7th Pay Commission: ஊழியர்கள் வரி சலுகை பெற செய்யவேண்டியவை!
10இ படிவமில்லாமல் பிரிவு 89-ன் கீழ் வரி சலுகை கேட்பவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு டிஏ நிலுவை தொகை, அகவிலைப்படி உயர்வு போன்றவற்றை வழங்கவிருக்கிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் 7-வது ஊதியக்குழுவின் அடிப்படியில் தான் சம்பளத்தை பெற்று வறுகின்றனர். ஊழியர்களுக்கு இன்னும் சில தினங்களில் அரசு பெரிய தொகையை சம்பளமாக வழங்கப்போவது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், ஒருபுறம் அவர்கள் செலுத்த வேண்டிய வரியின் அளவும் உயரும். ஆனால் மத்திய அரசு ஊழியர்கள் வரி சலுகைகளை பெற வருமான வரிச்சட்ட பிரிவு 89ன் கீழ் நிவாரணம் பெறலாம். சட்டப்பிரிவு 89(1)ன் படி, ஒருவர் சம்பளம் நிலுவையில் அல்லது முன்னரே அல்லது குடும்ப ஓய்வூதியத்தை பெறுவதற்கு வரி சலுகை கோரலாம். வரி சலுகையினை பெற ஊழியர்கள் இ-பைலிங் போரட்டலில் 10இ படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
அவ்வாறு 10இ படிவமில்லாமல் பிரிவு 89-ன் கீழ் வரி சலுகை கேட்பவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பும். ஆன்லைன் மூலமாக இ-பைலிங் போரட்டலில் 10இ படிவத்தை தாக்கல் செய்வது எப்படி என்பதை பார்ப்போம். இதனை செய்ய முதலில் http://www.incometax.gov.in என்கிற தளத்தில் லாக் இன் செய்யவும், பின்னர் அதிலுள்ள டாக்ஸ் எக்ஸம்ப்ஷன் அண்ட் ரிலீஃப்ஸ்/படிவம் 10இ என்பதை க்ளிக் செய்யவும். அடுத்ததாக மதிப்பீட்டு ஆண்டை க்ளிக் செய்து கன்டினியூ என்பதை க்ளிக் செய்யவும். 10இ படிவத்தில் 5 வகையான பாக்கிகளுக்கான இணைப்பு இருக்கும், அதில் இணைப்பு-1ஐ தேர்ந்தெடுக்க வேண்டும், அது முன்கூட்டியே சம்பளம் அல்லது நிலுவை தொகைக்கானது. பிரிவு 89ன் கீழ் படிவம் எவ்வளவு வரி சலுகை கிடைக்கும் என்பதை படிவம் 10இ கணக்கிடும். இப்போது நீங்கள் 10இ படிவத்தை தாக்கல் செய்ததும் பணத்தை பெறுவதற்கு வருமான வரி ரிட்டனை தாக்கல் செய்யவேண்டும்.
மேலும் படிக்க | கம்மியான விலையில் விமான டிக்கெட்கள் பெற இந்த நாட்களில் புக் செய்யுங்கள்!
அரசு ஊழியர்களுக்கு ஒரு ஆண்டில் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளிக்கும் வகையில் ஊழியர்களுக்கான நிலுவை தொகை, அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படியை உயர்த்துவதன் மூலம் அவர்களது மொத்த டிஏ 38% ஆக உயரும். அரசு ஊழியர்கள் 7-வது ஊதியக்குழுவின் கீழ் சம்பளத்தை பெற்றுவருகின்றனர், 8-வது ஊதியக்குழுவை பலரும் எதிர்பார்த்த நிலையில் 8-வது ஊதியக்குழு குறித்து அரசு எவ்வித பரிசீலனையும் செய்யவில்லை என்றும் 8-வது ஊதியக்குழு அமல்படுத்தப்படாது என்றும் அரசு தரப்பிலிருந்து திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | LIC Plan: ஒருமுறை முதலீடு செய்தால் போதும்! வாழ்நாள் முழுக்க ஓய்வூதியம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ