புதுமண ஜோடிகளே... வாழ்க்கையில் பணப் பிரச்னை வராமல் இருக்க... இதை கண்டிப்பாக படிங்க!
Financial Tips In Tamil: புதுமண தம்பதிகள் வாழ்வில் எவ்வித பொருளாதார பிரச்னைகளும் ஏற்படாமல் இருக்க, தங்களின் ஆரம்ப காலகட்டத்திலேயே இந்த விஷயங்களை குறித்து நல்ல புரிதலுக்கு வர வேண்டும்.
Financial Tips For Newly Married Couple: திருமணத்திற்கு கணவன் - மனைவி இருவரின் வாழ்வும் ஒன்றாகிவிடும். அவரவருக்கு தனித் தனி வேலையும், பழக்கவழக்கமும் இருந்தாலும், கணவன் - மனைவி இருவரும்தான் பெரும்பாலான நேரத்தை செலவிடப் போகிறார்கள். இருவரும்தான் எதிர்கால கனவுகளை இணைந்து நிறைவேற்றப் போகிறார்கள். அப்படியிருக்க, நிதி சார்ந்த விஷயத்திலும் இருவரும் ஒற்றுமையாகவே செயல்படுவதே சிறப்பான இல்லற வாழ்வுக்கு வழிவகுக்கும். உன் வருமானத்தை நீ பார்த்துக்கொள், என் வருமானத்தை நான் பார்த்துக்கொள்கிறேன், செலவுகளை மட்டும் பகிர்ந்துகொள்வோம் என கூறுவது ஆரோக்கியமான ஒன்று என்றாலும், அதில் பிரச்னைகளும் இருக்கின்றன.
அதற்கு பதில் இருவரும் பரஸ்பரம் பேசி புரிந்துகொண்டு இருவரும் வருமானத்தையும் வைத்து செலவுகளை செய்வது மட்டுமின்றி எதிர்காலத்திற்கான சேமிப்பு, முதலீடு ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். அது கணவன் அல்லது மனைவி என ஒற்றை நபரால் சாத்தியமாகாது. இருவரின் வருமானமும் ஒன்றாகும்போது தான் இது சாத்தியப்படும். எதிர்காலத்தில் குழந்தைகளுக்கான மருத்துவம், கல்வி சார்ந்த செலவுகள் தொடங்கி தங்களின் ஓய்வு கால வருமானம் வரை அனைத்திற்கும் இருவரும் திருமணமான புதிதிலேயே நல்ல முடிவுக்கு வருவது சிறப்பான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
சேமிப்பு குறித்தும், செலவு செய்வது குறித்தும் நீங்கள் இருவரும் என்ன நினைக்கிறீர்கள் என்பதை திருமணத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ பேசி தெரிந்துகொள்ள வேண்டும். திருமணத்திற்கு முன் பேசுவதும் நல்லதுதான். அதேபோல், இருவருக்கும் இருக்கும் கடன்கள் குறித்து இருவருமே தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோல், வீடு கட்டுவது, குழந்தைகளுக்கான கல்வி, சுற்றுலா திட்டங்கள் ஆகிய எதிர்கால திட்டங்கள் குறித்தும் பேசி தெரிந்துகொள்ள வேண்டும். இது வருங்காலத்தில் தேவையற்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தாது.
செலவுகளை பிரித்துக்கொள்ளுதல்
முதலில் உங்களுக்கு வரும் வருமானத்தில் மாதம் எவ்வளவு செலவாகிறது என்பதை கண்காணியுங்கள். அத்தியாவசிய தேவைகளுக்கு எவ்வளவு செலவாகிறது, மற்றவைக்கு எவ்வளவு செலவாகிறது என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அதன்பின் அதில் கட்டுப்பாட்டை விதியங்கள். அதாவது, சினிமாவுக்கு செல்வது, வெளியே உணவு சாப்பிட செல்வது ஆகியவைக்கு மாதம் இவ்வளவுதான் என பட்ஜெட் போட்டு செலவு செய்யுங்கள். இருவரும் செலவுகளை சமமாக பிரித்துக்கொள்ளுங்கள்.
சேமிப்பு
முதலீடு ஒருபுறம் இருக்க, அவசர காலத்தில் கைக்கொடுக்கும் சேமிப்பு ஒன்றையும் நீங்கள் இருவரும் சேர்ந்து வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, இருவருக்கும் சுமார் 6 மாதக்காலம் வருமானமே இல்லையென்றாலும் அந்த தொகையை வைத்து வாழ்ந்துகொள்ளலாம் என்றளவிற்கு இந்த அவசரகால நிதியை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். இதற்காக மாதம் இருவரும் சேர்ந்து தங்களால் முடிந்தளவிற்கு பெரிய தொகையை சேமிக்க வேண்டும். குறிப்பாக, மாதம் தலா ரூ.5 ஆயிரம் என சேமிக்கலாம். தனியே காப்பீடு ஆகியவற்றிலும் கவனம் செலுத்துங்கள்.
முதலீடுகள்
குறுகிய கால தேவைகளுக்கு தனி முதலீடு, நீண்ட கால தேவைகளுக்கு தனி முதலீடு என பிரித்துபிரித்து முதலீடுகளை மேற்கொள்ளலாம். அதற்கு முதலில் உங்களுக்கான குறுகிய கால தேவைகள், நீண்ட கால திட்டங்களையும் வைத்திருக்க வேண்டும். நீண்ட கால சேமிப்பிற்கு பங்குச்சந்தைகள், மியூச்சுவல் ஃபண்ட், பொது வருங்கால வைப்புநிதி, நிலையான வைப்புத்தொகை ஆகியவற்றில் நீங்கள் இருவரும் சேர்ந்து மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம். மேலும், இருவரும் 60 வயதுக்கு முன்பே ஓய்வுபெற நினைத்தால் அதற்கேற்ப முதலீடுகளை மேற்கொள்ளலாம்.
கடன்கள்
ஒருவேளை உங்களுக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் இருக்கிறது என்றால், அதாவது கிரெடிட் கார்ட் பயன்பாடுகள், மாதந்தோறும் EMI போன்றவை இருக்கிறது என்றாலும் அதற்கும் இருவருமே சேர்ந்தே திட்டமிட வேண்டும். ஒருவருக்கு தெரியாமல் மற்றவர் கடன் வாங்கக்கூடாது. கடன் வாங்க வேண்டும் என்றால் இருவருமே சேர்ந்தே முடிவெடுக்க வேண்டும்.
அந்த வகையில், கணவன் - மனைவி ஆகியோரில் ஒருவர் பட்ஜெட் போட்டு மாத செலவுகளை பார்த்துக்கொண்டால் மற்றொருவர் முதலீடுகள் மற்றும சேமிப்பை பார்த்துக்கொள்ளுங்கள். இதுவே சிறந்த குடும்ப வாழ்வுக்கு அடிப்படையான ஒன்றாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ