கூட்டு வட்டியுடன் பணத்தை பெருக்க... SBI சர்வோத்தம் எப்டி திட்டம்!
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
SBI Sarvottam Fixed Deposit Scheme: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மூத்த குடிமக்களை மனதில் வைத்து எஸ்பிஐ வங்கி சிறந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பல வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு FD மீது 9 சதவீத வட்டியை வழங்குகின்றன. வாடிக்கையாளர்களை முதலீட்டிற்கு ஈர்ப்பதற்காக, எஸ்பிஐ சர்வோத்தம் திட்டத்தில் 7.90 சதவீத அதிக வட்டி விகிதத்தை எஸ்பிஐ வழங்குகிறது. இருப்பினும், நிறைவேற்ற வேண்டிய பல நிபந்தனைகள் உள்ளன.
SBI வழங்கும் சிறந்த FD திட்டம்
PPF, NSC மற்றும் தபால் அலுவலகத்தின் சேமிப்பு திட்டங்களை விட SBI இன் சிறந்த திட்டம் அதிக வட்டியை வழங்குகிறது. SBI வழங்கும் இந்த திட்டத்தின் மிகப் பெரிய நன்மை என்னவென்றால், இது ஒரு வருடம் மற்றும் 2 வருடத்திற்கான முதலீட்டு திட்டம் மட்டுமே. அதாவது, குறுகிய காலத்தில் பெரிய நிதியை திரட்ட முடியும். எஸ்பிஐ சர்வோத்தம் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 2 ஆண்டு டெபாசிட்டுக்கு 7.4 சதவீத வட்டியைப் பெறுகிறார்கள். இந்த FD வட்டி விகிதம் பொது மக்களுக்கானது. அதே நேரத்தில், மூத்த குடிமக்கள் (Retirment Plans) இந்தத் திட்டத்தில் 7.90 சதவீத வட்டியைப் பெறுகிறார்கள். அதே நேரத்தில், ஒரு ஆண்டு கால முதலீடுகளுக்கு பொது மக்கள் 7.10 சதவீத வட்டியும், மூத்த குடிமக்கள் 7.60 சதவீத வட்டியும் பெறுகின்றனர்.
கூட்டு வட்டியின் பலனைப் பெறும் வாடிக்கையாளர்கள்
மூத்த குடிமக்களுக்கான சிறந்த திட்டத்தில் 1 ஆண்டு வைப்புத்தொகை ரூ.15 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையிலான முதலீடுகளுக்கு ஆண்டு வட்டி வருமானம் 7.82 சதவீதம் ஆகும். அதேசமயம், இரண்டு வருட டெபாசிட்டுகளுக்கான வருமானம் 8.14 சதவீதம். ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான மொத்த டெபாசிட்டுகளுக்கு, மூத்த குடிமக்களுக்கு 1 வருடத்திற்கு 7.77 சதவீதமும், 2 ஆண்டுகளுக்கு 7.61 சதவீதமும் வட்டியும் கிடைக்கும். இத்திட்டத்தில் கூட்டு வட்டி கிடைக்கும் என்பதே இதன் முக்கிய சிறப்பு அம்சம் ஆகும்.
மேலும் படிக்க | ஓய்வுக்குப் பிறகு டென்ஷன் இல்லாம இருக்கணுமா... ‘இவற்றில்’ முதலீடு செய்யுங்க!
முதலீடு செய்யப்படும் தொகை
எஸ்பிஐ சர்வோத்தம் திட்டத்தில், வாடிக்கையாளர் குறைந்தபட்சம் ரூ.15 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை முதலீடு செய்யலாம். ஓய்வு பெற்றவர்களுக்கும், பிஎஃப் நிதியில் பணம் வைத்திருப்பவர்களுக்கும் இந்தத் திட்டம் சிறந்தது. எஸ்பிஐயின் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து கூட்டு வட்டியின் பலனை பெறலாம். 2 கோடிக்கு மேல் முதலீடு செய்ய ஆப்ஷன் உள்ளது. ஆனால் வட்டி 0.05 சதவீதம் குறைவாக கிடைக்கும். இருப்பினும், இந்தத் திட்டத்தில் எப்போது பணத்தை முதலீடு செய்யலாம் என்பது குறித்து இணையதளத்தில் எந்தத் தகவலும் இல்லை.
முதிர்வுக்கு முன் பணத்தை எடுக்க முடியாது
எஸ்பிஐ சர்வோத்தம் திட்டத்தில் நீங்கள் முதிர்வு காலத்திற்கு முன் பணத்தை எடுக்க முடியாது. முதர்வு காலத்திற்கு முன் பணத்தை எடுத்தால், குறிப்பிட்ட அளவு அபராத கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | முதுமையில் ஏற்படும் மருத்துவ செலவுகளை சமாளிக்க... சில டிப்ஸ் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ