இரண்டு வகையில் வட்டி வசூலிக்கப்படுகிறது. ஒன்று நிலையான வட்டி விகிதம். இன்னொன்று ஃப்ளோட்டிங் வட்டி விகிதம். இந்த இரண்டில் ஒன்றை வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்க வேண்டும். இதை தேர்ந்தெடுக்கும் போது, உங்களுக்கான ஏற்ற வட்டி விகித முறையை தேர்ந்தெடுக்க அது குறித்த சாதக பாதகங்களை அறிந்திருப்பது முக்கியம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக, நிலையான வட்டி விகிதத்தை தேர்ந்தெடுப்பதால், கிடைக்கும் நன்மைகள் அல்லது ஏற்படும் பாதிப்புகள் என்ன, மறுபுறம் ஃப்ளோட்டிங் வட்டி முறையினால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்ன என்பதை ஆராய வேண்டும். இரண்டில் எது சிறந்தது என்பதை அறிந்து கொண்டு, அதனை தேர்தெடுப்பதால், நிதி இழப்புகளை தவிர்க்கலாம்.


நிலையான வட்டி விகிதத்தின் சாதகங்கள் மற்றும் பாதகங்கள்


வீட்டுக் கடன் (Home Loan) வாங்கும் போது, நீங்கள் நிலையான வட்டி விகித முறையை தேர்ந்தெடுத்தால், கடன் காலத்திற்கான வட்டி விகிதம் மற்றும் இஎம்ஐ (EMI) நிலையானதாக இருக்கும். இதனால் கிடைக்கும் சாதகங்கள் என்ன என்று பார்த்தால் உங்கள் நிதி திட்டங்களை நீண்ட காலத்திற்காக உருவாக்கும் போது, உங்களுக்கான நிதி பொறுப்புகள் வருங்காலத்தில் எந்த அளவில் இருக்கும் என்பதை சரியாக தீர்மானிக்க முடியும். ப்ளோட்டிங் விகித முறையை தேர்ந்தெடுக்கும் போது, அதனை வங்கிகள் அதனை அமல்படுத்தும் விதம் சிக்கலானது என்பதால், அதை புரிந்து கொள்வதும் முக்கியம். மேலும் வட்டி விகிதங்கள் உயரும் சூழ்நிலை இருந்தால், நிலையான வட்டி விகிதத்தை தேர்ந்தெடுக்கும் நபர்கள் ஆதாயம் அடைவார்கள். ஏனென்றால் வட்டி விகிதம் உயர்ந்தாலும், உங்களுக்கான வட்டி விகிதம் உயராமல் நிலையாக இருக்கும்.


நிலையான வட்டி விகித முறையினால் ஏற்படும் பாதகங்கள்


நிலையான வட்டி விகிதத்தை பொருத்தவரை, வங்கிகள் அதனுடன் தொடர்புடைய ரிஸ்க் ஃபேக்டர் காரணமாக நிலையான வட்டி விகித கடனுக்கான சராசரி கட்டணங்கள் 100 பிபிஎஸ் முதல் 200 பிபிஎஸ் வரை அதிகமாகும். இதனால் நீங்கள் செலுத்தும் வட்டி மற்றும் இஎம்ஐ ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும். வட்டி விகிதங்கள் குறையும் சந்தர்ப்பத்தில், நீங்கள் சந்தையை விட அதிகமாக வட்டி செலுத்த வேண்டி இருக்கும். இதனால் உங்களுக்கு நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை ஏற்படலாம்.


மேலும் படிக்க | கணவன் - மனைவிக்கிடையே இவ்வளவு தொகைக்கு மேல் அனுப்ப கூடாதா?


ப்ளோட்டிங் வட்டி விகித முறையில் உள்ள சாதகங்கள் மற்றும் பாதகங்கள்


வீட்டுக் கடனை நீங்கள் ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் வாங்கும் போது, சந்தை நிலவரத்தை பொறுத்து வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் பெஞ்ச் மார்க் விகிதத்துடன் இணைக்கப்படும். ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தும் போது, வங்கிகளும் உங்களுக்கான வட்டியை அதிகரிக்கும். அதே நேரத்தில் ரிசர்வ் வங்கி, கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் போது, உங்களுக்கான வட்டி விகிதம் குறையும். வட்டி விகிதம் குறையும் வாய்ப்புள்ளது என்று நீங்கள் கணித்தால், ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இதனால் உங்கள் இஎம்ஐ தொகை மற்றும் வட்டி வருங்காலத்தில் குறையும் வாய்ப்பு உள்ளது.


மேலும் படிக்க | EPFO Update: பணி ஓய்வுக்கு முன் பிஎஃப் பணத்தை எடுப்பது எப்படி? இதற்கான விதிகள் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ