இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட், வெறும் 500 ரூபாய்க்கு எல்பிஜி கேஸ் சிலிண்டர்..எப்படி பெறுவது
Subsidy on Gas Cylinder: முதலமைச்சரின் கேஸ் சிலிண்டர் திட்டத்தின் கீழ், ராஜஸ்தான் மாநிலத்தின் 76 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.500க்கு கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
கேஸ் சிலிண்டருக்கு மானியம்: நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தால் பொதுமக்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர். இந்நிலையில், ராஜஸ்தான் அரசு, அம்மாநில மக்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உண்மையில், வீட்டில் உபயோகம் செய்யப்படும் கேஸ் சிலிண்டர் அதாவது எல்பிஜி கேஸ் சிலிண்டருக்கு அரசாங்கத்தால் தற்போது மானியம் வழங்கப்படுகிறது. செய்தி நிறுவனமான PTI இன் அறிக்கையின்படி, முதலமைச்சரின் கேஸ் சிலிண்டர் திட்டத்தின் கீழ் எல்பிஜி சிலிண்டர்களுக்கு மானியம் வழங்க அரசாங்கம் 750 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முக்கிய உத்தரவை 2023-24 நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட்டில் அசோக் கெலாட் அறிவித்து இருந்தார். வாருங்கள் இதன் முழு விவரத்தை இப்போது அறிவோம்.
73 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்
இந்த நிலையில் ராஜஸ்தான் அரசு ஏழை மக்களுக்காக புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி விலையுயர்ந்த விலையில் சிலிண்டர்களை வாங்க முடியாதவர்களுக்கு இத்திட்டத்தின் பலன் பெற முடியும். எனவே பிபிஎல் குடும்பங்களுக்கு ரூ.500க்கு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன், ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியமும் வழங்கப்படுகிறது. மேலும் மாநிலத்தின் சுமார் 73 லட்சம் குடும்பங்களுக்கு இந்த திட்டத்தின் பலன் வழங்கப்படும்.
இவர்களுக்கு பலன் கிடைக்கும்
நீங்கள் பிபிஎல் அல்லது உஜ்வாலா யோஜனாவின் கீழ் ராஜஸ்தான் மாநிலத்தில் வசிப்பவராக இருந்தால், நீங்கள் மாதம் ரூ.500க்கு கேஸ் சிலிண்டரைப் பெறலாம், ஆனால் இதற்கு உங்கள் வங்கிக் கணக்கை ஜன் ஆதாருடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்த, மத்திய பெட்ரோலிய அமைச்சகத்திடம் இருந்து பிபிஎல் மற்றும் உஜ்வாலா யோஜனா பட்டியலை ராஜஸ்தான் அரசு கோரியுள்ளது. தரவு கிடைத்ததும், இதற்கான செயலாக்கம் தொடங்கப்படும். இதனிடையே இந்த திட்டம் ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மானியம் வங்கிக் கணக்கில் வரும்
இத்திட்டத்தின் கீழ், கேஸ் இணைப்புதாரர்களின் வங்கிக் கணக்கில் மானியத் தொகை நேரடியாக மாற்றப்படும். இதற்கு கேஸ் இணைப்புதாரர்கள் தங்களது ஜன் ஆதார் அட்டையை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ், மீதமுள்ள மானியம் ரூ.610 பயனாளியின் கணக்கிற்கு அனுப்பப்படும். அதே நேரத்தில், உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகளின் கணக்கில் 410 ரூபாய் மானியமாக அனுப்பப்படும். மானியத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக மாற்றப்படும். இதன் மூலம், இத்திட்டத்தின் கீழ், ஏழை குடும்பங்களுக்கு குறைந்த விலையில் கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.
மேலும் படிக்க | பெண்களுக்கு ஜாக்பாட்! மோடி அரசின் புதிய அசத்தல் திட்டம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ