இலவச ரேஷன் விதிகள்: உங்களிடம் ரேஷன் கார்டு இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு கட்டாயம் பயன் தரும். கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுநோயின் போது ஏழைகளுக்கு இலவச ரேஷனை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இப்போது இந்த திட்டத்தை 2023 டிசம்பர் 31 வரை தொடர அரசாங்கம் கடந்த டிசம்பர் 2022 ஆம் ஆண்டு அறிவித்தது. இந்த திட்டத்திற்காக அரசாங்கம் பல லட்சம் கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தகுதியான நபர்களுக்கு ரேஷன் கார்டு உருவாக்கித் தருவதும், மேலும் மலிவான விலையில் ரேஷன் வழங்குவதும் தான். அந்தவகையில் கடந்த கோவிட் காலத்தில் இருந்து அரசாங்கத்திலிருந்து தகுதியான மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டு வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருவர் சில தவறுகளைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்
இந்த நிலையில் நீங்கள் இலவச ரேஷனைப் பயன்படுத்திக் கொண்டு இருந்தால், நீங்கள் சில தவறுகளைச் செய்வதை உடனடியாகத் தவிர்க்க வேண்டும். இந்த தவறுகளைச் செய்வதன் மூலம், நீங்கள் பெறும் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். அதனபடி இதில் முதலாவதாக நீங்கள் நோட் செய்ய வேண்டியது என்னவென்றால் உங்களிடம்  4 வீலர் வண்டி இருக்கக்கூடாது. அப்படி நீங்கள் 4 வீலர் கொண்டவராக இருந்தால் இலவச ரேஷனைப் பயன்படுத்தி கொள்ள முடியாது.


மேலும் படிக்க | Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட், அடிப்படை ஊதியத்தில் 17% ஏற்றம்


இலவச ரேஷனை பெற விதிமுறைகள்
இரண்டாவதாக, உங்களிடம் 100 சதுர மீட்டர் வீடு அல்லது உங்கள் வருமானத்திலிருந்து சம்பாதித்திருந்தால், நீங்கள் இலவச ரேஷனைப் பயன்படுத்த முடியாது. மூன்றாவதாக, நீங்கள் கிராமத்தில் வசிக்கிறீர்கள் மற்றும் உங்கள் வருமானம் ஆண்டுதோறும் 2 லட்சம் ரூபாய் இருந்தால் உங்களால் இலவச ரேஷன் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியாது. நகரத்தைப் பொறுத்தவரை, ஆண்டு வருமானம் ரூ .3 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கக்கூடாது. அதேபோல் கிராமத்தில் ஒரு டிராக்டரின் சொத்தக்காரர் மற்றும் ஆயுத உரிமம் கொண்டவர்களும் இலவச ரேஷனுக்கு தகுதியற்றவர்கள் ஆவார்கள்.


மேலும் படிக்க | Old Pension Scheme: அரசு நடவடிக்கை எடுக்குமா? சமீபத்திய அப்டேட் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ