பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளமான ப்ளிப்கார்ட் நிறுவனம் 2023ம் ஆண்டின் குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறந்த சலுகையில் தனது விற்பனையினை அறிவித்துள்ளது.  வால்மார்ட்-க்கு சொந்தமான நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் விழாக்கால விற்பனைக்காக சில புதிய அப்டேட்டுகளை செய்துள்ளது.  ப்ளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையானது ஜனவரி 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு  ஜனவரி 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  ப்ளிப்கார்ட் ப்ளஸ் உறுப்பினர்கள் ஜனவரி 14 ஆம் தேதி நள்ளிரவு முதல் சலுகைகளைப் பெற முடியும் என்றும் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.  மேலும் வாடிக்கையாளர்கள் 40 ப்ளிப்கார்ட் சூப்பர் காயின்களை பயன்படுத்தி பிளஸ் மெம்பர்ஷிப்பிற்காக பதிவு செய்து முன்னதாகவே இந்த விற்பனையில் இணைந்து கொள்ளலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Budget 2023-ல் வரப்போகும் மாஸ் செய்தி: இவர்களுக்கு நிவாரணம், HRA-வில் அரசின் பெரிய முடிவு 


ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த விழாக்கால விற்பனை நிச்சயம் ஆஃபர்களின் அணிவகுப்பாக இருக்கும் என்றும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.  மேலும் இந்த விற்பனை காலத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கினால் அவர்கள் மிகப்பெரியளவில் பணத்தை சேமிக்கலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த விழாக்கால விற்பனையில் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருளை வாங்குபவர்களுக்கு 5% வரை கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படுகிறது.  இதுதவிர இ-காமர்ஸ் சேனல் சிட்டி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ஷாப்பிங் செய்பவர்களுக்கு 10% உடனடி தள்ளுபடியை வழங்குகிறது.  மேலும் பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில் பே லேட்டர் திட்டமும் வழங்கப்படுகிறது, வாடிக்கைகையாளர்களுக்கு ரூ.1000 மதிப்புள்ள கிஃப்ட் கார்டுகளை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  அதேசமயம் இந்த விற்பனை காலத்தில் ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி வழங்கப்படும் என்று ப்ளிப்கார்ட் நிறுவனம் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மடிக்கணினிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களுக்கு 80% தள்ளுபடி வழங்குவதாக ப்ளிப்கார்ட் நிறுவனம் கூறியுள்ளது.  மேலும் ப்ளிப்கார்ட் தொலைக்காட்சிகள், சமையலறை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 75% வரை தள்ளுபடியை வழங்கும்.  இதுதவிர இன்னும் சில பொருட்களுக்கு நிறுவனம் அதிக தள்ளுபடிகளை வழங்குகிறது.  விற்பனையின் போது ​​​​நள்ளிரவு 12, காலை 8 மற்றும் மாலை 4 மணிக்கு புதிய சலுகைகள் வழங்கப்படும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.  ஜனவரி 15 வரை கிடைக்கும் ரஷ் ஹவர் ஒப்பந்த திட்டத்தையும் ப்ளிப்கார்ட் வழங்குகிறது, விற்பனையின் போது டிக் டாக் ஒப்பந்தங்களையும் தொடங்கும் மற்றும் இந்த திட்டம் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை குறைந்த விலையில் பொருட்களை வழங்கும்.


மேலும் படிக்க | உஷார் மக்களே, இப்பொழுதே வாங்கிவிடுங்கள்: பட்ஜெட்டுக்கு பின் இந்த 35 பொருட்களின் விலை உயரும்!! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ