உலகநாடுகள் மத்தியில் கொரோனா வைரஸின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் உள்நாட்டு விமான நிறுவனமான Go Air செவ்வாய்க்கிழமை முதல் தனது சர்வதேச விமானத்தை ரத்து செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேவேளையில் Go Air விமானங்களின் சேவை குறைந்து வருவதால், நிறுவனம் தனது ஊழியர்களை ஊதியமின்றி விடுப்பில் அனுப்புவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்லது, ஊழியர்களின் சம்பளத்தை தவணைகளில் 20% குறைக்கவும் நிறுவனம் யோசித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சில ஊழியர்களின் ஒப்பந்தங்கள் முறிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.


பல அரசாங்கங்கள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், கொரோனா வைரஸ் நெருக்கடியால் விமானத் துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்று Go Air ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலகின் பல நாடுகளின் அரசாங்கம் பயணத்தை ஒத்திவைக்க அல்லது குறைக்க மக்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. கொரோனாவின் தொற்று விகிதம் காரணமாக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் பயணத்தை மட்டுப்படுத்தியுள்ளன. "சிறப்பு நிகழ்வு தேதிகளும் நீட்டிக்கப்படுகின்றன" என்று Go Air மேலும் குறிப்பிட்டுள்ளது.


விமானப் போக்குவரத்தில் தற்போது நிலவும் பெரும் வீழ்ச்சி இதற்கு முன்னர் கண்டதில்லை என்று Go Air  தனது அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, Go Air தனது அனைத்து சர்வதேச விமானங்களையும் 2020 மார்ச் 17 முதல் ஏப்ரல் 15 வரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. 


Go Air விமான நிறுவனம் மொத்தம் 35 நகரங்களுக்கு இடையே செயல்படுகிறது, இதில் எட்டு வெளிநாட்டு இடங்களில் என்பது குறிப்பிடத்தக்கது.