Budget 2023-ல் வரப்போகும் மாஸ் செய்தி: இவர்களுக்கு நிவாரணம், HRA-வில் அரசின் பெரிய முடிவு

Budget 2023: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை சாமானியர்களை மகிழ்விக்கும் வகையில் பல அறிவிப்புகளை வெளியிடுவார். மெட்ரோ அல்லாத நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்ஜெட்டில் பெரிய பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 10, 2023, 04:44 PM IST
  • அரசு வீட்டு வாடகை கொடுப்பனவில் விலக்கு வரம்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • மெட்ரோ அல்லாத நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்ஆர்ஏ விலக்கு வரம்பு 50 சதவீதமாக அதிகரிக்கப்படக்கூடும்.
  • விலக்கு வரம்பை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை உள்ளது.
Budget 2023-ல் வரப்போகும் மாஸ் செய்தி: இவர்களுக்கு நிவாரணம், HRA-வில் அரசின் பெரிய முடிவு title=

பட்ஜெட் 2023-எச்ஆர்ஏ வரி விலக்கு: இந்த ஆண்டு பிப்ரவரி 1, 2023 அன்று தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டுக்கான ஏற்பாடுகளை அரசாங்கம் தீவிரமாக செய்துகொண்டிருக்கின்றது. இம்முறை அரசு தரப்பில் இருந்து மாத சம்பளம் பெறும் பணிபுரியும் மக்களுக்கு (சேலரீட் கிளாஸ்) பெரும் நிவாரணம் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை சாமானியர்களை மகிழ்விக்கும் வகையில் பல அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கபடுகின்றது.

அந்த வகையில், மெட்ரோ அல்லாத நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்ஜெட்டில் பெரிய பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த முறை அரசு வீட்டு வாடகை கொடுப்பனவில் விலக்கு வரம்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி அமைச்சகத்தின் பெரிய திட்டம்

யூனியன் பட்ஜெட் 2023 இல், மெட்ரோ அல்லாத நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்ஆர்ஏ விலக்கு வரம்பு 50 சதவீதமாக அதிகரிக்கப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தவிர, சம்பளம் பெறாத நபர்களுக்கு ( நான்-சேலரீட் கிளாஸ்) எச்ஆர்ஏ விலக்கு வரம்பை 60,000 ரூபாயிலிருந்து அதிகரிக்கலாம். எச்.ஆர்.ஏ-வில் விலக்கு அளிப்பது தொடர்பாக நிதி அமைச்சகத்தால் பெரிய திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க | Budget 2023: நிர்மலா சீதாராமன் அளிக்கவுள்ள மிகப்பெரிய நிவாரணம், இந்த விலக்கு வரம்பில் மாற்றம்

தற்போது, ​​மெட்ரோ நகரங்களுக்கான வீட்டு வாடகைக் கொடுப்பனவுக்கான விலக்கு, அடிப்படை மற்றும் அகவிலைப்படியில் அதிகபட்சமாக 50 சதவிகிதம் வரை உள்ளது. மெட்ரோ அல்லாத நகரங்களுக்கு, இந்த வரம்பு அடிப்படை மற்றும் அகவிலைப்படியின் மொத்தத் தொகையில் 40 சதவிகிதமாக உள்ளது. நாட்டின் நான்கு நகரங்கள் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை மெட்ரோ நகரங்களின் கீழ் வருகின்றன. இது தவிர, புனே, பெங்களூரு, பாட்னா, ஹைதராபாத் போன்றவை மெட்ரோ அல்லாத பிரிவின் கீழ் வருகின்றன.

விலக்கு வரம்பை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை 

ஹெச்ஆர்ஏ மீதான விலக்கு வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று பெங்களூரு தெற்கு எம்பி தேஜஸ்வி சூர்யா நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். பெங்களூரு, அகமதாபாத், ஐதராபாத், புனே மற்றும் நொய்டா நகரங்களில் வாடகை அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், எச்ஆர்ஏவில் விலக்கு வரம்பை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. சம்பளப் பிரிவைத் தவிர, சம்பளம் பெறாத நபர்களுக்கும் HRA விலக்கை நீட்டிக்க அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

தற்போது இந்த வரம்பு மாதம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.60,000 ஆக உள்ளது. ஆனால் இந்த பட்ஜெட்டில் இது ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ​​80GG பிரிவின் கீழ் சம்பளம் பெறாத நபர்களுக்கு HRA வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.60 ஆயிரம் வரை மட்டுமே க்ளைம் செய்ய முடியும்.

மேலும் படிக்க | Income Tax: 7 அடுக்குகள் கொண்ட வரிவசூல் முறை, முக்கிய தகவலை தெரிந்து கொள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News